Advertisment

Vijay TV Serial: சரவணன் ஸ்வீட் கடைக்கு சீல் வைத்த லஞ்ச அதிகாரி… சஸ்பெண்ட் செய்ய வைத்த சந்தியா!

அங்கே இருக்கிற ஒரு பெண், “வெறும் மெரட்டலா, சஸ்பெண்ட் பண்ற அளவுக்கு பண்ணி இருக்கா, கை தட்டுங்க…” என்று சொல்ல எலோரும் சந்தியாவை பாராட்டி கைத்தட்டுகிறார்கள்.

author-image
WebDesk
Jul 28, 2021 14:11 IST
New Update
vijay tv, vijay tv serial, raja rani 2, raja rani 2 serial today episode, saravanan sweet stall sealed by bribing officer, sandhya saves sweet stall, raja rani today story, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், சரவணன் கடைக்கு சீல் வைத்த லஞ்ச அதிகாரி, லஞ்ச அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வைத்த சந்தியா, ஆல்யா மானசா, சித்து, சிவகாமி, சுந்தரம், sandhya suspends bribing officer, alaya manasa, sidhu, tamil tv serial news

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் சில நாட்களுக்கு முன்பு உணவு தரக் கட்டுப்பாடு அதிகாரி, சரவணனுடைய ஸ்வீட் கடைக்கு உணவுப் பொருள் தரக் கட்டுப்பாடு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் கேட்கிறார். அந்த அதிகாரி வீட்டுக்கு வந்து லஞ்சம் கேட்டபோது, சந்தியா லஞ்சம் தர முடியாது என்று கடுமையாக திட்டி அனுப்புகிறாள். ஆனால், சந்தியாவின் மாமியார் சிவகாமி ஒரு அதிகாரியை அப்படி திட்டலாமா என்று சந்தியாவைத்தான் திட்டுகிறார். சரவணனும் யதார்த்தத்தை சொல்லி சந்தியாவைத்தான் திட்டுகிறான். ஆனால், சரவணன், அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்காமல் ஸ்வீட் சாம்பிளை மட்டும் கொடுத்துவிட்டு வருகிறான். இதனால், அந்த அதிகாரி மேலும் கோபமடைகிறார்.

இந்த சூழலில்தான், ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், வீட்டில் காலையில் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சிவகாமி சமையலுக்கு தேவையான வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பக்கத்தில், மகள் பார்வதிக்கு காய்கறி நறுக்க சொல்லிக்கொண்டிருக்கிறார். பார்வதி காய்கறி பெரியதாக நறுக்கியதைப் பார்த்த சிவகாமி சிறியதாக கட் பண்ணச் சொல்கிறார். மாமியார் வீட்ல இப்படி செய்தால் என்னைதான் திட்டுவார்கள் என்று சொல்கிறார்.

அப்போது, சுந்தரம் வீட்டின் கூடத்தில் நின்று உடலை வளைத்து உடற்பயிற்சி செய்கிறார். அப்போது அவருக்கு இடுப்பு பிடித்துக்கொள்கிறது. இடுப்பு பிடித்துகொண்டதே என்று வலியால் துடிக்கிறார். சிவகாமி உள்ளே தைலம் எடுத்துக்கொண்டு வந்து தருகிறார். வயதான காலத்தில் அமைதியாக இருக்காமல் இதெல்லாம் தேவையான் என்று சிவகாமி தனது கணவர் சுந்தரத்தை திட்டுகிறார்.

publive-image

அந்த நேரம் பார்த்து, ஸ்வீட் கடையில் வேலை செய்யும் சிறுவன் சர்க்கரை, சரவண அண்ணே என்று கத்தி அழுதுகொண்டு ஓடி வருகிறான். எல்லோரும் என்ன என்று கேட்டு பதறிப்போகிறார்கள். கடையை அதிகாரிகள் வந்து சீல் வைத்ததை அழுதுகொண்டே சீல் வைத்துவிட்டதை சொல்கிறான். சரவணன் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்புகிறான். அவணை சந்தியா தடுத்து நிறுத்தும்போது, அவளை கொஞ்சம் அமைதியா இருக்கிறயா எல்லாமே உன்னாலதான், என்கிற விதமாக எதுவும் பேசாமல் கைகளைக் காட்டி அமைதியாக இருக்கச் சொல்கிறான்.

கடை சீல் வைக்கப்பட்டதால் சரவணன் நிலை தடுமாறி கீழே உட்கார்கிறான். சிவகாமி, இதுதான் தருணம் என்று போதும்டி உன்னாலதான் எல்லாமே, எங்க மொத்த குடும்பத்தையும் வேரோட சாய்ச்சுட்ட இல்லை என்று திட்டுகிறார். படிச்ச திமிர்ல நான் நினைச்சதைத்தான் செய்வேன்னு எம்புள்ளை உசுரோட கொன்னுட்டியேடி என்று சிவகாமி திட்டுகிறார். பரிந்து பேசும் சுந்தரத்தையும் சிவகாமி திட்டுகிறார்.

இதுதான், சமயம் என்று சரவணனின் தம்பி செந்திலும், பொண்டாட்டியை அடக்கி வைனு சொன்னேன் இவந்தான் நம்ம பேச்சை கேட்கவே இல்லையே என்று கூறுகிறான்.

அதற்கு சிவகாமி, இவள் தான் இவனை மயக்கி வச்சிருக்காளே, எம்புள்ளை பெத்த தாயைவிட இவளைத்தான் அதிகமா நம்ப ஆரம்பிச்சிட்டான் என்று சந்தியாவை திட்டுகிறார். அந்த அதிகாரியை பகைச்சிக்க வேண்டாம் வேண்டாம்னு நான் அவ்வளவு சொன்னேன். பேசியே மயக்கி அனுப்பி வச்சிட்டா, பாவம் எல்லாம் என்னாலதான், எம்புள்ளை வாழ்க்கையே தெருவுக்கு வந்துடுச்சு… கடவுளே இவனை இப்படி சித்திரவதை பண்றதுக்காகவா இவளை என் கண்ணில காட்டின.” என்று கூறுகிறார்.

publive-image

ஆதி, அம்மா பேர்ல அண்ணன் ஆசை ஆசையா ஆரம்பிச்ச கடை… நம்ம குடும்பத்தையே வாழ வைச்ச கடை என்று சொல்கிறான். அடுத்து பார்வதி, இவங்க பாட்டுக்கு அவங்க அண்ணன்கூட அமெரிக்கா போயிடுவாங்க, நம்ம அண்ணனை பிச்சை எடுக்க வச்சிட்டாங்க எல்லோரும் திட்டுகிறார்கள். சுந்தரம்தான் சும்மா இரு பவித்ரா என்று அடக்குகிறார்.

நான் எம்மனசார இதுவரைக்கும் யாருக்குமே சாபம் கொடுத்தது இல்லை, நான் வயிறெரிஞ்சு சாபம் விடறேண்டி நீ நல்லாவே இருக்க மாட்ட என்று சிவகாமி சந்தியாவுக்கு சாபம் விடுகிறார். சந்தியா அழுதுகொண்டே அத்தை உங்க வாயால என்னை சபிக்காதிங்க… நான் நேர்மையா நடந்துக்கனும்னு நினைச்சேன். ஆனால், சத்தியமா இப்படி ஆகும்னு நான் நினைச்சுகூட பார்க்கல என்று கூறுகிறாள்.

இதைக்கேட்டு கோபமடையும் சிவகாமி, நேர்மைனா உன் குடும்பத்துக்கும் உனக்கும் என்னனு தெரியுமா, வாழ வந்த வீட்டுக்கு பொய் சொல்லி வந்தவதான நீ, எம்புள்ளை வாழ்க்கையை நீ நேர்மையா மாத்தறயா, அசிங்கமா இல்லை உனக்கு” என்று திட்டுகிறாள். பிறகு, கடைக்கு போய் பார்க்கலாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் கடையைநோக்கி செல்கிறார்கள்.

publive-image

அங்கே அந்த அதிகாரி கடையை சீல் வைத்துவிட்டு கடை அருகே நின்றுகொண்டிருக்கிறார். அங்கே சென்று கடை சீல் வைத்திருப்பதைப் பார்த்து சரவணன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். எல்லோரும் அழுகிறார்கள்.

சுந்தரம் அதிகாரி கிட்ட பேசுவோம் என்று அழைத்துக்கொண்டு போய் பேசுகிறார். என்ன சார் இப்படி கடையை மூடிட்டு வந்துட்டீங்க என்று சுண்தரம் கேட்கிறார். இதைக்கேட்ட அந்த அதிகாரி மூடலையே சார், சீல் வச்சிருக்கேன், ஏன் உங்க மகன் உங்ககிட்ட சொல்லலையா அவருகிட்டயே கேளுங்க என்று கூறுகிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்ர்கள்.

அப்போது, சிவகாமி, சரவணா அவரை நீ போய் பார்த்தனு சொன்னயே என்று கேட்கிறார். அதற்கு செந்தில், அம்மா அவன் போய் பார்த்தனுதான சொன்னான். கொடுக்க வேண்டியதை கொடுக்கலையே என்று கூறுகிறான். இதைக்கேட்டு சுந்தரம் உண்மையாடா என்று கேட்கிறான்.

சிவகாமி, இந்த கடை எம்புள்ளை வாழ்க்கை சார், இந்த கடை எங்க வீட்டுக்கே சோறுபோட்ட கடை சார், கொஞ்சம் கருணை காட்டுங்க என்று கூறி காலில் விழுகிறார். எல்லோரும் பதறிப் போய் அவரை தூக்குகிறார்கள்.

கடையை ஒட்டிதான சார் வீடு, நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே, நீங்க பாட்டுக்குனு சீல் வச்சிட்டீங்களே என்று சுந்தரம் கேட்கிறார்.

அதற்கு அந்த அதிகாரி, எங்கிட்ட எதுக்கு சார் பேசறீங்க, உங்க மகனும் மருமகனும் எங்கிட்ட எப்படி நடந்துகிட்டாங்கனு தெரியுமா? என்று கேட்கிறார்.

அங்கே இருக்கிற அர்ச்சனா இதுதான் சமயம் என்று மொத்த தெருவும் வேடிக்கை பார்க்குது, சே அசிங்கமா இருக்கு அத்தை என்று கூறுகிறார்.

publive-image

இதை கேட்டுக்கொண்டிருந்த அந்த அதிகாரி, சரவணன் இது உங்களுக்கு தேவையா, எத்தனை வருஷம் ஸ்மூத்தா தொழில் பண்ணிகிட்டிருந்தீங்க… இந்த வருஷம் உங்க வொய்ஃப் சொல்றதைக் கேட்டு தேவையில்லாமல் ஏன் சூடு வச்சுக்கிறீங்க…. கடை மூடி கிடந்தா யாருக்கு நஷ்டம், உங்களுக்கா எனக்கா, இதையெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா, பாருங்க உங்களால மொத்த குடும்பமும் நடுத்தெருவுல தலைகுனிஞ்சி நிக்குதே இப்ப என்ன பண்ணப் போறீங்க என்று சந்தியாவைப் பார்த்து கேட்கிறார்.

இதைக்கேட்டு கோபமடையும் சந்தியா, “ஹலோ, என்ன பெரிய நல்லவரு மாதிரி பேசறீங்க… நீங்க கேட்கிறது லஞ்சம், அடுத்தவங்க உழைப்பை புடிங்கி திங்க நினைக்கிறது கேவலம்… அதுவும் இத்தனை பேருக்கு மத்தியில நடுரோட்ல கேட்கிறதுக்கு உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்சமா இல்லையா? எந்த தப்பும் செய்யாம நாங்க தலைகுனிஞ்சி நிக்கனும்.” என்று கேட்கிறாள். சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி, சந்தியா கொஞ்சம் வாயை மூடுடி எல்லாம் உன்னாலதான் என்று கூறுகிறார். அதற்கு சந்தியா, அத்தை அவர் பண்றது தப்பு என்று கூறுகிறாள்.

அதற்கு சிவகாமி, தப்புதாண்டி இந்த தெருவுல கடை வைச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் இப்படிதான் காலத்தை தள்றாங்க, அய்யோ கடையை மூடிட்டாங்களேனு எனக்கு பக்பக்னு இருக்குது. அந்த வருத்தம் கொஞ்சமாச்சு இருக்கா உனக்கு. ஏதோ மேடையில பேசுறாப்போல பேசிகிட்டு இருக்க என்று கூறுகிறார்.

publive-image

அருகே இருந்த ஒருவர் ஏம்பா சரவணா இப்போ கூட ஒன்னும் கெட்டுப்போகல, வீட்டுக்கு இட்டுக்குனு போய் பேசு காரியத்தை முடிச்சுடு, நானும் பக்கத்துலதான் சார் கடை வச்சிருக்கேன் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று கூறுகிறார். அப்பொது, அந்த அதிகாரி உங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை. தேவையில்லாம பேசாதீங்க, சரவணன் இன்னைக்கு சனிக்கிழமை இன்னும் 2 நாளைக்கு கடை சீல் வைச்சி இருக்கும். நீங்க கோர்ட்டுக்குகூட போக முடியாது என்று கூறுகிறார். இதைக்கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.

இதைக்கேட்ட அர்ச்சனா, கோர்ட்டுக்கு வேற போகனுமா இனிமேல் கடையை திறக்கவே முடியாதா, அவ்வளவுதானா என்று கூறுகிறாள்.

இதைக் கேட்டு சிவகாமி, அய்யயோ கோர்ட்டுக்கு வேற போகனுமா, இப்படி சீரழிச்சிட்டியேடி, குடும்பத்தோட மொத்த மானமும் போயிடுச்சே என்று சந்தியாவை திட்டுகிறார். சுந்தரம், சிவகாமி இப்படி ரோட்ல பேசனுமா என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, ரோட்லதான் இந்த குடும்பத்தோட மொத்த மானமும் போயிடுச்சே…” என்று கூறுகிறார்.

அப்போது சந்தியா, “அத்தை தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க அத்தை, நம்ம மேல எந்த தப்பும் இல்லை அத்தை, இந்த மாதிரி ஆளுங்களுக்கு லஞ்சம் எல்லாம் ரொம்ப பழகிடுச்சு. அதை உரிமை மாதிரி கேட்டு வாங்க ஆரம்பிச்சு, அதை தரலனா கோபம் வருது அவங்களுக்கு… ஆனால், சட்டப்படி இவங்க பண்றது ரொம்ப பெரிய தப்பு அத்தை…” என்று கூறுகிறாள்.

அதற்கு பார்வதி, இப்படியே சட்டம் பேசிகிட்டு இருங்க… இப்ப கடையையே மூடியாச்சு, அதற்கு என்ன பதில் அண்ணி என்று கேட்கிறாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த அதிகாரி, அவங்ககிட்ட எந்த பதிலும் இருக்காது. வாய்பேச்சு வேற பிராக்டிக்கல் லைஃப் வேறனு இப்ப புரிஞ்சு இருப்பாங்க. சரவணன் இது உங்க பர்சனல் வாழ்க்கையா இருந்தாலும் நான் ஒன்னு சொல்றேன். பொண்டாட்டி பேச்சை எப்ப எங்க கேட்கனும்னு ஒரு லிமிட் இருக்கு. ரொம்ப இடம் கொடுத்தால் இப்படிதான் ஆகும்.” என்று கூறுகிறார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த செந்தில் இதுதான் நேரம் என்று இதைத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் யாரு கேட்டாங்க என்று கூறுகிறான்.

publive-image

ஆனால், சரவணன், கோபமடைந்து சந்தியாவை விட்டுக்கொடுக்காமல், “சார் என்னோட தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சி கருத்து சொல்றதுக்கு உங்களுக்கு என்ன சார் உரிமை இருக்குது. நீங்க யாரு இதையெல்லாம் சொல்றதுக்கு.” என்று கேட்கிறான். சரவணன் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசுவதை நினைத்து ஆறுதல் அடைகிறாள்.

இதற்கு அந்த அதிகாரி சரி விடுங்க, உங்க வாழ்க்கை வர்றதை நீங்கதானே டீல் பண்ணப் போறீங்க, ஆனால், நீங்க ரொம்பதான் பொண்டாட்டிதாசனா இருக்கீங்க தம்பி,” என்று கூறுகிறார். இதைக் கேட்டு கோபமடையும் சரவணன், “ஹேய் அது எங்களுக்கு தெரியும். உன் அறிவுரை எல்லாம் எனக்கு தேவையில்லை. கிளம்புயா, உன்னை நான் பார்க்கிற எடத்துல பார்த்துக்கிறேன்.” என்று கூறுகிறான். அப்போது, சிவகாமி, யார்கிட்ட பேசுறனு தெரிஞ்சுதான் பேசுறயா என்று கேட்கிறார். அதற்கு அந்த அதிகாரி, தம்பி என்ன மரியாதை இல்லமால் பேசுற என்று கேட்கிறார். அதற்கு சரவணன், கோபமாக “இனிமேல் உனக்கு என்னயா மரியாதை, அடுத்தவங்க உழைப்பை சுரண்டித் திங்கற ஈனப்பிறவிதான நீ, லஞ்சக் காசுல சொத்து சேக்கறவந்தான நீ, என்னமோ பெரிய இவன் மாதிரி பேசுற, யோவ் உன்னை நான் எப்படி பார்த்துக்கனுமோ பார்த்துக்கறேன்.” என்று கூறுகிறான்.

இதைக்கேட்ட அந்த அதிகாரி, “ஓ நீ அந்த அளவுக்கு போயிட்டியா, உன்னால முடிஞ்சத நீ பார்த்துக்கோ, கடையை நீ எப்படி திறக்கிறனு நான் பார்க்கிறேன்” என்று சொல்கிறார். இதைப்பார்த்து எல்லோரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

publive-image

அப்போது, அங்கே ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து நீல நிற சட்டை அணிந்த உயர் அதிகாரி ஒருவர் இறங்கி வந்து அந்த லஞ்ச அதிகாரியிடம் என்னயா ஆச்சு, என்ன நடக்குது இங்க என்று கேட்கிறார். அதற்கு அந்த லஞ்ச அதிகாரி, “சார் நம்ம ரூல்ஸ் பிரகாரம் நோட்டீஸ் அனுப்பி செக் பண்ணோம் சார், குவாலிட்டி ரொம்ப மோசமா இருக்கிறது. பயன்படுத்துகிற பொருளும் தரமா இல்லை, அதான், கடைக்கு சீல் வச்சிட்டேன்” என்று கூறுகிறார். எல்லோரும் அந்த லஞ்ச அதிகாரி பொய் சொல்வதைக் கேட்டு பதறுகிறார்கள். ஆனால், அந்த உயர் அதிகார், “அப்படியா, வாங்க வேண்டியதை எல்லாத்தையும் வாங்கிட்டியா” என்று கேட்கிறார்.

அந்த லஞ்சம் வாங்குகிற் அதிகாரி, உயர் அதிகாரி கேட்பது என்ன என்று புரியாமல் என்ன சார் சொல்றீங்க என்று கேட்கிறார். அதற்கு உயர் அதிகாரி, அதான்யா, குவாலிட்டி செக் பண்ற கடையில கட்டிங் வாங்குவியே, இங்க வாக்கிட்டியானு கேட்டேன் என்று கேட்டு அதிர்ச்சி அளிக்கிறார்.

அதற்கு அந்த லஞ்ச அதிகாரி அப்படியெல்லாம் இல்லை சார், வேணும்னா இவங்ககிட்ட கேட்டு பாருங்க சார் என்று கூறுகிறார். அதற்கு உயர் அதிகாரி அதற்கு அவசியமே இல்லை, என்று போனை எடுத்து நீயே பார்த்துக்க என்று ஒரு போனில் ஒரு வீடியோவை எடுத்து பாரு என்று காட்டுகிறார். அப்போது, அதிகாரி அதை எல்லோருக்கும் காட்டு என்று கூறுகிறார்.

publive-image

அந்த வீடியோ, அந்த லஞ்சம் அதிகாரி, சரவணன் வீடு தேடி வந்து லஞ்சம் கேட்டு வந்தபோது சந்தியா எடுத்த வீடியோதான் என்பது தெரிகிறது. அந்த வீடியோல் லஞ்சம் வாங்குகிற அதிகாரி, “யாருகிட்ட என்ன பேசுறனு தெரிஞ்சுதான் பேசுறயாமா, சாம்பிள் அனுப்புவீங்களா சர்டிஃபிகேட் நான் தான் கொடுக்கனும். அங்க வருவீங்க இல்லை, அப்ப எப்படி சர்டிஃபிகே வாங்குவீங்க, எப்படி கடை நடத்துறீங்கனு பார்க்கிறேன்” என்று பேசுகிறார்.

இதையடுத்து, அந்த உயர் அதிகாரி, கொடுயா என்று போனை வாங்குகிறார். “என்னயா இதுக்கு என்ன சொல்ற, அதான் கவர்ன்மெண்ட் சம்பளம் கொடுக்கிறாங்க இல்ல, இதுக்கு மேல இந்த மாதிரி பொழப்பு உனக்கு தேவையா, உன்னை இப்பவே 15 நாள் சஸ்பெண்ட் பண்றேன்.” உயர் அதிகாரி கூறுகிறார்.

தொடந்து, பேசுகிற அந்த உயர் அந்திகாரி, “ உங்க பேர் சந்தியா தான” என்று சந்தியாவைப் பார்த்து கேட்கிறார். அதற்கு சந்தியா ஆமாம் சார் என்று பதில் சொல்கிறாள்.

உயர் அதிகாரி, “இப்படி ஒரு வீடியோ ஆதாரத்தை அனுப்பி வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க… நேர்மையாக துணிச்சலா இருந்ததுக்கு வாழ்த்துகள்… நேர்மை என்னைக்குமே ஜெயிக்கும். சரவணன் இப்படி ஒரு மனைவி கிடைச்சதுக்கு நீங்க உண்மையிலயே பெருமை படனும்” என்று கூறுகிறார். எல்லோரும் சந்தியாவை ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் பார்க்கிறார்கள்.

சுந்தரம், உயர் அதிகாரியிடம், “சார் அப்படியே அந்த கடை” என்று கடை மூடியிருப்பதைப் பற்றி கேட்கிறார். அதற்கு அந்த உயர் அதிகாரி, உங்கள் கடையில இருக்கிற பொருள்களை எல்லாம் செக் பண்ணியாச்சு, எக்ஸலண்ட் குவாலிட்டி, முருகேசன் போய் கடையை திறந்துவிடுங்க…” என்று சொல்கிறார். அவருடன் வந்த உதவியாளர் சீல் வைத்த கடையை திறந்துவிடுகிறார்.

publive-image

அப்போது, சரவணன் அந்த உயர் அதிகாரிக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் என்று கூறுகிறான். அதற்கு அந்த உயர் அதிகாரி நன்றியை எனக்கு சொல்லாதீங்க, நன்றியை உங்க மனைவிக்கு சொல்லுங்க, இனிமேல் நீங்க யாருக்கும் பயப்படாமல் தொழில் பண்ணலாம். யாருக்கும் 10 பைசா கொடுக்க வேண்டியதில்லை. உங்களைப் பார்த்து மற்ற கடைக்காரங்க எல்லாரும் நேர்மையா நடந்துப்பாங்கனு நான் நம்புறேன்.” என்று கூறுகிறார். பிறகு, அங்கே இருந்த அந்த லஞ்ச அதிகாரியைப் பார்த்து, “யோவ் இன்னும் இங்க ஏன்யா நிக்கற கிளம்பு மொதல்ல” என்று கூறி அவரை விரட்டுகிறார். இதையடுத்து, அந்த உயர் அதிகாரியும் அங்கே இருந்து புறப்படுகிறார்.

அப்போது, அங்கே இருக்கிற ஒருவர், “படிச்ச பொண்ணு படிச்ச பொண்ணுதான்யா, அந்த ஆஃபிசரை மெரட்டு மெரட்டுனு உட்டுட்டா இல்ல” என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அதற்கு அங்கே இருக்கிற ஒரு பெண், “வெறும் மெரட்டலா, சஸ்பெண்ட் பண்ற அளவுக்கு பண்ணி இருக்கா, கை தட்டுங்க…” என்று சொல்ல எலோரும் சந்தியாவை பாராட்டி கைத்தட்டுகிறார்கள். அதோடு, அந்த பெண், “சிவகாமி, உன் மருமக செஞ்சது சாதாரண காரியம் இல்ல, கூட்டிகிட்டு போய் சுத்திப்போடு” என்று கூறுகிறார். சிவகாமியும் சந்தோஷத்தில் சிரிக்கிறார்.

publive-image

சுந்தரம், சந்தியாவிடம் இந்த குடும்பத்தையே தலைநிமிர வச்சுட்டமா, ரொம்ப பெருமையா இருக்குமா, சரவணா பார்த்தியாடா, நீ அவளை நம்புன, அந்த நம்பிக்கையை அவள் காப்பாத்திட்டா பார்த்தியா என்று கேட்கிறார்.

சிவகாமி, “சரி போதும், பிரச்னைதான் முடிஞ்சுடுச்சு இல்லை வாங்க எல்லாரும் கிளம்பலாம், வீட்டுக்கு போகலாம் வாங்க” அழைத்துச் செல்கிறார். சந்தியாவும் சரவணனும் கடையில் சந்தோஷமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Vijay Tv #Raja Rani 2 #Raja Rani Serial Actress #Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment