Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறான். இன்று பார்வதியின் நிச்சயதார்த்தம் முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் சந்தியா சொன்னபடி, பார்வதி படிப்பு முடிந்த பிறகு பார்வதி திருமணத்தை ஒரு வருஷம் கழித்து வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றபிறகு, வீட்டில் பிரச்னை வெடிக்கிறது. இதையடுத்து, சரவணன், சந்தியா இனிமேல் இந்த வீட்ல இருக்க வேண்டாம் என்று கூறிவிட்டு அவளை அனுப்புவதாகக் கூறுகிறான். சந்தியா வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் சரவணன் உறுதியாக இருக்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், பார்வதியின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிகிறது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, கல்யாணம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று சிவகாமி தனது கணவர் சுந்தரத்திடம் கேட்கச் சொல்கிறார். சுந்தரம் சம்மந்தியிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு, பாஸ்கரின் அப்பா உங்களால் என்ன செய்ய முடியோ அதை செய்தால் போதும் என்று கூறுகிறார். அடுத்தது, கல்யாணம் எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று பேசும்போது, சம்மந்தி, அதாவது பாஸ்கரின் அம்மா, பார்வதி படிப்பு இன்னும் முடியவில்லை. அதனால், சந்தியா சொன்னபடி பார்வதி படிப்பு முடிய ஒரு வருஷம் ஆகும். அதனால், ஒரு வருஷம் கழித்து கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிடுகிறார்.
இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சிவகாமி, சந்தியா மீது கோபம் கொள்கிறார். ஆனால், சம்மந்தி அம்மா, என்றைக்கா இருந்தாலும் பார்வதிதான் எங்கள் வீட்டு மருமகள், அதனால் நீங்க பயப்பட வேண்டாம் என்று உறுதி கூறிவிட்டு புறப்பட்டு செல்கிறார்கள். நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த பக்கத்துவிட்டு பெண்களும் கவலைப்படாதீங்க, மாப்பிள்ளை வீட்டார் நல்லவங்களாதா இருக்காங்க என்று ஆறுதல் சொல்லிச் செல்கிறார்.
எல்லோரும் போன பிறகு, சிவகாமி, உன்னை யாரு மாப்பிள்ளை வீட்டுக்கு போய் கல்யாணம் இப்போ வேண்டாம், பார்வதி படிப்பு முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லச் சொன்னது. ஒரு வருஷம் கழிச்சு அவங்க கல்யாணம் பண்ணுவாங்கணு என்ன நிச்சயம் என்று கேட்கிறார். சந்தியா நான் உங்ககிட்ட நம்ம வீட்லதான் சொன்னேன். மாப்பிள்ளை வீட்டாரிடம் போய் சொல்லவில்லை என்று கூறுகிறாள். ஆனால், யாரும் நம்ப மறுக்கிறார்கள். இதுதான் சமயம் என்று அர்ச்சனா, பார்வதியை வாழ்க்கையை கெடுப்பதற்காக திட்டம்போட்டு செய்தயா என்று கேட்கிறாள். செந்தில் தனது மனைவி அர்ச்சனாவை நீ பேசாதே, எதுவாக இருந்தாலும் அம்மா பேசிக்கொள்வார்கள் என்று கூறுகிறான்.
பார்வதி, அண்ணி என்னுடைய நல்லதுக்காகத்தான் நீங்க இதை செய்திருப்பீங்க, ஆனால், எனக்குதான் படிப்பே வரமேட்டேங்குதே அண்ணி என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
சரவணனின் சின்ன தம்பி ஆதி, சந்தியாவைப் பார்த்து நீங்க எதுக்கு சம்மந்தி வீட்டுக்கு போய் பேசிவிட்டு வந்தீர்கள் என்று கேட்கிறான். அதற்கு சந்தியா நான் பேசவே இல்லை என்று கூறுகிறாள். ஆனால், ஆதி, உங்களுக்கு பார்வதி கல்யாணத்துல பொறாமை, நீங்க படிக்காத எங்க அண்ணனை கல்யணம் பண்ணிகொண்டு கஷ்டப்படுகிறீர்கள். ஆனால், பார்வதி பேங்க் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கப்போகிறாள் என்கிற பொறாமை என்று கூறுகிறான். பார்வதி, அண்ணி அப்படி செய்யமாட்டாங்க, ஆதியை அமைதியா இருக்க சொல்லுங்க என்று கூறுகிறாள். இதைக்கேட்டு சந்தியா மிகவும் வருத்தப்படுகிறாள்.
எல்லோரும், இதைக்கேட்டு கோபப்படும் சரவணன், போதும் நிறுத்துங்க, இன்னும் இதுபோல எத்தனை பழிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குது. இந்த குடும்பம் உங்க மேல தொடர்ந்து பழிபோட்டுக்கிட்டே இருக்கும். நீங்க எத்தனை முறை நிரூபிப்பீங்க, இனிமேல் நீங்க இந்த வீட்ல இருக்க வேண்டாம் என்று சொல்கிறான். சந்தியா இல்லை, இது என் வீடு, என் குடும்பம் நான் இந்த வீட்டை விட்டு போகமாட்டேன் என்று சொல்கிறாள். ஆனால், சரவணன், சந்தியாவைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று அறையில் நீங்கள் இந்த வீட்டை விட்டு போயிடுங்க, இனிமேலும் இங்க இருந்து கஷ்டப்பட வேண்டாம். நீங்க இங்க இருக்கிறதுக்கு இந்த குடும்பத்துக்கு தகுதி இல்லை என்று கூறுகிறான். ஆனால், சந்தியா நான் போக மாட்டேன். நமக்குள்ள சின்னசின்ன பிரச்னை இருந்திருக்கலாம். ஆனால், வீட்டை விட்டு போக வேண்டும்ணு நினைச்சதில்லை. உங்களை விட்டு பிரியணும்ணு நினைச்சதில்லை என்று சொல்கிறாள். அதற்கு சரவணன், அவள் ஹேன்ட் பேக்கில் இருந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்து இது என்ன சும்மா வச்சிருக்கீங்களா என்று கேட்கிறான்.
சரவணன், சந்தியாவை பேசவே விடாமல், நீங்க இந்த வீட்ல இருந்து கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை அமைச்சுக்கோங்க, இப்போது நானே சொல்றேன். நீங்க வெளியே போங்க என்று கூறுகிறான். ஆனால், சந்தியா, இந்த டிவோர்ஸ் பேப்பருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வீட்டை விட்டு போகணும்ங்கிறது என் விருப்பமில்லை என்று சொல்கிறாள். அப்படியே இருந்தாலும், நம்ம உறவு இந்த ஒரு பேப்பர்லதான் இருக்கிறதா? என்று கேட்கிறாள். இதைக்கேட்ட சரவணன், வேண்டாம், இனிமேலும் படிக்காத எங்கூட இந்த வீட்ல இருக்கிறவங்க தர்ற கஷ்டத்தில இருக்க வேண்டாம். தனியா போய் உங்களுகு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கோங்க, பிரியறது என்னொட விருப்பமாகூட இருக்கட்டும். அப்படியே வெளியிலயும் சொல்லுங்க என்று கூறிவிட்டு டிவோர்ஸ் பேப்பரில் சரவணன் கையெழுத்து போடுகிறான். தான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று சந்தியா கதறி அழுகிறாள். டிவோர்ஸ் பேப்பரில், சரவணனும் சந்தியா திருமணம் நடந்த காட்சி தெரிய இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. பார்வதி நிச்சயம் முடிந்தவுடன், சந்தியாவை அவள் விருப்பம் போல வாழ வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தான். இப்போது சரவணன் டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்துபோட்டு சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப உள்ளதால், கணவன் மனைவி இருவரும் பிரிகிறார்களா என்று கேட்டு ரசிகர்கள் வருத்தத்துடன் ‘உச்’ கொட்டி வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.