Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் கடந்த வாரம்தான் சரவணன் – சந்தியா இடையே ஒரு புயலே அடித்து ஓய்ந்தது. சந்தியா ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும்போது, ஒரு பெண் போலீஸ் கஷ்டப்படுவதைப் பார்த்த சரவணன், போலீஸ் வேலை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாதுங்க என்று கூறியதைக் கேட்டு மனம் தளர்ந்து போகிறாள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், சரவணன் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். கடையில் சர்க்கரையுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது, கடைக்கும் சந்தியா வருகிறாள். அவள் சரவணனுக்கு தான் வாங்கி வந்த கிளவுஸைத் தருகிறாள். அடுப்படியில் ஸ்வீட் செய்யும்போது தவறுதலாக கைகளை சுட்டுக்கொள்வதால் சரவணனுக்கு சந்தியா கிளவுஸ் வாங்கி வந்ததாகக் கூறுகிறாள். கிளவுஸை வாங்கி போட்டுக்கொண்ட சரவணன், ரொம்ப நன்றாக இருப்பதாகக் கூறுகிறான்.
அப்போது, அங்கே கடைக்கு ஒரு பெண் போலீஸ் வருகிறார். நாள் எல்லாம் வெயிலில் நின்று கொண்டிருப்பதால் ரொம்ப களைப்பாகவும் சோர்வாகவும் வலியோடும் இருப்பதாகக் கூறுகிறார். சரவணனும் சந்தியாவும் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கிறார்கள்.
அவர் போன பிறகு, சரவணன், அந்த பெண் போலீஸுக்காக வருத்தப்படுகிறான். இது போல, போலீஸ் வேலைக்கு போய் கஷ்டப்படக் கூடாது என்று கூறுகிறான். அதே போல, நம்ம குடும்பத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை எல்லாம் செட் ஆகாது என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா ஷாக் ஆகிறாள். ஏனென்றால், ஐபிஎஸ் படிப்பதற்கு சரவணன் சம்மதிப்பான் எதிர்பார்த்திருந்தவளுக்கு சரவணனின் இந்த வார்த்தை அதிர்ச்சி அளித்தது. அதனால், சந்தியா, ஐபிஎஸ்க்கு படிப்பது குறித்து இன்னொரு நாளில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுகிறாள்.
அதே நேரத்தில், வீட்டில் அர்ச்சனா, தனது கணவருடன் சினிமாவுக்கு செல்ல திட்டமிடுகிறாள். அதனால், பார்வதி, மாமியார் சிவகாமியிடம் சிக்காமல் செல்ல முயற்சி செய்கிறாள்.
மற்றொரு புறம், பார்வதியின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் வில்லன் விக்கி, பார்வதிக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள பாஸ்கருடன் நட்பாகி பார்வதியின் கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறான்.
இதனிடையே, பார்வதி, மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்ததை மாமியார் சிவகாமியிடம் லிஸ்ட்டையும் மீதி பணத்தையும் கொடுக்கிறாள். லிஸ்ட்டையும் பில்லையும் பார்த்த சிவகாமி, 250 ரூபாய் குறைகிறதே ஏன் என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, சரவணன் அடுப்படியில் வேலை செய்யும்போது கை சுட்டுக்கொள்கிறது. அதனால், அவருக்கு ஒரு கிளவுஸ் வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன் என்று கூறுகிறாள். இதைக்கேட்டு சிவகாமி மனதுக்குள் மகிழ்ச்சி அடைகிறார். மேலும், சிவகாமியை நினைத்து மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”