scorecardresearch

Vijay TV Serial: ஐபிஎஸ் அதிகாரி ஆன சந்தியா; சல்யூட் அடித்த கணவன்! ஆனால்?

Raja Rani 2 Serial: சந்தியா ஐபிஎஸ் அதிகாரி போலீஸ் யூனிஃபார்மில், காரில் இருந்து ஸ்டைலாக இறங்குகிறாள். இறங்கி நேராக கடைக்கு வருகிறாள். தனது மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வருவதைப் பார்த்து, சரவணன் சல்யூட் அடிக்கிறான்.

Vijay TV Serial: ஐபிஎஸ் அதிகாரி ஆன சந்தியா; சல்யூட் அடித்த கணவன்! ஆனால்?

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தினமும் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், அர்ச்சனாவின் தங்கையை பெண் பார்க்க வந்துவிட்டு நாத்தனார் பார்வதி மேல் ஆசைப்பட்டு சுற்றும் பாஸ்கர், இனிமேல் பார்வதிக்கு தொந்தரவு தராமல் இருக்க வேண்டும் என்பதற்காக பார்வதியும் அர்ச்சனாவும் போட்ட திட்டப்படி அர்ச்சனா பாஸ்கரை வரச் சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருக்கிறாள். அதற்கு முன்பு, பார்வதியை சரியான நேரத்துக்கு புறப்பட்டுவிட்டாயா என்று போனில் கேட்கிறாள். அப்போது, பாஸ்கர் அங்கே வருகிறான்.
அர்ச்சனா அவனிடம் என் தங்கச்சியை பொண்ணு பார்க்க வந்துட்டு பார்வதி பின்னால சுத்துறயே உனக்கு என்ன தைரியம்? வீட்டுக்கு வேற போன் பண்ணி தொந்தரவு பண்ற, எங்க அத்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? உங்க வீட்டுக்கு வந்திருந்தா உங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிட்டு இருக்கும் என்று கூறுகிறாள். அதற்கு பாஸ்கர், எனக்கு நிஜமாவே பார்வதியை புடிச்சிருக்குங்க… எங்க வீட்ல இருந்து வந்து பொண்ணு கேட்கிறேங்க… ப்ளீஸ் நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க என்று கூறுகிறான். அதற்கு அர்ச்சனா, அடப்பாவி, என் தங்கச்சிய விட்டுவிட்டு பார்வதியை புடிச்சிருக்குனு சொல்லிட்டு எங்கிட்டயே ஹெல்ப் கேட்கிற என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

அதற்கு அர்ச்சனா, அது முடியாது ஏன்னா பார்வதி ஏற்கெனவே ஒரு பையனை லவ் பண்றா என்று சொல்கிறாள். ஆனால், பாஸ்கர் அதை நம்ப மறுக்கிறான். உனக்கு சந்தேகம்னா இப்போ கொஞ்சம் நேரத்துல நீயே அவங்களைப் பாரு என்று கூறுகிறாள். அப்போது, பார்வதி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் பையனை அவனுடைய கையைப் பிடித்துகொண்டு வருகிறாள். அவனோ அக்கா என்னக்கா சொல்லு என்று கேட்கிறான். அதற்கு பார்வதி டேய் நான் சொல்றவரைக்கும் அக்கானு சொல்லாத அமைதியா சிரிச்சி பேசிகிட்டு வா என்று கூறுகிறாள். அவனும் சரி என்று சொல்லிவிட்டு வருகிறான். இருவரும் அங்கே இருக்கிற ஜூஸ் கடைக்கு போய் ஜூஸ் வாங்கி குடிக்கிறார்கள்.

அர்ச்சனா அவர்களைக் காட்டி அங்கே பாரு இரண்டு பேரும் ஜூஸ் குடிக்கிறாங்க. அந்த பையனைத் தான் பார்வதி லவ் பண்றா என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ஷாக் ஆகும் பாஸ்கர் நம்ப முடியாமல், நான் பார்வதியிடமே கேட்கிறேன் என்று அருகே சென்று பார்வதியிடம் இது யாருங்க என்று கேட்கிறாள். அதற்கு அவள் இது என் பாய் ஃபிரண்ட் என்று கூறுகிறாள். பாஸ்கர் அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பிச் செல்கிறான். அப்பாடா ஒரு பிரச்னை முடிந்தது என்று அர்ச்சனா நிம்மதி அடைகிறாள்.

அடுத்த காட்சியில், சிவகாமி ஸ்வீட் கடையில் சிறுவன் சர்க்கரை இங்லீஷ் புத்தகத்தை படிக்க கற்றுக்கொண்டிருக்கிறான். புரியாததால் சலிப்படைகிறான். சரவணன், எங்கேயோ வெளியே சென்றிருக்கிறான். அப்போது கடைக்கு செல்லும் சந்தியா, இங்லீஷ் கற்றுக்கொள்வது பற்றியும் அவனுக்கு உதவுவதாகவும் கூறுகிறாள். அவனும் உற்சாகமடைகிறான். கடையில், குடும்ப போட்டோவைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். போஅப்போது, உணவுக் கட்டுப்பாட்டு துறையில் இருந்து பரிசோதனை செய்வதற்கு ஸ்வீட் கடைக்கு வருகிறார்கள் என்று கடிதம் வருகிறது. அதைப் பற்றி சர்க்கரையிடம் கூறுகிறாள்.

சற்று நேரத்திலேயே, வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். சந்தியா பிரமாதமாக வியாபாரம் செய்கிறார்கள். நிறைய பேர் ஸ்வீட் வாங்க வருகிறார்கள். அப்போது, பக்கத்து கடையில் இருந்து ஒரு பெண் வருகிறார். அவர் வந்து சந்தியாவிடம் பேச்சு கொடுக்கிறார். இப்படி கடையில ஒரு பொண்ணு வந்து உட்கார்ந்தாதான் கடைக்கு ஒரு கலையே வருது. அப்பப்போ நீ வந்து போனாதானேம்மா முதலாளி அம்மானு தெரியும் என்று கூறுகிறார். அதற்கு, சந்தியா அய்யய்யோ நான் முதலாளி அம்மா இல்லை. எங்க அத்தைதான் என்னைக்கும் முதலாளி அம்மா என்று கூறுகிறாள்.

அப்போது, கடையின் முன்பு ஒரு கலெக்டர் கார் வந்து நிற்கிறது. அதில் இருந்து ஒரு பெண் இறங்குகிறார். கடைக்கு வந்திருந்த பக்கத்துக் கடை பெண், அந்த காரை சுட்டிக்காட்டி, அவங்க யாரு தெரியுமா? கலெக்டர் மனைவி. அவங்க கார்லதான் வருவாங்க. இங்க இருக்கிற எல்லா கடைக்கும் வந்து பொருள் வாங்குவாங்க. கணவர் ஒரு சாதனை செய்தால் அது பொண்டாட்டிக்கு பெருமை. அதே போல, பொண்டாட்டி ஒரு சாதனை செய்தால் அது புருஷனுக்கு பெருமை. நான் சொல்வது உண்மைதானே என்று கூறுகிறார். கலெக்டர் மனைவியைப் பார்த்து சந்தியா, தானும் படித்து ஐபிஎஸ் ஆனால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறாள்.

சந்தியா ஐபிஎஸ் அதிகாரி போலீஸ் யூனிஃபார்மில், காரில் இருந்து ஸ்டைலாக இறங்குகிறாள். இறங்கி நேராக கடைக்கு வருகிறாள். தனது மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வருவதைப் பார்த்து, சரவணன் சல்யூட் அடிக்கிறான். அதற்குள், கலெக்டர் மனைவியுடன் வந்தவர் ஏம்மா உன்னதான் கேட்கிறேன். எவ்வளவு ஆச்சுமா என்று கேட்கிறான். அப்போதுதான் யோசனை கலைந்து, கனவுலகத்தில் இருந்து சந்தியா யதார்த்ததுக்கு வருகிறாள். சர்க்கரை அவருக்கு ஸ்வீட் பார்சலைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்கிறான்.

அடுத்த காட்சியில், சரவணன், ஸ்வீட் ஆர்டர் தருவதாக சொல்லியிருந்த ஒரு வீட்டுக்கு செல்கிறான். அங்கே இருக்கும் பெரியவர் சரவணனை விசாரித்துவிட்டு எங்கள் வீட்டில் ஒரு ஃபங்ஷன் நிறைய ஸ்வீட் வேணும் சரியான நேரத்தில் கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு சரவணனும் சரியான நேரத்தில் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். சாம்பிளுக்கு கையில் எடுத்து சென்றிருந்த ஸ்வீட் பார்சலைத் தருகிறான். அவர்களும் ஸ்வீட் பிரமாதமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என்ன ஃபங்ஷன் என்று பேசும்போது, வீட்டுப் பெரியவர், எங்க பொண்ணு ஐபிஎஸ் ஆகியிருக்கா அவளுக்கு பாராட்டு விழா நடத்ததான் இந்த ஃபங்ஷன். நிறைய பேர் வருவாங்க அதனால் நிறைய ஸ்வீட் வேணும் என்று கூறுகிறார்.

இதைக்கேட்ட சரவணன், அங்கே சுவரில் போலீஸ் யூனிஃபார்மில் இருக்கும் போட்டோவைக் காட்டி இதுதான் உங்க மகளா? பரவாயில்லையே, நம்ம ஊர்லயும் பொம்பளப் பிள்ளையை படிக்க வச்சு ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி ஆக்கியிருக்கீங்க என்று கூறுகிறான். அதற்கு பெரியவர், இதில என்னப்பா இருக்கு. ஆம்பள என்ன பொம்பள என்ன, திறமை இருந்தா யார் வேண்டுமானாலும் படித்து ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி ஆகலாம் என்று கூறுகிறார். பிறகு, அவர் ஃபங்ஷனுக்கு ஒரு நாள் முன்னாடியே ஸ்வீட் எல்லாம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறுகிறார். நிறைய ஸ்வீட் வேணும் நீங்க ஒருத்தர் எப்படி செய்வீங்க என்று கேட்கிறார்.

அதற்கு சரவணன், இல்லை, வீட்ல இருக்கிறவங்க உதவி பண்ணுவாங்க.. நீங்க சொல்ற அன்னைக்கு கொடுத்துடறேன் என்று கூறுகிறான். இதையடுத்து, வீட்டு பெரியவர் தனது மனைவியிடம் அட்வான்ஸ் கொடுக்க பணம் எடுத்து வரச் சொல்லி அட்வான்ஸ் பணம் தருகிறார். பிறகு, அங்கிருந்த புறப்பட்டு வெளியே வருகிறான். வெளியே வரும்போது, தனது மனைவி சந்தியாவும் படித்து ஐபிஎஸ் ஆனால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறான். சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக போலீஸ் யூனிஃபார்மில் காரில் இருந்து இறங்கி வருகிறாள். மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்கிறான். பிறகு சரவணன் அங்கிருந்து புறப்படுகிறான்.

அடுத்த காட்சி, வீட்டில் சந்தியா ஸ்வீட் பாக்ஸ் அட்டைகளை மடித்டு பாக்ஸ்களாக உருவாக்கிக் கொண்டிருகிறாள். சரவணனிடம் கோபத்தைக் காட்டியதால் அவன் சாப்பிடவே இல்லை என்பதை அறிந்து வருத்தப்படுகிறாள். என்ன பிரச்னைங்க சொல்லுங்க நான் சரி பண்ண முயற்சி பண்றேன். உங்க கூட நான் நிற்கிறேன். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று அவன் கூறியதை நினைத்துப் பார்கிறாள். எல்லோர் முன்னாடியும் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அத்தை மாமாவிடம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லியதற்காக அவங்ககிட்ட நேரடியாக கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு சரவணன்கிட்ட கோபமா பேசிட்டோம். அப்படி பேசியிருக்க கூடாது. நான் உங்ககிட்ட இப்போ எதுவும் விவரமாக பேசக்கூடிய நிலைமையில் நான் இல்லை. சரவணன், வந்தா மன்னிப்பு கேட்கனும் என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani 2 serial today episode sandhya became ips police officer her husband saravanan salutes but it dreams