raja rani 2 Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது.

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். நாயகனாக சித்து நடித்து வருகிறார். வழக்கம் போல் சீரியல் ரசிகர்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலில் தற்போது பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசா விலகுவதாக தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு பதில் புதிய நடிகை இனி நடிக்கவுள்ளார்.

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதை, அவரது கணவர் சஞ்சீவ் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆல்யாவும் இன்ஸ்டாகிராம் உரையாடலில் இதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தார். தற்போது அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். அவருக்கு பதில் தற்போது புதிய நடிகை இணைத்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“