Raja Rani 2 Serial: பார்வதியை பலாத்காரம் செய்ய முயன்ற பாய் ஃபிரண்ட்; அதிரடியாக காப்பாற்றிய சந்தியா

இந்த புரோமோ பார்வையாளர்கள் இடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனால், இந்த வாரம் ராஜா ராணி 2 சீரியல் எபிசோடுகளில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

Raja Rani 2 Serial, vijay TV, Raja Rani 2 Seria today promo video, Alya Manasa, Sandhya saves Parvathy from boy friend, Sidhu, Praveena, Sivagami, Raja Rani 2 promo vidie, vira video, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் புரோமோ வீடியோ, பார்வதியை அதிரடியாக காப்பாற்றிய சந்தியா, ஆல்யா மானசா, சித்து, சரவணன், vijay TV Raja Rani 2 Serial, Tamil TV Serial news, raja rani updates

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து பார்வையாளர்களை பரபரப்பாக்கியுள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில், சந்தியாவை அவளுடைய நாத்தனார் பார்வதி விரோதமாக பார்த்தாலும், பார்வதியை பாய் ஃபிரண்ட் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது பாய்ந்து சென்று அதிரடியாக காப்பாற்றுகிறார். அவன் சந்தியாவை தாக்க முயற்சிக்கும்போது சரவணன் வந்து அதிரடியாக காப்பாற்றுகிறான். இப்படி விறுவிறுப்பாக இந்த வார எபிசோடுகள் உள்ளதாக விஜய் டிவி புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ ரசிகர்கள் இடையே ராஜா ராணி 2 சீரியலின் இந்த வார எபிசோடுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா ராணி சீரியல் முதல் சீசனில் ஹீரோயீனாக நடித்த ஆல்யா மானசாதான் ராஜா ராணி 2வது சீசனிலும் ஹீரோயினாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சித்து ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருகிற சந்தியா (ஆல்யா மானசா)வின் வாழ்க்கையில் திடீரென பல நிகழ்வுகள் நடக்கின்றன. அவளுடைய பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள். அண்ணன், அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதற்காக படிக்காத ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஒரு பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த சரவணனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறான். பொய் சொல்லி திருமணம் செய்து வைத்துவிட்டார்கள், படித்த பெண் மதிக்கமாட்டாள் என்று மாமியார் சிவகாமி மருமகள் சந்தியாவை இடித்துரைத்துக்கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில், ஓரவுத்தி அர்ச்சனா, எப்படியாவது சந்தியாவுக்கு குடும்பத்தில் கெட்டப் பெயர் வர வைத்து ஓரங்கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறாள்.

காலேஜ் படிக்கிற பார்வதிதான் சந்தியாவின் நாத்தனார். பாசமாக இருந்த அண்ணன்கள் கல்யாணத்துக்கு பிறகு மாறிவிடுகிறார்கள். அதற்கு காரணம் அண்ணிதான் என்று சந்தியாவின் நாத்தனார் பார்வதி அண்ணி சந்தியா மீது கோபத்துடன் செயல்படுகிறாள். கணவன் சரவணன் அன்பாகவும் நல்லவனாகவும் இருந்தாலும் சந்தியா தன்னை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்று தவறாக புரிந்துகொண்டு சந்தியாவுடன் பேசாமல் கவலைப்படுகிறான். இதில் சந்தியாவுக்கு ஒரே ஆறுதல் மாமனார் சுந்தரத்தின் ஆதரவு மட்டும்தான்.

குடோன் தீ வைப்பு சம்பவம், நகை திருட்டு பழி என எல்லாவற்றிலும் சந்தியா தன்னை நிரூபித்து மாமியார் சிவகாமியின் நம்பிக்கையை பெற்று வருகிறார். நகராட்சி அதிகாரி லஞ்சம் கேட்டபோது தரமறுத்ததால் ஸ்வீட் கடையை சீல் வைத்தபோது, சந்தியா உயர் அதிகாரிக்கு வீடியோ அனுப்பி அந்த அதிகாரியை செயல்பட்டு நல்ல பெயர் வாங்கி இருக்கிறாள்.

இதனிடையே, சந்தியாவின் நாத்தனார் பார்வதி தனது பாய் ஃபிரண்ட் உடன் வெளியே செல்கிறாள். இதைப் பார்த்த சந்தியா, பார்வதியை கண்காணிக்கிறாள்.

இந்த சூழ்நிலையில்தான், ராஜா ராணி 2 சீரியலில், பார்வதியை அவளுடைய பாய் ஃபிரண்ட் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது சந்தியா கதவை உடைத்துகொண்டு சென்று காப்பாற்றுகிறாள். அவன் சந்தியாவை தாக்கும்போது கணவன் சரவணன் அதிரடியாக வந்து காப்பாற்றுவதாக விஜய் டிவி புரொமோ வெலியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை இந்த வாரத்துக்கான எபிசோடுகளில்தான் ராஜா ராணி 2 சீரியலில் இப்படி விறுப்பான பரப்பான சம்பவங்கள் நடக்க உள்ளது. பார்வதியைக் காப்பாற்றிய சந்தியாவுக்கு அவளுடைய கணவன் சரவணன் நன்றி சொல்கிறான்.

ஏற்கெனவே, ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் உள்ள சந்தியா, குடும்பத்தில் யார் தனக்கு கெடுதல் செய்தாலும் அவர்களுக்கு நல்லதையே செய்கிறாள். அந்த வகையில், தன்னை விரோதமாக நினைத்த நாத்தனாரை அவளுடைய பாய் ஃபிரண்ட் கையில் இருந்து காப்பாற்றுகிறாள். இந்த புரோமோ பார்வையாளர்கள் இடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனால், இந்த வாரம் ராஜா ராணி 2 சீரியல் எபிசோடுகளில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Raja rani 2 serial today promo video sandhya saves parvathy from boy friend

Next Story
Sun TV Serial : பாட்டியை சிறைக்கு அனுப்பிய அர்ஜூன் : வருத்தத்தில் பிரதாப், கல்பனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express