Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலை விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
ராஜா ராணி 2 சீரியலில் வீட்டில் நகை திருடிய அர்ச்சனாவும் செந்திலும் சரவணன் காட்டிய ஆதாரம் மூலமாக அம்பலப்பட்டு அசிங்கப்பட்டனர். சந்தியா நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில், சந்தியா பெட் ரூமில் தனியாக அமர்ந்து நடந்த சம்பவங்களையும் சரவணன் பேசியதையும் நினைத்து சந்தோஷப்படுகிறாள். இந்த நகை விஷயம் சந்தியாவுக்குகூட தெரியக்கூடாதுனு நினைச்சேன். ஏன்னால், சந்தியாவுக்கு அர்ச்சனா பற்றி தப்பான அபிப்ராயம் உருவாகிவிடக் கூடாதுனுதான் என்று கூறியதை நினைத்து சந்தோஷப்படுகிறாள்.
அப்போது உள்ளே வரும் சரவணன், ஒரு பெரிய பிரச்னை முடிஞ்சுடுச்சு இல்லையா என்று கேட்கிறான். ஆமாம் என்று கூறும் இந்த நகை திருட்டு பிரச்னை யாருக்கும் தெரியாமல் தனக்கும்கூட தெரியாமல் வைத்திருந்ததைப் பற்றிக் கூறுகிறாள். அதற்கு சரவணனும் நீங்களும் அர்ச்சனா பேங்க்ல அடகு வைத்த ரசீதை வாங்கி வந்ததைச் சொல்கிறான். இந்த பிரச்னையை யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்த மாதிரி முடிச்சுடலாம்னு நினைச்சேன். ஆனால், இந்த அர்ச்சனாவும் செந்திலும் இப்படி பேச வச்சுட்டாங்க. என்ன பண்றது. எப்படியோ ஒரு பெரிய பிரச்னை முடிஞ்சுடுச்சு. இனிமேல் நீங்க நிம்மதியா இருங்க.. அம்மாவும் உங்களை புரிஞ்சுகிட்டாங்க. இனிமேல் உங்களை எங்க அம்மா சந்தேகப்பட்டு திட்டமாட்டாங்க… ஆனாலும் அவங்க எந்த நேரத்தில என்ன பண்ணுவாங்கனு தெரியாது என்று சொல்கிறான்.
அதற்கு சந்தியா, இல்லிங்க, அத்தை நான் நம்புறேன் அவங்க முழுசா ஒரு விஷயத்தை நம்பாமல் வாய் வார்த்தையா ஏத்துக்ககூடியவங்க இல்ல. என்மேல இப்ப வந்திருக்கிற நம்பிக்கை முழுசா இருக்கும்னுதான் என் மனசுக்கு தோணுது என்று கூறுகிறாள். அதற்கு சரவணனும் அப்படிதான் இருக்கனும் என்று நம்புவதாக கூறுகிறான்.
இதையடுத்து, சந்தியா தனக்கு நிறைய வேலை இருப்பதாகக் கூறிவிட்டு செல்கிறாள். சந்தியா போன பிறகு, கீழே ஒரு பத்திரம் இருக்கிறது. அதை எடுத்துப் பார்க்கும் சரவணன், இந்த பச்சை பேப்பர்ல எழுதியிருந்தா அது ஏதாவது டாக்குமெண்ட்டாகத்தான் இருக்கும். சந்தியா இதை ஏன் கீழ போட்டு இருக்காங்க என்று எடுத்து வைக்கிறான்.
அடுத்த காட்சியில், அர்ச்சனா கையில் நகையுடன் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறாள். எவ்வளவு உஷாராக இருந்தும் மாட்டிகிட்டோமே, நம்ம கிரைம் லிஸ்ட் வேற கூடிகிட்டே போகுதே, கால்ல விழுந்து கண்ணீர் விட்டு கதறுற மாதிரி ஆகிடுச்சே. அந்த சந்தியா அவளே மாட்டினாலும் தப்பிச்சிடுறா, கோர்த்துவிட்டாலும் தப்பிச்சிடுறா, ஆனால், நான் மாட்டாத மாதிரி இருந்து கடைசியா மொத்தமா மாட்டிக்கிறேனே. என்ன டிசைண்டா சாமி இது என்று அந்த நகையைக் காட்டி சொல்கிறாள். அப்போது உள்ளே வரும் அவளுடைய கணவன் செந்தில் அடிச்சன்னா என்று அர்ச்சனாவை திட்டுகிறான். இதனால்தான் இவ்வளவு அசிங்கப்பட்டு நிக்கிறோம். அர்ச்சனா இல்லை என்று கூறி சமாளிக்கிறாள்.
ஆனால், செந்தில், தான் சொல்வதை கேட்டிருக்கிறயா, என்னைக்காவது நான் சொன்னதை கேட்டயா, என்னைக்காவது என்னை மதிச்சிருக்கியா? உன்னால பணத்துக்கு பணமும் போய் மானம் மரியாதை போய் சே என்று திட்டுகிறான். ஆனால், அர்ச்சனா, பிரச்னைனு வந்தா என்ன மட்டும் குறை சொல்கிறீர்கள். நீங்கதான் பேசி பிரச்னையா பெருசாக்கிட்டிங்க. நான் நம்ம பிரச்னைனு பார்க்கிறேன். உங்கள் அண்ணன் அண்ணி ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதே போல நாம் ஒற்றுமையா இருக்க வேண்டும். எப்படியா இருந்தாலும் நகை நம்ம கைக்கு வந்துடுச்சு பார்த்தீங்களா என்று கூறுகிறாள்.
அதற்கு செந்தில் மத்தவங்க கிட்ட பேசுற மாதிரி எங்கிட்ட பேசாத உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். இனிமேல் என்னை கேட்காம எதையும் செய்யக் கூடாது. செய்தனா, எங்க அம்மா சொல்றதுக்கு முன்னாடி நானே உன்னை உங்க அம்மா வீட்டுக்கு கொண்டுபோய் விட்டுடுவேன் என்று எச்சரித்து விட்டு செல்கிறான். செந்தில் வெளியே சென்றபிறகு, நல்ல வேளை அத்தை மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது நான்தாங்கிறது வெளியே வராம தப்பிச்சோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.
அடுத்த காட்சியில், சரவணன் தனது ஸ்வீட் கடையில் தனது மனைவி சந்தியாவை நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு நோட்டில் சரவணன் சந்தியா என்று எழுதிப் பார்க்கிறான். அப்போது காற்றில் படபடக்கும் காலண்டரைப் பார்த்து கவலைப் படுகிறான். ஏனென்றால், சந்தியா 3 மாசத்தில் இந்த குடும்பத்துக்கு ஏத்த நல்ல மருமகள் என்று நிரூபிக்க வேண்டும் என்ற கெடு கொடுத்தது முடியப்போகிறது என்பதை நினைத்து கவலைப்படுகிறான். அம்மா வைத்த பரீட்சையில் சந்தியா பாஸ் பண்ணிவிட்டாங்களா இல்லை என்பதை அம்மாதான் சொல்ல முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.
அப்போது கடைக்கு வரும் சரவணனின் அப்பா, என்ன என்று விசாரிக்கிறார். இப்பதான் ஒரு பெரிய எரிமலை ஓய்ந்தது அதற்குள்ள என்ன என்று கேட்கிறார். அதற்கு சரவணன் அதற்குள் இன்னொரு பெரிய எரிமலை வந்துடுச்சு என்கிறான். அதற்கு அவனுடைய அப்பா என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு சரவணன் 3 மாசத்துக்கு முன்னாடி அம்மா கொடுத்த கெடு இன்னும் 2 நாள்ல முடியப் போகிறது என்று கூறுகிறான். அதற்கு அவனுடைய அப்பா, “அப்ப ராகுகாலம் போய் எமகண்டம் வருதுனு சொல்ற… ஆனால், உங்க அம்மா சந்தியாவுக்கு வைத்த பரீட்சையில் சந்தியா பாஸ் பண்ணிவிட்டாள். ஊருக்கு போய் நல்ல மருமகள்னு பரிசு வேற வாங்கிட்டு வந்திருக்கிறாளே. ஊருக்கு போன அப்போ எங்க அம்மாவே இப்படி ஒரு நல்ல மருமகள் கிடைப்பதற்கு சிவகாமி நீ கொடுத்து வச்சிருக்கனும்னு பாராட்டினாங்களே… குடோனை எரிச்சதில் தப்பு செய்தது அர்ச்சனாதானு நிரூபிச்சா இல்லையா. இந்த நகை விஷயத்தில் அர்ச்சனாவும் செந்திலும் எவ்வளவு பெரிய நாடகம் நடத்தினாங்கனு நம்ம எல்லோருக்கும் தெரியும். நாம காஞ்சிபுரம் போய் 10 நாள் மாட்டிகிட்ட அப்போ சந்தியாதான் உதவியா இருந்தான்னு சிவகாமி வாய்விட்டு பாராட்டினா இல்லையா. 3 மாசம் கெடு முடிந்தாலும் சந்தியா இந்த பரீட்சையில் பாஸ் ஆகிட்டானுதான் எனக்கு தோணுது என்று கூறுகிறார். அதற்கு சரவணன், ஆனால், அம்மாவுக்கு தோணனும் இல்லையா, அவங்க மனசுல என்ன ஓடுதுனு தெரியனும் இல்லையா? என்று கேட்கிறான். அதற்கு அவர், அது என்னமோ உண்மைதான். உரே கிழக்கு போனா இவ மட்டும் வடக்க போவாள். எனக்கு என்ன தோணுது தெரியுமா சரவணா, உனக்கும் சந்தியாவுக்கும் ஒரு ஆழமான பந்தம் உருவாயிடுச்சு. அதை நீங்க ரெண்டு பேரும் உணர்றீங்களோ இல்லையோ நான் உணர்றேன். அவ்வளவு சீக்கிரம் உங்களை யாராலும் பிரிக்க முடியாது. நான் சிவகாமியையும் சேர்த்துதான் சொல்றேன். அவ என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். உங்க ரெண்டு பேரோட முடிவுதான் முக்கியம். வாழப்போறது நீங்க ரெண்டு பேரும்தான். உன்னாலயும் சந்தியாவவிட்டு பிரிஞ்சிருக்க முடியாது. அவளாலும் உன்னை விட்டு பிரிஞ்சி வாழமுடியாது. நீ உன் வேலையைப் பாரு. நடப்பது நடக்கும்… ஆண்டவன் துணையாக இருப்பான் என்று ஆதரவு சொல்லிவிட்டு செல்கிறார்.
அடுத்த காட்சியில், சரவணனின் அப்பா வர வரன் என்று போனில் பேசிக்கொண்டே வீட்டுக்குள் செல்கிறார். சிவகாமி யாருங்க போனில் என்று கேட்கிறார். அதற்கு அவர், என்னோட ஃபிரெண்ட் கல்யாணம் முடிஞ்ச கையோட வெளிநாடுக்கு போய்விட்டானாம். இப்போ ஊருக்கு வந்திருக்கானாம். உன்னை பார்க்கனும் ஊருக்கு வான்னு சொல்றான். அதற்கு சிவகாமி எங்கிட்ட இருந்து எப்போ தப்பிச்சு போகலாம்னு நினைக்கிறீங்களா? என்று கேட்கிறாள். அதற்கு அவர் நீ வேணும்னா வா. நீ எங்க அம்மா கிட்ட ஜாலியா பேசிக்கொண்டிரு நான் ஜாலியா ஊர் சுற்றுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி ஊர சுத்துற வயச பாருங்க என்று கேட்கிறாள். அதற்கு, அவர் வயசுல என்ன இருக்கு சிவகாமி அது வெறும் நம்பர், நான் கண்டிப்பா போகப்போறேன். அதான் நம்ம வீட்டு பிரச்னை எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சே. இனிமேல் எந்த பிரச்னையும் இருக்கப்போறது இல்லையே என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி கோபமாக பார்க்கிறார்.
சிவகாமியின் பார்வையை புரிந்துகொண்ட அவர், என்ன சிவகாமி அப்படி பார்க்கிற, நகை பிரச்னை முடிஞ்சு போச்சு. சந்தியா டாக்குமெண்ட்டை காட்டி நகையை தான் திருடலனு நிரூபிச்சுட்டா… சரவணன் ஒரு படி மேல போய் வீடியோ ஆதாரத்தை காட்டிட்டான். அர்ச்சனாவும் செந்திலும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுட்டாங்க, நீயும் மன்னிச்சு ஏத்துக்கிட்ட. அப்போ எல்லா பிரச்னையும் முடிஞ்சுடுச்சுதான்னே அர்த்தம் என்று கேட்கிறார். ஆனால், சிவகாமி, சரிங்க அதுக்கு என்ன இப்போ என்று கேட்கிறார். அதற்கு, அவர் இது வெறும் நகைப் பிரச்னை இல்லையே. சந்தியாவைப் பற்றி நீ மனசுல வச்சிருந்த தப்புக்கணக்கு உடைஞ்சிருச்சு இல்ல. அதனால், நீ தேவை இல்லாமல் சந்தியாவை சந்தேகப்படமாட்ட, இந்த வீட்ல தேவையில்லாம பிரச்னை வராதுதானே அதைத்தான் சொல்றேன் என்று கூறுகிறார்.
அதற்கு சிவகாமி நான் தான் இப்போ தேவை இல்லாமல் பித்துக்கிட்டி திரியறேன். தேவையில்லாம எல்லோரையும் வம்பு இழுத்துக்கிட்டு திரியறேன் இல்ல என்று சிவகாமி கோபித்துக்கொள்கிறார். அதற்கு அவர் நான் அப்படி சொல்லல சிவகாமி நீ தப்புனு நினைச்ச ஒரு விஷயம் சரினு ஆகிடுச்சு இல்ல. அப்ப குழப்பம் சரியாகிடுச்சுனுதான்னே அர்த்தம் என்று கேட்கிறார். அதர்கு சிவகாமி, இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்க அப்பா சந்தியா மேல நான் அபாண்டமாக குற்றம் சுமத்தி அசிங்கப்படுத்திட்டேன். அப்படிதான, அதை சுத்தி சுத்தி திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். இதைக் கேட்ட சிவகாமியின் கணவர், எப்படி இவ கரெக்ட்ட கண்டுபிடிச்சா என்று மனதில் நினைத்துக்கொண்டு அப்படி இல்ல சிவகாமி, அவங்க 2 பேரும் நல்ல புருஷன் பொண்டாட்டி இல்லைனு நீ நினைச்சுகிட்டு இருந்த, ஆனால், பிரச்னைனு வந்ததும் ரெண்டு பேரும் எப்படி ஒன்னா ஒத்துமையா நின்னு போராடுறாங்கனு பார்த்த இல்ல. அது ரொம்ப முக்கியம் இல்லையா என்று கேட்கிறார். அதைக் கேட்டு சிவகாமி யோசிக்கிறார்.
தொடர்ந்து பேசும் சிவகாமியின் கணவர், “கல்யாணம் ஆகி 30 , 40 வருஷம் ஆனாலும் இன்னும் மனப்பொருத்தம் இல்லாமல் தினமும் சண்டை போட்டு வாழறவங்க நிறையபேர். கணவன் மனைவி என்பது விட்டுக்கொடுத்து வாழறது. விட்டுக்கொடுப்பதை ஒருத்தர் மட்டும் செய்தால் அவர்கல் ஏமாளி, மத்தவங்க ஏமாத்தறங்கனு அர்த்தம் 2 பேரும் விட்டுத்தறனும் அப்பதான் வண்டி நல்லா ஓடும். சைக்கிள் ஓட்டும்போது செயினும் சர்க்கரமும் சரியா பொருந்தி போகுது இல்லையா அப்படி இருக்கனும் கணவன் மனைவிங்கறவங்க. நிறைய பேருக்கு அது அமையறதே இல்லை. வெளியே ஒத்துமையா இருப்பதாக காட்டுக்குவாங்க. ஆனால், உண்மை என்ன தெரியுமா சிவகாமி, நல்லா வாழறவங்க கொஞ்சம் பேருதான். நல்லா வாழற மாதிரி காட்றவங்கதான் அதிகம். பிரச்னைனு வந்தா தனக்காக யோசிக்காம தன்னோட வாழ்க்கை துணைக்காக யோசிக்கனும். அப்பை பார்த்தா நம்ம சந்தியாவும் சரவணனும் நம்ம ஊர்லயே மிகச்சிறந்த கணவன் மனைவினு நான் சொல்வேன் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட சிவகாமி, சரி இந்த கதையை எல்லாம் எங்கிட்ட சொல்றீங்க என்று கேட்கிறார். அதற்கு, வேற எதுக்கு நீ புரிஞ்சுக்க வேண்டும்னுதான் என்று சொல்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம நிற்கும்போது பெத்தவங்க நமக்கு வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும். ரெண்டு பேரையும் அவங்க போக்கிலயே விடு சிவகாமி… எல்லா நல்லதும் தன்னால நடக்கும்.. இதுக்கு மேல அவ எப்படி தன்னை நிரூபிப்பா, இந்த வீட்ல வாக்கப்பட்டு வந்த நாள்ல இருந்து இந்த குடும்பத்துக்கு எதை நல்லதோ அதைத்தான் செய்திருக்கா. நீ அவளை புரிஞ்சுக்காம ரொம்ப மோசமா நடந்துகிட்டயோன்னு தோணுது என்று கூறுகிறார். இதைக்கேட்டு கோபமடையும் சிவகாமி இப்ப அதற்கு என்னை என்ன பண்ண சொல்றீங்க, அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்றீங்களா என்று கோபத்துடன் கேட்கிறார்.
சிவகாமியின் கணவர் பொறுமையாக, “இந்த கால்ல விழறது எல்லாம் அநாவசியம், நீ நினைச்சா அதைவிட சிறப்பா ஒன்னு பண்ணலாம். நீ சந்தியாவுக்கு கொடுத்த 3 மாசம் கெடு முடியுது. அந்த கெடு விதிச்சப்ப நீ என்ன சொன்ன, இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா நீ இருக்கிறியான்னு நான் வெக்கிற பரீட்சைன்னு சொன்ன, எனக்கு தெரிந்து அந்த பரீட்சைல அவள் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆயிட்டா, ஆனால், நீ நல்ல வாத்தியாரா இருந்தா நியாயமான வாத்தியாரா இருந்தா சந்தியாவுக்கு 100க்கு 100 மார்க் கொடுத்து பாஸ் பண்ண வைக்கனும், ஒருவேளை உன்னோட பிடிவாதம் உன்னை தடுக்கலாம். அதுக்கு வேணும்னா ஒரு 4, 5 மார்க் குறைச்சுக்கோ, ஆனால், சந்தியாவுக்கு நல்ல மார்க்கோட பாஸ் பண்ண வை. இன்னொரு வகையில சொன்னா சந்தியாவுக்கு பரீட்சை முடிஞ்சுடுச்சு. சொல்லப்போனா உன் நேர்மைக்கான பரீட்சை இப்பதான் ஆரம்பிச்சிருக்கு என்று கூறிவிட்டு எழுந்து செல்கிறார். ஊச்சலில் அமர்ந்திருக்கும் சிவகாமி யோசிக்கிறார்.
அடுத்த காட்சியில், பெட்ரூமில் சந்தியா கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். தனது மாமியார் சிவகாமி தனக்கு கொடுத்த கெடு முடிகிறது. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது உள்ளே வரும் சரவணன், நினைச்சேங்க, ஒரு மாதிரி படபடனு வருது இல்ல, எனக்கே அந்த மாதிரிதான் இருக்குங்க, கஷ்டம் வந்தாதான் தாங்க முடியாதுனு நினைச்சேன். சந்தோஷம் வரும்போது தான்கறது அதைவிட கஷ்டம் என்ன நடக்குமோன்னு குழப்பமா இருக்கு, உங்க கண்ணை பார்த்தாலே தெரியுது. எனக்கு அப்படிதாங்க, ஆனால், இப்போ எனக்கு அப்படி இல்லை. நீங்க வேணா பாருங்க, எல்லாமே நாம நினைச்ச மாதிரிதான் நடக்கப் போகுது. என்னைவிட நீங்க பரவாயில்லைங்க. அமைதியாதான் இருக்கீங்க எனக்குதான் படபடனு இருக்கும். நீங்க காலேஜ் டெஸ்ட்ல பரீட்சை எழுதி பாஸானீங்க இல்ல, அது மாதிரி இந்த டெஸ்ட்லயும் பாஸ் ஆகிடுவிங்க, இன்னையோட அம்மா சொன்ன 3 மாசம் முடியப் போகுது, நாளைக்கு அம்மா நிச்சயமா உங்களை ஏத்துக்கத்தான் போறாங்க, ஆனால், இப்பவே காலைல ஆகிடாதான்னு உள்ளுக்குள்ள பரபரன்னு இருக்குங்க, இந்த பரீட்சை எழுதிட்டு ரிசல்ட் வர அன்னைக்கு எப்படி இருப்பாங்கனு இப்பதாங்க புரியுது,” என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா மனதுக்குள் சிரிக்கிறாள். ஆனால், எதுவும் சொல்லாமல், கட்டிலில் தூங்கச் செல்கிறாள்.
இதைப் பார்த்த சரவணன், ஏங்க தூக்கம் வருதா, சரி தூங்குங்க, நீங்க பரீட்சை நல்லாதான் எழுதியிருக்கீங்க, நல்ல ரிசல்ட்டாதான் வரும் பாருங்க என்று நம்பிகை கூறிவிட்டு சரவணன் தரையில் பாய் விரித்து படுத்து தூங்குகிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. சந்தியாவுக்கு சிவகாமி கொடுத்த 3 மாதம் கெடு முடிகிறது. சிவகாமி, சந்தியாவை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வாரா? என பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.