Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதனை சுவராஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
ராஜா ராணி 2 சீரியலில் கடந்த எபிசோடுகளில்தான், சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி குடும்பத்துக்கு ஏற்ற மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். அந்த மகிழ்ச்சியில் சரவணனும் சந்தியாவும் இருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் சரவணன், தனது மனைவி சந்தியாவை அம்மா நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில் தன்னுடைய ஸ்வீட் கடையில், தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ என்று பாட்டு பாடிக்கொண்டு இருக்கிறான். அப்போது, இதைப் பார்த்த கடையில் வேளை செய்யும் சிறுவன் சர்க்கரை என்ன சந்தோஷம் என்று கேட்கிறான். அதற்கு சரவணன் சந்தியாவை அம்மா ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட சந்தோஷத்தைக் கூறுகிறான். சிறுவன் சர்க்கரை இந்த சந்தோஷத்துக்கு எனக்கு ட்ரீட் இல்லையா என்று கேட்கிறான். அதற்கு சரவணன் என்ன வேண்டும் என கேட்க, சிறுவன் தனக்கு கியர் சைக்கிள் வேண்டும் என்று கேட்கிறான். சரவணனும் வாங்கித்தருகிறேன். நாளைக்கே கடையில் கியர் சைக்கிள் வாங்க ஒரு சீட் போட்டுவிடலாம் என்று கூறுகிறான்.
அப்போது, சந்தியாவின் அண்ணன் மணியும் அண்ணியும் கடைக்கு வருகிறார்கள். அவர்களை சரவணன் வாங்க என்று வரவேற்கிறான். தாங்கள் அமெரிக்காவுக்கு போகப்போவதாகச் சொல்கிறார்கள். அதற்கு சரவணனுக்கு நன்றி சொல்கிறார்கள். ஆனால், சரவணன், நான் எதுவுமே செய்யவில்லை, எல்லாமே சந்தியாதான். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தூக்கி எரிந்துவிட்டு போயிருப்பார்கள். ஆனால், சந்தியா பொறுமையாக இருந்து அம்மாவின் மனதை மாற்றியிருக்கிறாங்க என்று கூறுகிறான். இதையடுத்து, மணி நீங்கள் சந்தியாவை பார்த்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்று கூறுகிறான். பிறகு இருவரும் கிளம்புவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் செல்கிறார்கள்.
அடுத்த காட்சியில் சிவகாமி, வீட்டின் கூடத்தில் சிவகாமி ஏதோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறார். அப்போது வீட்டில் டெலிபோன் மணி ஒலிக்கிறது. ஆனால், சிவகாமி ஏதோ யோசனையில் டெலிபோன் மணி அடிப்பதுகூட கேட்காமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். அப்போது, பார்வதி டெலிபோன் மணி அடிப்பதைக் கேட்டு வெளியே வந்து பார்க்கிறாள். அதற்குள் டெலிபோன் ரிங் நின்றுவிடுகிறது. பார்வதி தனது அம்மா சிவகாமி அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு என்ன என்று கேட்கிறாள். அதுவும் அவருடைய காதில் விழவில்லை. அப்போது மருமகள் சந்தியா வெளியே வந்து மாமியார் சிவகாமியை அத்தை என்று தொட்டு எழுப்புகிறாள். யோசனையில் இருந்து சுய நினைவுக்கு வரும் சிவகாமி, என்ன என்று கேட்கிறார். அப்போது, பார்வதி, டெலிபோன் மணி அடிப்பதுகூட தெரியாமல் அமர்ந்திருந்தீர்கள் என்று கூறுகிறாள். அதற்கு, சிவகாமி அது ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்துவிட்டேன் என்று கூறி சமாளிக்கிறார். சந்தியா, தனது மாமியார் சிவகாமியிடம் உங்க ஒடம்புக்கு ஒன்னுமில்லைதானே, நீங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாள்.
அப்போது மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது. பார்வதி சென்று போனை எடுக்கிறாள். மறுமுனையில் பார்வதியை ஒரு தலையாக காதலிக்கும் இளைஞன் கால் செய்து பேசுகிறான். அம்மா, அண்ணி எல்லோரும் இருக்கும்போது பேசுகிறான் என்ற சங்கடத்தில் அவனைத் திட்டிவிட்டு போனை வைத்துவிடுகிறாள். இவள் யாரை திட்டுகிறாள் என்று சிவகாமி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மறுபடியும் டெலிபோன் மணி அடிக்கிறது. இந்தமுறை சிவகாமி போனை எடுத்து யார் என்று கேட்கிறார். ஆனால், இந்த முறை எதுவும் கேட்கவில்லை. ஆனால், சிவகாமி, இந்த செந்தில் துணி வாங்கறவுங்களுக்கு கடை போன் நம்பர் தராமல் ஏன் வீட்டு போன் நம்பர் தருகிறான். வீட்டுக்கு போன் பண்ணி விசாரிக்கிறார்கள் என்று கூறிவிட்டு சரி போங்க என்று கூறிவிட்டு நகர்கிறாள்.
இதற்கு அடுத்த காட்சியில், சரவணன் தனது மனைவி சந்தியாவுக்கு ஏதாவது புத்தகம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று ஒரு புத்தகக் கடைக்கு செல்கிறான். அங்கே நீண்ட தேடலுக்குப் பிறகு, சக்தி கொடு, போராடி வெற்றி பெற்ற பெண்கள் என்ற புத்தகத்தை வாங்குகிறான்.
அடுத்த காட்சியில், வீட்டில் பின்புறம், வேலைக்காரி பெண் வேலை செய்துகொண்டிருக்கிறாள். அங்கே செல்லும் சந்தியாவை அவள் பாராட்டி தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறாள். சந்தோஷம் இருந்தாலும் துக்கம் இருந்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் சந்தியாவின் சுபாவத்தைப் பாராட்டுகிறாள். பின்னர், சந்தியா செய்ய வந்த வேலையை தான் செய்வதாக வாங்கி வைத்துக்கொண்டு அவளை அனுப்பிவிடுகிறாள்.
இதையடுத்து, சிவகாமி வீட்டில் சட்டைக்கு பட்டன் தைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது, சரவணனின் அப்பா உள்ளெ வருகிறார். அப்போது, அங்கே வரும் சரவணன், ஒரு கப்பில் தான் செய்து எடுத்துவந்த பாயசத்தை அம்மாவுக்கு ஊட்டி விடுகிறான். அங்கே இருந்த அப்பா எனக்கு இல்லையாப்பா என்று கேட்க சிவகாமி, பாயசம் சாப்பிட்டால் சுகர் அதிகம் ஆகும். பிறகு, நான் கொடுக்கிற கசாயத்தையும் குடிக்க வேண்டும் என்று கூற அவர் போலியாக கோபித்துக்கொண்டு உங்க பாயசம் தேவையில்லை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பாயசம் எதற்கு என்று சிவகாமி விசாரிக்க, அம்மா கோபம் எல்லாம் போய் எப்போதும் போல சிரித்த முகத்துடன் இருக்கிறீர்கள். அதுதான் காரணம் என்று கூறுகிறார்.
இதையடுத்து, தனது மனைவியைப் பார்க்க வரும் சரவணன், சந்தியாவுக்கும் பாயசத்தை எடுத்துக்கொண்டு சென்று தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். ஆனால், சந்தியா இது எனக்கு மகிழ்ச்சி இல்லை நிம்மதிதான். வழக்கமான வாழ்க்கையில் கூடுதலாக ஏதாவது நல்லது நடந்தால் சந்தோஷம், ஆனால், இது ஏற்கெனவே இருக்கிற பிரச்னைகள் போய் அமைதியாக இருப்பதால் நிம்மதி என்று கூறுகிறாள். இதற்கு, சரவணன், இந்த பழைய கிரீஸ் டப்பா காமெடி தெரியுமா, நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம் இது போன்ற சந்தோஷத்தை உடனே கொண்டாடிடனும், அப்புறம் பார்த்துக்கலாம்னு கொஞ்சம் தள்ளிப்போட்டால், அதற்குள் கடவுள் அந்த கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்சனு நம்மளை உதைச்சு விளையாட தயாரா இருப்பாரு. அப்புறம் திரும்பிப் பார்க்ககூட முடியாது. அடுத்த பிரச்னை வந்துவிடும் என்று கூறுகிறான். இது நல்லா இருக்குங்க என்று சந்தியா சரவணனைப் பாராட்டுகிறாள். சரவணன் தனது மனைவிக்கு பாயசத்தை ஊட்டிவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மா சிவாகாமி தனது மனைவியை நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டதை சரவணன், அம்மாவுக்கும் மனைவிக்கும் பாயசம் ஊட்டிவிட்டு கொண்டாடுகிறான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.