scorecardresearch

கமிஷனர் அப்பாயின்மென்ட்… பேப்பரில் நியூஸ்… ராஜா ராணி சந்தியா எங்கேயோ போயிட்டாங்க!

raja rani 2 serial latest news in tamil:போலி போலீசை கைப்பிடியாக பிடித்த சந்தியாவை நிஜ போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டியுள்ள நிலையில், கம்பீரமாக செயல்பட்ட சந்தியாவை கமிஷனர் சந்திக்கிறார்.

raja rani 2 Tamil News: sandhya meets commissioner in vijaytv’s raja rani

raja rani serial tamil news: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி சீரியலுக்கு ரசிகர்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் நடிக்கும் ஆல்யா மானஸாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகையாகாது.

ஆல்யா மானஸா இந்த சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு படித்துக் கொண்டிருக்கும் சந்தியாவாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு திடீரென ஸ்வீட் கடைக்காரர் சரவணனை திருமணம் நடந்து விடுகிறது. ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை பிடிக்காமல் அண்ணன் அண்ணிக்காக பொறுமையாக நாட்களை கழித்தவர், இன்று சரவணனின் அன்பையும் மொத்த குடும்பத்தையும் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ விரும்புகிறார்.

ஆனால், சரவணனோ படித்த சந்தியாவின் கனவை சிதைத்து விட கூடாது, அவள் விரும்பியது போல் ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார். இதற்காக சந்தியாவுக்கு விவகாரத்து வழங்கி விட முடி செய்து, அவரை விட்டு விலகி விலகி போகிறார். சந்தியா, எப்படியாவது சரவணன் உடன் வாழ வேண்டும் என முடிவில் உள்ளார்.

இதற்கிடையில், நேற்றைய முன்தினம் எபிசோடில் சந்தியாவும் சரவணனும் கோயிலுக்கு செல்கின்றனர். அந்த வழியில் போலீஸ் போல வேடமிட்டு மக்களை ஏமாற்றி வந்த மோசடி கும்பலை கையும் களவுமாக பிடிக்கிறார் சந்தியா. பிறகு அவர்களை நிஜ போலீஸ் வசம் ஒப்படைக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி நேற்றைய எபிசோடில், கோயிலுக்கு சந்தியாவும் சரவணனும் நடந்த சம்பவத்தை பற்றி பேசுகின்றனர். சந்தியாவின் கம்பீரமான துணிச்சலையும் தைரியத்தையும் சரவணன் பாராட்டுகிறார். தொடர்ந்து சமீபத்தில் வைரலான துளசியைப் பற்றி இருவரும் கதைக்கின்றனர்.

மறுநாள் காலை சந்தியா தன் கையால் ஃபில்டர் காபி போட்டு எல்லோருக்கும் கொடுக்கிறார். அப்போது தான் இந்த செய்தித்தாள் வீட்டுக்கு வருகிறது. இதை சந்தியா, பார்வதி, மயிலு, சரவணன் மற்றும் அவரின் அப்பா ஆகியோர் படிக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது செய்தி தாளின் 3வது பக்கத்தில் சந்தியா – சரவணன் குறித்த செய்தி, தலைப்பு செய்தியாக இடம் பெற்று இருக்கிறது.

இதை கவனித்த சரவணனின் அப்பா, அதைப்பற்றி இருவரிடமும் கேட்கிறார். உடனே நடந்த சம்பவத்தை சந்தியா அவரிடம் விவரிக்கிறார். அவரும் சந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்க, செய்தித்தாள் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க அவற்றை சந்தியா மறைத்து வைக்கிறார்.

சிறிது நேரம் கழித்து சந்தியாவை தேடி அவரது வீட்டுக்கு வந்த தென்காசி இன்ஸ்பெக்டர், சந்தியாவை பாராட்டி கமிஷனர் உங்களை பார்க்க விரும்புகிறார் என்று தெரிவிக்கிறார். ஒருபக்கம் சந்தோஷப்பட்டாலும் மறுப்பக்கம் மாமியார் சிவகாமியை நினைத்து பயப்படுகிறார் சந்தியா.

சந்தியாவின் இந்த செயலால் ராஜா ராணி சீரியல் விறுவிறுப்பை அடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani 2 tamil news sandhya meets commissioner in vijaytvs raja rani