Advertisment

Tamil Serial: சந்தியா கையில் டிவோர்ஸ் பேப்பரை கொடுத்த சரவணன்; கலகலப்பாக நடந்த பார்வதி நிச்சயம்!

பார்வதி நிச்சயதாரத்தம், முடியட்டும், அதற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, சந்தியா பதிலுக்கு என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் சரவணன் டிவோர்ஸ் பேப்பரை சந்தியா கையில் வைத்துவிட்டு செல்கிறான்.

author-image
WebDesk
Sep 08, 2021 13:58 IST
Vijay TV Raja Rani 2 Serial, raja rani 2 serial, raja rani 2 serial today episode, sandhya, saravanan, alya manasa, sidhu, vaishnavi sundar, saravanan put divorce papet at sandhya hand, parvathi engagement done, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, ஆல்யா மானசா, டிவோர்ஸ் பேப்பரைக் கொடுத்த சரவணன், பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியா, ராஜா ராணி 2, saivam ravi, praveena, vj archana, saravanan put divorce paper at sandhya, vaishnavi dudar, tamil serial news, tamil tv serial news

Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு, சந்தியாவின் தோழி அவளுக்கே தெரியாமல் கொடுத்த டிவோர்ஸ் பேப்பரை சரவணன் சந்தியாவின் ஹேன்ட் பேக்கில் வைத்து தான் நினைத்தபடி கச்சிதமாக திட்டத்தை நிறைவேற்றுகிறான். ஹேன்ட் பேக்கில் இருந்து விழும் டிவோர்ஸ் பேப்பரை, சந்தியாவின் கையில் கொடுத்துவிட்டு பார்வதி நிச்சயதார்த்தம் முடியட்டும் என்று சொல்லிட்டு சந்தியா என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் செல்கின்றான். இதனால், ஐயோ இவரு தப்பா நினைச்சுட்டு போறாரே என்று சந்தியா புலம்புகிறாள்.

Advertisment
publive-image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

publive-image

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணன், அப்பா என் மேல சத்தியம் பண்ணியிருந்தாலும் அவர் எந்த அளவுக்கு சத்தியத்தைக் காப்பாற்றுவார் என்று தெரியலயே, இதற்கு சீக்கிரமாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறான். பிறகு, சந்தியாவுக்கு அவளுடைய தோழி அனிதா சந்தியாவுக்கே தெரியாமல் கொடுத்துவிட்ட டிவோர்ஸ் பேப்பர் நினைவுக்கு வர, சரவணன், அந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்து, சந்தியாவின் ஹேன்ட் பேக்கில் வைக்கிறான். பிறகு அங்கேயே யோசித்துக்கொண்டிருக்கிறான். அந்த நேரம் பார்த்து உள்ளே வரும் சந்தியா என்ன யோசித்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது. பையில இருந்தா கொடுங்க, நான் திரும்ப தருகிறேன் என்று கூறுகிறான். நீங்க என்ன திருப்பி தர்றேன்னுலாம் சொல்றீங்க, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஹேன்ட் பேக்கை எடுத்து பணத்தை எடுக்க முயற்சி செய்கிறாள். அப்பொது, ஹேன்ட் பேக்கில் இருந்து டிவோர்ஸ் பேப்பர் கீழே விழுகிறது.

உடனடியாக அந்த டிவோர்ஸ் பேப்பரை எடுக்கிற சரவணன், இது என்ன சென்று சண்தியாவிடம் கேட்கிறான். சந்தியா என்ன சொல்வது என்று தெரியாமல், அனிதா கொடுத்த டிவோர்ஸ் பேப்பராச்சே இது எப்படி இங்கே வந்தது என்று அதிர்சியுடன் யோசிக்கிறாள் அதற்கு சரவணன், இப்போ இது என்னனு சொல்றீங்களா இல்லை பார்வதியைக் கூப்பிட்டு எல்லார் முன்னாடியும் படிக்க சொல்லட்டுமா என்று கேட்கிறான். வேறுவழியில்லாமல், சந்தியா இது டிவோர்ஸ் பேப்பர் என்று சொல்கிறாள்.

publive-image

சரவணன், கணவன் மனைவியும் இனி சேர்ந்து வாழமாட்டோம் பிரிகிறோம்ணு சொல்றதுதான இந்த டிவோர்ஸ் பேப்பர். பார்வதி நிச்சயதாரத்தம், முடியட்டும், அதற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு, சந்தியா பதிலுக்கு என்ன சொல்கிறாள் என்றுகூட கேட்காமல் சரவணன் டிவோர்ஸ் பேப்பரை சந்தியா கையில் வைத்துவிட்டு அங்கே இருந்து புறப்பட்டு செல்கிறான்.

சரவணன், போன பிறகு, சந்தியா, இவரு காரணமே இல்லாமல் கோபப்படுவாரு, ஐயோ இவரு தப்பா புரிஞ்சுட்டு போறாரே, என்ன பண்றது என்று புலம்புகிறாள். சரி இப்போது, பார்வதி நிச்சயதார்த்தம் நடக்கிறது இப்போது போய் இதையெல்லாம் சொன்னால், பெரிய பிரச்னையாகிவிடும். நிச்சயம் முடியட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம். இது நான் வாங்கின டிவோர்ஸ் பேப்பர் இல்ல. என் ஃபிரெண்ட் அனிதா எனக்கே தெரியாமல் என் ஹேன்ட் பேக்ல வைத்துவிட்டாள். இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு எடுத்து சொல்லலாம் என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

publive-image

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் எப்போது வருவார்களோ என்று சிவகாமி பரபரப்புடன் இருக்கிறார். பிறகு, சிவகாமி, இப்ப எல்லாம் பசங்க எப்படியோ இருக்காங்க, மாப்பிள்ளை, பார்வதியை பிடிச்சுருக்குனு சொன்ன மாதிரி கொஞ்ச நாள்ல வேறொரு பொண்ணை புடிச்சிருக்குனு சொல்றதுக்குள்ள கல்யாணத்தை ஒரே மாசத்துல வச்சுடணும் என்று சிவகாமி சொல்கிறார். இதைக்கேட்ட சந்தியா, அத்தை, பார்வதி படித்துகொண்டிருக்கிறாள். நிச்சயம் பண்ண பிறகு, அவள் படிப்பு முடிஞ்சவுடன் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லுங்கள் என்று எல்லோரும் இருக்கும்போது மாமியர் சிவகாமியிடம் சொல்கிறாள். இதைக்கேட்டு கோபமடையும் சிவகாமி, சந்தியா, படிப்பு பவிசு எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு வேலையைப் பாரு நீ எதையும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.

publive-image

அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து சிவகாமியின் ஃபிரெண்ட் கவிதா எல்லோரும் வருகிறார்கள். மாப்பிள்ளை பேங்கல வேலை செய்கிறார் என்றால் பெரிய இடமாக இருக்கும் என்று சொல்லி பேசிக்கொள்கிறார்கள். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே, மாப்பிள்ளை வீட்டார்கள் காரில் வந்து இறங்குகிறார்கள் அவர்கள் எல்லோரையும் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வரவேற்கிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டார், பார்வதியை ரொம்ப புடிசிருக்குது என்று சொல்கிறார்கள். இதனிடையே, பார்வதியைப் பார்க்க அவளுடைய ஃபிரெண்ட் அணு வருகிறாள். அவள் இந்த விக்கி இப்படி இருப்பானு நம்பவே முடியவில்லை என்று சொல்கிறாள். ஆமாம், அவன்கிட்ட நான் ஐலவ்யூ கூட சொல்லல. ஆனால், ஒரு நல்ல மரியாதை இருந்தது. ஆனால், இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கல. சந்தியா அண்ணி வரலனா என்ன ஆகியிருக்கும்னே நினைச்சு பார்க்க முடியல என்ரு பார்வதி கூறுகிறாள்.

publive-image

அணு காலேஜ் முடிக்காமல் எப்படி என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி, எனக்கு படிப்பு வரலை. வீட்டில் நான் பாஸ் பண்ணிட்டதா பொய் சொல்லி வச்சிருக்கேன். எனக்கு படிக்க விருப்பமில்லை என்று கூறுகிறாள்.

அப்போது, அர்ச்சனா உள்ளே வந்து அத்தை உன்னை கூப்பிட்டுக்கொண்டு வரச்சொன்னார்கள் என்று சொல்கிறாள். பார்வதியும் சரி வருகிறேன் என்று மாப்பிள்ளை வீட்டாரைப் பார்க்க செல்கிறாள்.

publive-image

பார்வதி வருவதைப் பார்த்த சிவகாமி, “எப்படி வந்திருக்கிறா பார்த்தீங்களா, வேற யாரு நிச்சயதார்த்தத்துகோ வந்திருக்கிற மாதிரி அசால்ட்டா வரா பாருங்க” என்று சுந்தரத்திடம் ரகசியமாக கூறுகிறார்.

எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சுந்தரம் எவ்வளவு பெரிய குண்டை தூக்கி போட்டுவிட்டு அமைதியாக இருக்கிறான் பாரு என்றி புழுங்குகிறார். சரவணனும், சந்தியா இந்த வீட்டில் நீங்கள் இருக்கப்போகிற கடைசி நாள் இது என்று வருத்தத்துடன் மனதில் சொல்லிக்கொள்கிறான்.

publive-image

பிறகு, பார்வதியின் மாமியார் உனக்கு பாஸ்கரைப் புடிச்சிருக்கா என்று பார்வதியிடம் கேட்கிறார். அவளும் புடிச்சிருக்குது என்று சொல்கிறார். பிறகு, நிச்சயம் பண்ண எடுத்துவந்த துணியைக் கொடுத்து மாற்றி வர சொல்கிறார். மாமியார், பார்வதியை மகளாகப் பார்த்துக்கொள்வதாகச் சொல்கிறார்.

publive-image

இதைக்கேட்டு சுந்தரம் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறுகிறது. இதையடுத்து, சந்தோஷமாக நிச்சயதார்த்தம் நடக்கிறது. பாஸ்கர் பார்வதியின் கையில் மோதிரம் போடுகிறான். பார்வதியும் பாஸ்கருக்கு மோதிரம் போடுகிறாள். இதைப்பார்த்த, அர்ச்சனா, எப்படியாவது கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று பழி உணர்ச்சி கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Raja Rani 2 Serial #Alya Manasa #Raja Rani 2 #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment