Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், அர்ச்சனா தனது நாத்தனார் பார்வதியின் கல்யாணத்தை தடுப்பதற்காக பார்வதியை அசிங்கப்படுத்த திட்டமிடுகிறாள். கொடவுனில் முதலில் பார்வதியை அனுப்பிவிட்டு பிறகு, அவளை பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கியை உள்ளே அனுப்பு பூட்டிவிடுகிறாள். அவளை சந்தியா எப்படி காப்பாற்றுகிறாள் என்பது பரபரப்பாக இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், அர்ச்சனா தனது நாத்தனார் பார்வதியின் கல்யாணத்தை தடுப்பதற்காக பார்வதியை அசிங்கப்படுத்த சதி திட்டம் தீட்டுகிறாள். அதன்படி, பார்வதிக்கு அவளுடைய நிச்சயதார்த்தத்துக்காக தனது துணிக்கடையில் புடவை எடுத்துக்கொள்ள சொல்லி, அவளை துணிக்கடை கொடவுனுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே சென்றது, அர்ச்சனா கொடவுனுக்குள் பார்வதியை முதலில் அனுப்பிவிட்டு பிறகு, அவளை பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கியை உள்ளே அனுப்பு பூட்டிவிடுகிறாள்.
விக்கி உள்ளே வந்திருப்பதைப் பார்த்துவிட்ட பார்வதி, இது அர்ச்சனாவின் சதி திட்டம்தான் என்று தெரிந்துகொண்டு அவனிடம் இருந்து தப்பிக்க துணிகள் வைத்திருக்கும் ரேக்குகளுக்கு இடையில் ஒலிந்து செல்கிறாள். என்ன செய்வது என்று புரியாமல் தத்தளிக்கும் பார்வதி, தனது அண்ணி பார்வதிக்கு போன் செய்து தகவலை சொல்கிறாள். பார்வதி வேகமாக கொடவுனுக்கு வருகிறாள். அங்கே கொடவுனுக்குள் விக்கியையும் பார்வதியையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு வெளியே நிற்கும் அர்ச்சனா கண்ணில் படமால், மறைந்திருந்து காம்பவுண்ட் ஏறி குதித்து உள்ளே சென்று பின் பக்கம் வாசல் வழியாக இரும்பு கேட் கதவை திறந்து பார்வதியை வெளியே அழைத்து வந்து காப்பாற்றுகிறாள்.
விக்கு உள்ளே போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது என்று உணர்ந்த அர்ச்சனா, திட்டமிட்டபடி திருடன் திருடன் என்று கத்துகிறாள். அர்ச்சனாவின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் வந்து கொடவுன் வாசலில் கூட்டமாக திரண்டு விடுகிறார்கள். அர்ச்சனாவின் மாமனார் சுந்தரம், மாமியார் சிவகாமி, வேலைக்காரி மயில் என எல்லோரும் வந்துவிடுகிறார்கள்.
எல்லோரும் திரண்டு விட்ட பிறகு, அர்ச்சனா, தான் திட்டமிட்டபடி பாரவதி விக்கியுடன் பிடிபட்டு அசிங்கப்படப் போகிறாள் என்ற நினைப்புடன் கதவைத் திறக்கிறாள். கதவைத் திறந்தால், உள்ளே விக்கி மட்டும் நிற்பதைப் பார்த்து அர்ச்சனா அதிர்ச்சியடைகிறாள். பார்வதி எங்கே போனால் என்று யோசிக்கிறாள். அதற்குள் கொடவுன் முன்பு திரண்டிருந்த கூட்டம், விக்கியை கொடவுன்ல திருட வந்தியாடா என்று சொல்லி அவனை தெருவுக்கு இழுத்து சென்று எல்லொரும் சேர்ந்து தர்ம அடி கொடுக்கிறார்கள்.
பார்வதியும் சந்தியாவும் வெளியே வந்து ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்கள். இருவரும் நின்றிருப்பதைப் பார்த்த அர்ச்சனா, நீதான் பார்வதியைக் காப்பாற்றினாயா என்று இது எல்லாம் உன் வேலைதானா என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
அடி தாங்க முடியாத விக்கி, ஒரு கட்டத்தில் எல்லோரையும் தள்ளி விட்டுவிட்டு, நான் திருடன் இல்லை. கடை திறந்திருக்கு துணி பார்க்கலாம்னு உள்ள போனால், அதுக்குள்ள பூட்டி வச்சுட்டாங்க என்று சொல்கிறான். சிலர் போலீசை கூப்பிடுங்க இவன் மேல கேஸ் போட்டு ஜெயில்ல வைக்கனும் என்று கூறுகிறார்கள். இதைக்கேட்ட விக்கி, போலீசை கூப்பிடுங்க, முதல்ல என்ன அடிச்சதுக்கு உங்க மேலதான் கேஸ் போடணும் என்று அங்கே அவனை அடித்த கூட்டத்தில் இருந்தவர்களை மிரட்டுகிறான்.
கூட்டத்தினர், அர்ச்சனா இவன் என்னம்மா திருடன் இல்லைனு சொல்றான் என்று கேட்கிறார்கள். அதற்கு அர்ச்சனா, இவன் போலீசுக்கு போனால், எல்லாம் உண்மையும் தெரிந்துவிடும் என்பதால், அவள் இல்லை நான்தான் தப்பா நினைச்சுட்டேன். விட்டுவிடுங்க என்று கூறுகிறாள். விக்கி தன்னை அடித்த ஒருவரை உன்னை வச்சிக்கிறேன் இரு என்று முறைத்துவிட்டு அங்கிருந்து போகிறான்.
விக்கியால் மிரட்டப்பட்ட அந்த நபர், என்னம்மா அர்ச்சனா உன் பேச்சை கேட்டு திருடன்னு வந்தா எங்களை பிரச்னையில் மாட்டி விடுற என்று அர்ச்சனாவை திட்டுகிறார்கள். மாமனார் சுந்தரமும் மாமியார் சிவகாமியும் என்ன அர்ச்சனா இது என்று கேட்கிறார்கள். திருடன்னு கூப்பிட்டுவிட்டு இப்போது திருடன் இல்லை என்று சொல்கிறாய் என்று கேட்கிறார்கள். அர்ச்சனா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், இல்லை அத்தை அவன் திருடன்னு நினைச்சுதான் நான் அப்படி பண்ணிட்டேன் என்று கூறுகிறாள். அதற்குள், அங்கே செந்தில் வருகிறான். செந்தில் தனது அப்பா, அம்மாவிடம் எல்லாத்தையும் வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் செல்கிறான்.
வீட்டுக்கு போன பிறகு, செந்தில், பார்வதி, சந்தியா, அர்ச்சனா 4 பேரும் வீட்டு பின்புறம் இருக்கிறார்கள். செந்தில், அர்ச்சனாவுக்கு தெரியாமல் கொடவுனுக்கு வந்து சந்தியாவுடன் சேர்ந்து பார்வதியைக் காப்பாற்றியதைப் பற்றி சொல்கிறான். பார்வதியை வெளியே கூப்பிட்டுகொண்டு வந்த பிறகு, விக்கியை அடிக்க கோபமாக உள்ளெ போனவனை சந்தியாவும் பார்வதியும் தடுத்ததை சொல்கிறான். அர்ச்சனா வாசலில் கூட்டத்தை கூட்டி வைத்திருக்கிறாள், இந்த நேரத்தில் அவனை அடித்தால் என்ன ஏது என்று விசாரித்தால் அது நம்ம வீட்டு பொண்ணுக்குதான் தேவையில்லாமல் கெட்டப்பேரு என்று சொல்லி அழைத்து வந்ததை சொல்கிறான்.
இதைக்கேட்டு அதிர்ந்து போய் பார்க்கும் அர்ச்சனாவை, செந்தில் பளார் என்று கன்னத்தில் அறைகிறான். “என்ன தைரியம் இருந்தால் என் தங்கச்சியை அவன்கிட்ட மாட்டிவிட பார்த்திருப்ப, நல்ல மாதிரியா யோசிக்கத் தெரியாதா, வர ஆத்திரத்துக்கு உன்னை” என்று அர்ச்சனாவை செந்தில் அடிக்கப் பாய்கிறான்.
சந்தியா, தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று செந்திலை தடுக்கிறாள். நீங்கள் இப்போ ஆத்திரப்பட்டால், நஷ்டம் நமக்குதா என்று சந்தியா செந்திலை தடுக்கிறாள். அதற்கு, செந்தில், இவள் எவ்ளோ பெரிய காரியத்தை செய்திருக்கா, இவ என்ன வேணும்னாலும் செய்வா, அண்ணி அன்று அர்ச்சனாவை அடிக்க பாய்கிறான்.
அடி வாங்கிய அர்ச்சனா அழுதுகொண்டே, என்னை மட்டும் கேட்கிறீங்க, உங்க தங்கச்சி பண்ண காரியத்தை மட்டும் கேட்கவே மாட்டேங்கறீங்க என்று கேட்கிறாள்.
இதைக்கேட்டு செந்தில், “பேசாதடி, உனக்கும் அவளுக்கும் வித்தியாசம் இல்லை. நீ செய்றதும் அவள் செய்றதும் ஒன்னா” என்று கேட்கிறான்.
சந்தியா குறுக்கிட்டு “அர்ச்சனா, அவள் சின்னபுள்ள, இந்த வயசுல இதெல்லாம் சகஜம், அவள் தெரியாமல் செஞ்சிட்டா, இப்போ அதை புரிஞ்சுகிட்டு அதிலிருந்து வெளியே வர அவ ட்ரை பண்ணிகிட்டு இருக்கா, ஆனால், நீ” என்று அர்ச்சனாவை நோக்கி கேள்வி கேட்கிறாள்.
செந்தில் கோபத்துடன், “அர்ச்சனா நீ தெரிஞ்சே செய்திருக்க, இப்படி ஒரு கேவலமான காரியத்தை உன் தங்கச்சிக்கு உன்னால செய்ய முடியுமா” என்று கேட்கிறான்.
பார்வதி, “ஏன் அண்ணி இப்படி பண்ணீங்க, அவன் எப்படி பட்ட அயோக்கியன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உங்களுக்கு இப்படி பண்ண எப்படி மனசு வந்தது, என்னை எப்படி எல்லாம் பொய் சொல்லி கூட்டிட்டு போனீங்க, உங்களை நம்பிதானே நான் உங்க கூட வந்தேன். என் வாழ்க்கையையே இப்படி சீரழிக்கப் பார்த்தீங்களே” என்று அர்ச்சனவிடம் கேட்கிறாள்.
செந்தில், “இவள்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இவ மூஞ்சியப் பாருங்க, தப்பு பண்ணிட்டோமேன்னு கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கா உனக்கு, செய்ஞ்ச காரியத்துக்கு வருத்தமே இல்லை. இனிமேல் உன்கூட வாழ நான் தயாராவே இல்லைடி” என்று கூறுகிறான்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் அர்ச்சனா என்னங்க இப்படியெல்லாம் பேசறீங்க என்று கேட்கிறாள். சந்தியா, அவசரப் படாதீங்க செந்தில், கொஞ்சம் நிதானாமா இருங்க என்று சொல்கிறாள். ஆனால், செந்தில், “எப்படி அண்ணி நிதானமா இருக்க முடியும், இவகூட வாழமுடியாதுனு சொன்னதும் எப்படி பதற்றம் வருது பார்த்தீங்களா, இதுவே என் தங்கச்சி வாழ்க்கைனா உனக்கு அவ்வளவு அசால்ட்டா,” என்று கேட்கிறான். அர்ச்சனா, இல்லைங்க என்று செந்தில் கைகளைப் பிடிக்க வருகிறாள். ஆனால், செந்தில், “ஏய், ஏன் மூஞ்சியிலயே முழிக்காத போடீ, உன்னைப் பாக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு, வெளியாட்களை நம்பி வீட்டுப் பொண்ணுங்களை அனுப்பத்தான் எல்லோரும் யோசிப்பாங்க, ஆனால் இங்க, சொந்த அண்ணன் பொண்டாட்டி, அண்ணியை நம்பி என் தங்கச்சிய இனிமேல் எப்படி அனுப்ப முடியும், ஒரு செகண்ட் லேட் ஆகியிருந்தா என் தங்கச்சியோட வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கும்டீ, ஏய், இத பாரு, இந்த வீடை உன் வீடாவும் இந்த குடும்பத்தை உன் குடும்பமாவும் ஏத்துக்கவும் நினைக்கவும் முடியாது, அதனால் நீ இனிமேல் இங்க இருக்க வேணாம், உங்க அம்மா வீட்டுக்கு போய்விடு,” என்று கூறுகிறான்.
ஆனால், அர்ச்சனா, அழுதுகொண்டே நான் அப்படி எல்லாம் நினைக்கல, என்று காலில் விழுகிறாள். ஆனால், செந்தில் அவளைப் பிடித்து தள்ளுகிறான்.
அர்ச்சனா, செந்திலிடம் கெஞ்சுகிறாள், சந்தியா நீயாவது சொல்லு சந்தியா என்று கெஞ்சுகிறாள். பார்வதி என்னை மன்னிச்சுடு பார்வதி, நீயாவது சொல்லு என்று கெஞ்சுகிறாள்.
அதற்கு செந்தில், நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். நடந்ததையெல்லாம் அம்மாகிட்ட சொல்லி உன்னை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேண்டீ, என்று அர்ச்சனாவை கையைப் பிடித்து இழுக்கிறான்.
சந்தியா, செந்திலைத் தடுக்கிறாள், “நீங்க கோபத்தில் பேசறீங்க, அர்ச்சாவை அவங்க அம்மாவீட்டுக்கு அனுப்பறீங்கனு அம்மா கேட்டா என்ன காரணம் சொல்வீங்க, எல்லாம் உண்மையும் தெரிஞ்சா அத்தையும் மாமாவும் எவ்ளோ கஷ்டப்படுவாங்க, இதற்கா நானும் உங்க அண்ணனும் அவ்ளோ கஷ்டப்பட்டோம். பார்வதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகிற இந்த சூழ்நிலையில், அர்ச்சனாவை அனுப்பிட்டால், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு, அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க, எல்லோருக்கும் என்ன பதில் சொல்ல முடியும் செந்தில், பாரவதியை காப்பாத்தினதுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்” என்று அறிவுரை கூறுகிறாள்.
செந்தில், சந்தியா சொன்னதை ஏற்றுக்கொண்டு, பார்வதிக்கு கல்யாணம் ஆகி நல்லபடியா மாமியார் வீட்டுக்கு போறதை இவள் பார்க்கனும், உன் தங்கச்சிக்கு வாழ்க்கையாக என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிக்கப் பார்த்த இல்லை. அதற்கு இதுதாண்டி உனக்கு சரியான தண்டனை என்று அர்ச்சனாவிடம் கோபமாக கூறுகிறான். பிறகு, செந்தில், பார்வதி, சந்தியா எல்லோரும், அர்ச்சனாவை விட்டுவிட்டு போகிறார்கள்.
இதையடுத்து, அர்ச்சனா அழுதுகொண்டே வெளியே போகிறாள். அப்போது, குழந்தையுடன் வரும் ஒரு பெண், அர்ச்சனா திருடன்னு நினைச்சு யாரோ ஒருத்தனை கொடவுன்ல வச்சு பூட்டிட்டியாமே என்ன நடந்துச்சுமா என்று கேட்கிறாள். ஆனால், அர்ச்சனா பதில் சொல்லாமல் அழுதுகொண்டே போகிறாள். அப்போது அர்ச்சனாவுக்கு விக்கியிடம் இருந்து போன் வருகிறது.
விக்கி, “என்ன நல்லா மாட்டிவிட்டுட்டீங்க இல்ல” என்று கூறுகிறான். அதற்கு, அர்ச்சனா என்ன நடந்ததுனு எனக்கே புரியல, நீ தேவையில்லாம பேசாத” என்று கூறுகிறாள். இதைக்கேட்டு கோபமடையும் அர்ச்சனா, “எது தேவையில்லாமல் பேசறனா, நான் நல்லவ இல்லை, கெட்டவ இல்லைனு என்னென்னமோ பேசி என்னை அடிவாங்க விட்டுட்டீங்க, குடும்பத்தோட சேர்ந்து என்னை அடிக்கலாம்னு பிளான் பண்ணீட்டீங்களா” என்று கேட்கிறான்.
அதற்கு அர்ச்சனா, நானே இப்ப பெரிய பிரச்னைல இருக்கேன். நான் தான் இந்த திட்டம் போட்டேன்னு எல்லோரும் கண்டுபிடிச்சிட்டாங்க, என்னை வீட்டை விட்டு விரட்டிடுவாங்களோனு டென்ஷன்ல இருக்கேன் தயவு செய்து இனிமேல் எனக்கு போன் பண்ணாதீங்க” என்று கூறுகிறாள். இதற்கு விக்கி கோபத்துடன் உங்களுக்கு போன் பண்ணாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. இதை எப்படி டீல் பண்ணணும்னு எனக்கு தெரியும் என்று போனை வைத்துவிடுகிறான்.
சந்தியா, பார்வதி, சரவணன் 3 பேரும் கூட்டு சேர்ந்து எவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு இருக்காங்க, ஆனால் , சந்தோஷமா இருக்காங்க, நான் சின்னதா ஒரு விஷயம் செய்தால் மாட்டிக்கிறேன். இனிமேல் இதை எப்படி சமாளிச்சு சரிகட்டப் போறேனோ என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள்.
இரவும் அர்ச்சனா பெட் ரூமில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். செந்திலுக்காக காத்திருக்கிறாள். என்ன மைண்ட் செட்ல இருப்பாரோ தெரியலயே, நான் ஏதாவது செய்தால் மட்டும், ஏன் இப்படி சொதப்புது, பார்வதி சந்தியா மட்டும் எதுவுமே செய்யாமலா இருக்காங்க, அதுங்க எப்படியோ போகட்டும், இப்போதைக்கு, இவரை எப்படி சமாதானப்படுத்துறதுணுதான் யோசிக்கணும், என்று நினைக்கிறாள்.
செந்தில் உள்ளே வருகிறான். எதுவுமே பேசாமல் கோபத்துடன் வருகிறான். அர்ச்சனா, ஏங்க இன்னுமா கோபமா இருக்கீங்க, நான்தான் மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல, என்று செந்திலுக்கு துண்டு எடுத்து கொடுக்கிறாள். ஆனால், செந்தில் எதுவும் பேசாமல் கோபத்துடன் ஹேங்கரில் இருந்த துண்டை எடுக்கிறான்.
அர்ச்சனா, ஏங்க இப்படி பண்ணாதீங்க பிளீஸ், எனக்கு உங்களை விட்டால் யாருங்க இருக்கா, நீங்க இப்படி பேசாமல் போனால் ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் தெரியாமல் செய்ஞ்சிட்டேங்க, என்னை மன்னிச்சுடுங்க என்று கூறுகிறாள்.
ஆனால், செந்தில், நீ செய்தது தெரிஞ்சே செய்த தெரியாம செய்றதுக்குதான் மன்னிப்பு, தெரிஞ்சு செய்ததுக்கு தண்டனைதான் என்று கூறுகிறான். அதற்கு அர்ச்சனா, நீங்க என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க, ஆனால் பேசாமல் மட்டும் இருந்துடாதீங்க, உங்க கோபம் தீருகிற வரை நாலு அடி வேண்டுமானாலும் அடிச்சுக்கோங்க என்று கூறுகிறாள்.
இதைக் கேட்ட செந்தில், “ஒரு வாட்டி தப்பு செஞ்சா மன்னிப்பு கேட்கலாம், ஆனால் திரும்ப திரும்ப செய்துகிட்டே இருக்க, உனக்கு அளவுக்கு மீறி வாய்ப்பு கொடுத்தாச்சு, எதுவும் செய்யாத எதுவும் செய்யாதனு நான் சொன்னேன் இல்லை. ஆனால், நீ கேட்டியா, செஞ்ச தப்புக்கு தண்டனை உன் இஷ்டத்துக்குதான் கொடுக்கனுமா, கல்யாணமாகி நீ இந்த வீட்டுக்கு எத்தனை வருஷம் ஆச்சு, ஆனால், இன்னும் நீ நம்ம வீடு, நம்ம குடும்பம், நம்ம மனுஷங்கன்ற நினைப்பு உனக்கு ஏன் இல்லை. எப்பவாச்சும் ஒரு தடவை நீ நடந்திருக்கியா” என்று கேட்கிறான்.
இதற்கு அர்ச்சனா, ஏங்க இப்படி பேசறீங்க என்று கேட்கிறாள். அதற்கு செந்தில் வேற எப்படி பேச சொல்ற, பார்வதி அசிங்கப்பட்டா அது நம்ம குடும்பத்துக்கு அசிங்கம், அது நம்ம புருஷனுக்குதான் அசிங்கம்னு நீ நினைக்கல இல்ல என்று கேட்கிறான்.
அதற்கு அர்ச்சனா தப்புதாங்க, நான் ஏதோ முட்டாள் தனமா நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க, இவ்வளவு வெறுப்பா பேசாதீங்க என்று கூறுகிறாள்.
இதைக்கேட்ட செந்தில் கோபத்துடன், என்னால உன்னை மன்னிக்கவே முடியாது. ஆரம்பத்திலயே நீ இந்த மாதிரி தப்பு பண்ணப்போ நான் உன்னை கண்டிச்சு இருந்தா, நீ இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்ட இல்ல, நானும் தப்பு பண்ணிட்டேன். இந்த தண்டனை எனக்கும் சேர்த்துதான். சந்தியா அண்ணி சொன்னதுக்காகவும்தான், பார்வதியோட வாழ்க்கைக்காகவும் தான் நீ இங்க இருக்க, இருப்ப, இனிமேல் உனக்கு எனக்கும் நடுவுல எதுவுமே கிடையாது. உங்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை என்று கூறிவிட்டு படுத்துக்கொள்கிறான்.
நடந்ததை நினைத்து அழுகிற அர்ச்சனா, கண்களை துடைத்துக்கொண்டு, நான் ஏன் அழணும், நான் அழக்கூடாது, இவர் இன்னைக்கு திட்டுவாரு, ரெண்டுநாள் கழிச்சு நான்தான் முக்கியம்னு வந்துடுவாரு, என்ன ஆனாலும் இந்த கல்யாணம் நடக்க கூடாது. அத்தை நினைச்சாலும் சரி, சந்தியா நினைச்சாலும் சரி, பாஸ்கருக்கும் என் தங்கச்சிக்குதான் கல்யாணம் நடக்கும். நான் நடத்திக்காட்டுகிறேன் என்று மனதில் பழி உணர்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.