/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-4.jpg)
raja rani hotstar raja rani serial vijaytv
raja rani hotstar raja rani serial vijaytv : தன் மனைவி சந்தியாவுக்காக மிகப் பெரிய முடிவை எடுக்குகிறார் சரவணன். இனி என்ன ஆகும்?
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த, ‘திருமணம்’ சீரியலின் ஹீரோ சித்து நடிக்கிறார். ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசாவே நடிக்கிறார்.
ராஜா ராணி 2 சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில், மாமியார் வீட்டில் மருமகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து கதை எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான என் கணவன் என தோழன் என்கிற சீரியலின் தழுவல் தான் ராஜா ராணி 2 என்ற பேச்சும் அடிப்படாமல் இல்லை. கிட்டத்தட்ட எல்லா சீன்களும் அப்படியே பொருந்துகிறது.
ஒருமருமகள் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதற்கு அர்ச்சனா தான் எடுத்துக்காட்டு. அர்ச்சனா செய்த மிகப்பெரிய தவறால் இன்று சந்தியா வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது. சொந்த குடோனை எரித்து அது விபத்து என வீட்டாரை நம்ப வைத்தார். இதற்கு அவரின் கணவர், செந்தில் உடந்தை
கடைசியில் சந்தியா அந்த பொய்யை கண்டுப்பிடிக்க தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அர்ச்சனா தனது மாமியாரிடம் மாட்டிக் கொள்கிறாள். அவரும், அர்ச்சனா செய்த தவறை சுட்டிக்காட்டி வீட்டைவிட்டு அனுப்புகிறார். சகுனி போல் யோசித்து, மாமியார் மீது பொய் வழக்கு தொடுத்து அவரை உள்ளே தள்ளி, கடைசியில் அவரை வெளியில் ,தானே எடுப்பது போல் நாடகமாடி மீண்டும் வீட்டுக்குள் நுழைகிறாள் அர்ச்சனா.
கண்ணான கண்ணே நீ கலங்காதடி! ❤️
ராஜா ராணி - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani#VijayTelevisionpic.twitter.com/KW6Pwqqurw— Vijay Television (@vijaytelevision) February 10, 2021
காலை கடித்த பாம்பு சும்மா விடாது என்பது போல், சந்தியா படித்த மருமள் என்பதை மாமியாரிடம் வத்தி வைக்கிறார் அர்ச்சனா. கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சரவணன் அம்மா, சந்தியாவை வீட்டைவிட்டு துரத்த முடிவு எடுக்கிறார். இந்த நேரத்தில் தான் தனது மனைவி சந்தியாவுக்காக சரவணன் மிகப்பெரிய முடிவை எடுக்கிறார். என்ன அது?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.