Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், ஊருக்கு போயிருக்கும் சரவணன், தனது மனைவி சந்தியா நினைப்பிலேயே வீட்டுக்கு வருகிறான். அதனால், பாட்ஷாவில் நக்மாவுக்கு பார்க்கும் மனிதரெல்லாம் மாணிக்கம் (ரஜினி) போல தோன்றும் பாட்ஷா ஸ்டைலில் ரொமான்ஸ் செய்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் கடந்த வாரம் எபிசோடில், அர்ச்சனா தனது நாத்தனார் பார்வதியின் கல்யாணத்தை தடுப்பதற்காக பார்வதியை அசிங்கப்படுத்த விக்கியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டுகிறாள். அதை சந்தியா முறியடிக்கிறாள். அதற்கு பிறகு, பார்வதியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பி விக்கி அவளை தனியாக வரச் சொல்கிறான். சந்தியா ஒரு மாஸ்டர் பிளான் போட்டு அவனுடைய போனில் இருந்த எல்லா புகைப்படங்களையும் அழிக்கிறாள். அதோடு, விக்கியின் வீட்டுக்கு அவனுடைய அப்பா கருணாகரன் முன்னிலையிலேயே ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்து அதையும் உடைத்து எறிகிறாள். பிறகு, பார்வதியை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறாள்.
ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில், கோயிலுக்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற சந்தியாவும் பார்வதியும் இன்னும் வரவில்லையே என்று வீட்டு கூடத்தில் சிவகாமி காத்துக்கொண்டிருக்கிறார். மயில் வந்து என்ன என்று கேட்கும்போது, சந்தியாவும் பார்வதியும் இன்னும் வராதது பற்றி சொல்கிறார். அப்போது, அங்கே வரும் அர்ச்சனா, வரவர இந்த சந்தியாவோட சேர்ந்துகொண்டுட் இந்த பார்வதியும் அவளை மாதிரியே ஆகிட்டு வராள். இதைக் கேட்டு, கோபமடையும் சிவகாமி, அர்ச்சனா, உனக்கு அடுத்தவங்களைப் பத்தி குறை சொல்லலனா உனக்கு தூக்கமே வராதே என்று கண்டிக்கிறார். பிறகு, உன் வேலையை எல்லாம் முடித்துவிட்டாயா என்று சிவகாமி கேட்டதற்கு அர்ச்சனா முடித்துவிட்டேன் என்று சொல்கிறாள். அதற்கு சிவகாமி வேலையை எல்லாம் முடித்துவிட்டால், அதற்காக அடுத்தவங்களைப் பற்றி கோள்மூட்டணும்னு எந்த அவசியமும் இல்லை, புரிஞ்சுதா, சும்மா இரு என்று அர்ச்சனாவின் வாயை அடைக்கிறார்.
இதைக்கேட்ட அர்ச்சனா, அதானே அந்த சந்தியாவைப் பற்றி பேசிட்டாலே உங்களால தாங்க முடியாதே, இந்த சந்தியா மாமியார் ஸ்பெஷல் சொக்குபொடியை எங்கேதான் வாங்கினாலோ என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
அதற்கு சந்தியாவும் பார்வதியும் வீட்டுக்குள் வருகிறார்கள். அப்போது, சிவகாமி, ரெண்டு பேரும் கோயிலுக்கு போறன்னு சொல்லிட்டுதான போனீங்க என்று கேள்வி கேட்கிறார். இதைக் கேட்ட அர்ச்சனா, இதோ இங்க இருக்கிற கோயிலுக்கு போறதுக்கு இவ்வளவு நேரமா என்று கேள்வியை எடுத்துக்கொடுக்கிறாள். உடனே பார்வதி நாங்கள் கடைக்கு எல்லாம் போய்விட்டு வருவொம்னுதானே சொல்லிட்டு போனோம். என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி கடைக்கு போய் என்ன வாங்குனீங்க, காட்டுங்க என்று கேட்கிறார். இதனால், சந்தியாவும் பார்வதியும் என்ன சொல்வது என்று முழிக்கிறார்கள். அதற்கு சந்தியா கடைக்கு போனோம் எதுவுமே வாங்கவில்லை என்று கூறுகிறாள். அதற்கு, அர்ச்சனா, ஒன்னும் வாங்காம வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்கிறாள்.
உடனடியாக, பார்வதி கோபமாக என்னம்மா வரவர இந்த வீட்ல குறுக்கு விசாரணை அதிகமாகிட்டே போகுது, நான் யூஸ் பண்ற பிராண்ட் எங்கேயுமே இல்லைம்மா. 4-5 கடைக்கு போய் பார்த்தோம், லாக்டவுன் போட்டதால நிறைய பொருள் வாங்கி வைக்கலயாம், நாளைக்குதான், வருமாம் அதான் அப்புறம் வாங்கிக்கலாம்னு வந்துட்டோம் என்று கூறி சமாளிக்கிறாள்.
ஆனாலும் விடாதா சிவகாமி, சரி ரெண்டு பேரும் கோயிலுக்கு போனீங்கனு சொன்னீங்க, நெத்தியில திருநீர், குங்குமம் எதுவுமே இல்லை. கையிலயும் எதையும் கொண்டுவரல என்று கேட்கிறார். இப்போதும் அர்ச்சனா, ஒரு அர்ச்சனை தட்டை வாங்காமல்கூடவா கோயிலுக்கு போய்விட்டு வந்திங்க என்று சிவகாமிக்கு கேள்வியை எடுத்துக்கொடுக்கிறாள். சந்தியா, சாமர்த்தியமாக, அர்ச்சனை தட்டு வாங்கினோம், வாங்கின இடத்திலேயே கொடுத்துட்டோம், அங்க ஒரு வயசான அம்மா பாவம் பசிக்குதுனு கேட்டாங்க, இந்த பழம் தேங்காய் எல்லாத்தையும் அவங்ககிட்டயே கொடுத்துட்டு வந்துட்டோம், புண்ணியம்தானே அத்தை என்று கூறி சமாளிக்கிறாள். சிவகாமியும் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், அர்ச்சனா, இல்லையே இதுக ரெண்டும் உண்மையை சொல்ற மாதிரியே தெரியலையே, உங்க ரெண்டு பேரையும் அத்தை வேணும்ணா நம்புவாங்க, ஆனால், நான் நம்பவே மாட்டேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.
பின்னர், சிவகாமி, சந்தியவிடம் ஒரு சீட்டு கொடுத்து இந்த லிஸ்ட்ல இருப்பதையெல்லாம் சரவணனால் செய்துகொடுக்க முடியுமா என்று கேள் என்று கேட்கிறார். சந்தியாவும் சரி என்று சொல்லிவிட்டு அதை வாங்கிக்கொண்டு செல்கிறாள்.
அடுத்த காட்சியில், இரவு நேரத்தில், பார்வதி மொட்டை மாடியில் இருக்கிறாள். அங்கே சந்தியா வந்ததும் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறாள். விக்கி ஏமாற்றியதை சொல்லி தான் அறியாமல் செய்துவிட்டேன் என்று கூறுகிறாள். நீங்கள் இல்லாவிட்டால் இந்த குடும்பத்துடைய மானம் என்னுடைய வாழ்க்கை என்னவாயிருக்கும் என்று தன்னை காப்பாற்றியதற்காக சந்தியாவுக்கு நன்றி கூறுகிறாள். ஆனால், சந்தியா நன்றி எல்லாம் சொல்லாதே, உங்க அண்ணன் செய்திருந்தால், நன்றி சொல்வயா, அதே போலதான் நான் செய்தாலும் நன்றி சொல்லக்கூடாது என்று கூறுகிறாள்.
நான் யாரைப் பத்தியும் யோசிக்காம விக்கி மாதிரி ஒருத்தனை நம்பி இருக்கேனே, நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன் என்று தன்னையே நொந்துகொள்ளும்படி பார்வதி பேசுகிறாள். இதற்கு சந்தியா, மனுஷங்கனா தப்பு பண்றது சகஜம்தான். அதிலயும் நீ சின்னப் பொண்ணு, உன் வயசும் அப்படி, ஆனால், தப்புனு புரிஞ்ச அந்த செகண்ட்ல, நான் இதை செய்யமாட்டன்னு உறுதியா நின்ன பார்த்தயா, அவன் வேண்டாம்னு தூக்கி எரிஞ்ச பார்த்தயா, அந்த குணம்தான் ரொம்ப முக்கியம், எனக்கு நீ அப்படி நடந்துகிட்டது ரொம்ப பெருமையா சந்தோஷமாதான் இருந்தது.
தொடர்ந்து பேசும் பார்வதி, அண்ணி நான் உங்களை அம்மாகிட்ட நிறைய முறை போட்டுகொடுத்திருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் மனசில் வைத்துக்கொள்ளாமல், அண்ணன் இல்லாத நேரத்தில் தனியா வந்து எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறீர்கள், நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் என்று கூறி சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். இதற்கு சந்தியா, முதலில் நன்றி சொன்ன, இப்போது மன்னிப்பு கேட்கிறியா அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள்.
பார்வதி, “அர்ச்சனா, அண்ணிக்கு நான் நிறைய விஷயத்துல சப்போர்ட் பண்ணி இருக்கேன். அவங்க தப்பு பண்ணாலும் அம்மாகிட்ட சொல்லாமல் மறைச்சிருக்கேன். என்னை இப்படி மாட்டிவிட பார்த்தாங்க, நீங்க எப்படி இப்படி நடந்துகிட்டிங்க” என்று சந்தியாவிடம் கேட்கிறாள்.
அதற்கு சந்தியா, “நீ புரிந்துகொண்டது போல, அவளும் ஒரு நாள் புரிஞ்சுக்குவா பார்வதி, அவளுக்கு வாழ்க்கையைப் பற்றி ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டுவிடக் கூடாது. காசு பணம் நிறைய சேர்த்துவச்சுக்கணும்னு அவள் நினைக்கிறாள். ஆனால், உறவுகளோட, சேர்ந்து இருக்கிறது எவ்வளவு பெரிய பலம்னு அவளுக்கு இன்னும் புரியல” என்று கூறுகிறாள்.
அதற்கு பார்வதி, அப்போ உங்களுக்கு பணமே வேண்டாம்னு சொல்றீங்களா அண்ணி, உங்களுக்கு அந்த மாதிரி சேர்த்துவைக்க ஆசை இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, பணம் இல்லைனா, வாழவே முடியாதுனு எனக்கு பயம் இல்லை பார்வதி, பணத்தை எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சுக்க முடியும், எங்கிட்ட படிப்பு இருக்குது. ஒரு நம்பிக்கை இருக்குது. அதனால்தான் உங்கிட்டயும் படிப்பை விட்டுடாதனு சொல்லிக்கிட்டே இருக்கேன் என்று கூறுகிறாள்.
பார்வதி, அண்ணன் கிட்ட சொல்லிட்டீங்களா, பேசிட்டிங்களா என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, இன்னும் பேசவில்லை. பேசினாலும் இப்ப சொல்ல வேண்டாம்னு இருக்கேன். பாவம் அவர் அங்க என்ன வேலையில் என்ன டென்ஷன்ல இருக்கிறாரோ, இங்கதான் பிரச்னை முடிஞ்சு போச்சு இல்லை. அதான் அவர் வந்தது பிறகு சொல்லிக்கலாம்னு தோணுது.” என்று கூறுகிறாள்.
பார்வதி அண்ணன் தன்னைப் பற்றி தப்பா நினைக்கலயா என்று கேட்டதற்கு, உங்க அண்ணன் உன் மீது ரொம்ப பாசமாக இருப்பதைக் கூறுகிறாள். நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு நிம்மதியாக இரு. எப்பவும் உறுதியாக நம்பிக்கையுடன் இரு என்று சொல்கிறாள். பார்வதியும் ரூமுக்கு செல்வதாகக் கூறிவிட்டு செல்கிறாள்.
வீட்டு கூடத்தில் சிவகாமி, பார்வதி, மயிலை உட்காரவைத்துக்கொண்டு அந்தக் காலத்தில் கல்யாணம் காட்சி என்றால் சொந்தக்காரங்க எல்லோரும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துடுவாங்க, ஆளுக்கொரு வேலைணு பிரிச்சு செய்வாங்க, ஆனால், இப்போது, கல்யாண நேரத்துக்கு வந்துடுறாங்க, அவங்களை வாங்க வாங்கணு கூப்பிடுறதுக்கு ஏதோ பொம்மை எல்லாம் கும்பிடு போடுற மாதிரி நிக்க வைக்கிறாங்க என்று கூறுகிறார்.
அப்போது, அங்கே வரும் சந்தியா, சாப்பாடு எடுத்து வச்சாச்சு வாங்க சாப்பிடலாம் என்று கூறுகிறாள். ஆனால், சிவகாமி, உங்க மாமாவும் செந்திலும் வரட்டும் என்று சொல்கிறார்.
அப்போது, பார்வதி, ஆதி எங்கே என்று கேட்கிறாள். அதைக் கேட்டு சிவகாமி அவன் வீட்ல இருந்தால் எலியும் பூனையும் மாதிரி சண்டை போடவா என்று கேட்கிறார். இதைக்கேட்ட அர்ச்சனா, ராத்திரியில் எல்லாமா பேங்க் வேலை இருக்கும் என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, இல்லை, அவங்க ஆஃபீஸ்ல ஏதோ ஃபங்ஷனாம், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போயிருக்கிறான் என்று கூறுகிறாள்.
இதைக்கேட்ட சிவகாமி, ஆதியும் இல்லை, சரவணனும் இல்லை, உங்கமாமாவும் செந்திலும் கடைக்கு போயிட்டாங்க, வீடே வெரிச்னு இருக்குது. நல்லாவே இல்லை. சரவணன் எப்பதான் வருவானோன்னு இருக்கு என்று கூறுகிறார்.
அப்போது வீட்டுக்குள் நுழையும் சுந்தரம், நாளைக்கு வந்துடுவானாம் சிவகாமி, வேலை முடிஞ்சுடுச்சாம் என்று கூறுகிறார். அது சரி இங்க எதுனா மகளிர் மாநாடு நடக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு வீட்டில் ஆம்பளைங்க வேற யாரும் இல்லை இல்லையா. அதான் வேற என்ன செய்றது என்று சிவகாமி கேட்கிறார். மயில், உங்க கல்யாணம் கதை எல்லாம் அம்மா சொன்னாங்க என்று சொல்கிறார்.
சுந்தரம், “கல்யாணம் என்றதும்தான் ஞாபகம் வருது. மாப்பிள்ளை வீட்ல இருந்து நாளை மறுநாள் சம்மந்தம் பேச வர்றாங்களாம்” என்று கேட்கிறார்.
சிவகாமியும் சந்தியாவும் நாளை மறுநாளா எப்படி எல்லா வேலையையும் செய்றது என்று கேட்கிறார்கள். அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள். பார்வதி சந்தோஷப்படுகிறாள்.
சுந்தரம், “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, சரவணன் கிட்ட பேசி இருப்பாங்க போல, அவன் நாளைக்கு வர்றேன்னு சொன்னதால, அவங்க நாளை தள்ளிப்போடக்கூடாதுனு பார்க்கிறாங்க போல இருக்குது” என்று கூறுகிறார்.
இதைகேட்ட சிவகாமி, “நேரமே இல்லை. அவங்க போன் பண்ணி சொன்னதும் நீங்க எனக்கு போன் பண்ணி சொல்லனுமா இல்லையா” என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம் கடையில் பிஸியாக இருந்துவிட்டேன். அதான் போன் பண்ண முடியல என்று கூறுகிறார்.
அப்போது அங்கே வரும் செந்தில், அர்ச்சனாவின் முகத்தைப் பார்க்க புடிக்காமல், அம்மா சிவகாமியிடம் என்ன விஷயம் என்று கேட்கிறான். அதற்கு சிவகாமி நாளை மறுநாள் மாப்பிள்ளை வீட்ல இருந்து நிச்சயதார்த்தம் பண்ண வர்றாங்களாம் என்று கூறுகிறார். அதற்கு செந்தில், நம்ம சரவணன் இல்லாமல் எப்படி என்று கேட்கிறான். அதற்கு சந்தியா நாளைக்கு வருகிறார் என்று கூறுகிறாள்.
அதற்கு செந்தில், பிறகு என்ன, நானும் நாளையில் இருந்து கடையை ஒரு வாரத்துக்கு திறக்கல, சேர்ந்து பார்த்துக்கலாம்மா, கவலைப்படாதீங்க என்று கூறுகிறான். சந்தியாவும், “வெளியில் இருக்கிற ஏற்பாடு எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, வீட்ல இருக்கிற வேலையை எல்லாம் நாம பார்த்துகலாம்” என்று தைரியம் கூறுகிறாள். சிவகாமியும் சரி என்று கூறுகிறார். எல்லோரும் சாப்பிட போகலாம் என்று கூறுகிறார்.
சரவணன் ஊரில் இருந்து வந்து வீட்டுக்கு போக ஆட்டோவை கூப்பிடுகிறான் ஆட்டோ டிரைவர், யார் என்று பார்த்தால் சந்தியா, என்னா, ஹலோ எங்க சார் போகணும் என்று கேட்கிறாள். சரவணன் சில நொடிகள் திகைத்துப் போகிறான். அடுத்த நொடியே, ஆட்டோக்காரர் உங்களைத்தான் கேட்கிறேன் என்று கேட்க, சரவணன் உணர்வு வந்தவனாக, பஸ் ஸ்டேண்டுக்கு போகணும் என்று ஆட்டோவில் ஏறுகிறான். ஆட்டோக்காரர் சந்தியா போல தெரிந்ததால் குழப்பத்தில் செல்கிறான்.
ஆட்டோ போய்க்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு டிராஃபிக் பெண் போலீஸ் ஆட்டோவை நிறுத்தி விசாரிக்கிறார். சரவணன் அந்த பெண் போலீசைப் பார்க்கிறான். அது சந்தியாவாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறான். பிறகு பார்த்தால் அது வேறு யாரோவாக இருக்கிறார். ஆட்டோ இன்னும் கொஞ்சம் தூரம் செல்கிறது. சாலையில் யாருக்கோ அடிபட்டு ஒரு டாக்டர் சிகிச்சை அளிக்கிறார். சரவணன் என்ன என்று ஆட்டோவை நிறுத்தச் சொல்லி பார்க்கிறான். அங்கே பார்த்தால் அந்த டாக்டர் சந்தியாவாக இருக்கிறார். அசந்துபோகும் சரவணன், சந்தியா டாக்டரா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அந்த டாக்டர் வெறு யாரோ ஒரு பெண் என்பது சரவணனுக்கு தெரிகிறது. அப்படியே, கொஞ்ச தூரம் மீண்டும் ஆட்டோ போகிறது அப்போது ஒரு கட்டுமான இடத்தில் ஒரு பெண் இன்ஜினியர் பிளான்களை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த சர்வணனுக்கு ஆச்சரியம், அந்த இன்ஜினியர் சந்தியாவாக தெரிகிறாள். பிறகு, அதுவும் சந்தியா இல்லை என்று புரிந்து சரவணன் குழப்பத்துடன் செல்கிறாள்.
என்ன இதையெல்லாம், பார்க்கிற உங்களுக்கு அப்படியே, ரஜினி நடித்த பாட்ஷா படம் நினைவுக்கு வருகிறதா, நிச்சயமாக பாட்ஷா ஸ்டைலில் ராஜா ராணி 2 சீரியலில் லவ் சீனுக்கு காட்சி அமைத்திருக்கிறார்கள். பாட்ஷா படத்தில், பணக்கார பெண் நக்மா, ஆட்டோ ஓட்டும் மாணிக்கத்தின் (ரஜினி) மீது காதலில் விழுவார். அப்போது, நக்மாவுக்கு பார்ப்பவர்களெல்லாம் மாணிக்கம் (ரஜினி) போலவே தெரிவார்கள். இதே போலதான் இன்றைய ராஜா ராணி சீரியல் லவ் சீன் அமைந்துள்ளது.
பிறகு சரவணன், சந்தியாவும் இது போல, போலீஸார், டாக்டரா, இன்ஜினியரா ஆகியிருக்கணும். நம்மள கல்யாணம் பண்ணிக்கொண்டு அவங்க வாழ்க்கை வீணா போகுது என்று கூறுகிறான். முதலில் அவங்களை விவாகரத்து பத்திரத்தில் எடுத்து வரச்சொல்லி கையெழுத்து போடணும் என்று கூறுகிறான்.
வீட்டில் காலையில் சரவணன் வருகைக்காக சிவகாமி காத்திருக்கிறார். சந்தியாவும் காலையிலேயே குளித்துவிட்டு சரவணன் வருகைக்காக காத்திருக்கிறாள். எல்லோரும் என்ன வேலை செய்யலாம் என்று பகிர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு போகும் சரவணனை சிவகாமி வாசலுக்கே வந்து வரவேற்கிறார். செந்தில் அர்ச்சனாவிடம் பேசாமலே இருக்கிறான். சுந்தரம் சரவணனிடம் ஊரில் இருப்பவர்களை நலம் விசாரிக்கிறார்.
எல்லோரும் நிச்சயதார்த்த வேலைக்கு தயாராகுங்கள் என்று சிவகாமி அனைவரையும் துரிதப்படுத்துகிறார். சந்தியா சரவணனிடம் சட்டை எடுத்து தருகிறாள். சந்தியா, ஊர்ல இருந்து எப்போ கிளம்புணீங்க என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், இன்னும் ஒரு வாரம் கூடம் இருந்து வந்திருப்பேன். பார்வதி நிச்சயதார்த்தம் என்பதால் வந்தேன். நீங்க நிம்மதியா இருப்பீங்க என்று கூறுகிறான்.
சந்தியா, நிச்சயதார்த்த வேலைகளை நினைத்து டென்ஷன் ஆகாதீங்க, வீட்ல இவ்வளவு பேர் இருக்கிறோம் இல்லை பார்த்துக்கலாம், சரவணனுக்கு நல்ல அண்ணன் கிடைச்சிருக்கார் என்று சந்தோஷம் என்று கூறுகிறாள். ஆனால், சரவணன், அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு, என்ன அப்படி பார்க்கிறீங்க என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், பார்வதிக்கு நல்ல அண்ணன் கிடைச்சிருக்கிறார். அதனால், பார்வதிக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, நம்ம அண்ணன் நம்ம வாழ்க்கையை இப்படி பண்ணிட்டாரேன்னு வருத்தப்படறீங்களா, கவலைப்படாதீங்க, உங்க அண்ணன் பண்ண தப்பை நான் சரி பண்ணிடறேன். அதற்கு பிறகு உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. நீங்க ஆசைப்பட்ட மாதிரியே சந்தோஷமா மாறிடும், அதுக்கு நான் பொறுப்பு என்று கூறுகிறான். இதைக்கேட்டு சந்தியா, இன்னும் கோபம் சரியாகலயா, ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார், நாம் என்ன கேட்டோம், இவர் என்ன சொல்றார். ஒன்னுமே புரியல, இந்த விடுகதைக்கு எப்பதான் விடை கிடைக்குமோ என்றுமனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.