scorecardresearch

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறேனா? சீரியல் நடிகை சொன்ன குழப்பமான பதில்

வரவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் அர்ச்சனா சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறேனா? சீரியல் நடிகை சொன்ன குழப்பமான பதில்

ராஜா ராணி2 சீரியலில் இருந்து விஜே அர்ச்சனா விலகியுள்ள நிலையில், அடுத்து வரவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் அவர் சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே தற்போது தனது விலகல் குறித்து அர்ச்சான விளக்கம் அளித்துள்ளது வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதை தொடர்ந்து 2-ம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலில் சந்தியா என்ற நாயகி கேரக்டரில் நடிகர் சித்து சரவணன் என்ற கேரக்டரில் நடித்து வந்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பிரசவம் காரணமாக ஆல்யா மானாசா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக நடிகை ரியா சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரிலில் நடித்து வந்த நடிகை விஜே அர்ச்சனா தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளர்ர்.

அவருக்கு பதிலாக தற்போது மற்றொரு அர்ச்சனா அதே ரோலில் நடித்து வருகிறார். அதே சமயம் வரவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகத்தான் அர்ச்சனா சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அர்ச்சனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,

ராஜா ராணி சீரியலில் 3 ஆண்டுகள் நடித்துவிட்டேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று தெரியவில்லை. என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெத்துதான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். அதேபோல் பிக்பாஸ் சீசன் 6-க்கு நான் செல்ல இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

மேலும் திரைப்படம் மற்றும் ஒடிடி தளங்களில் எதாவது ப்ரஜக்ட் செய்யலாம் என்று முயற்சி செய்வதாகவும் கூறியுள்ள அவர், விரைவில் ஆன் ஸ்க்ரீனில் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அர்ச்சனாவின் இந்த போட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவரா அல்லது சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் ஆனாதாக சொல்கிறார்களே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani serial actress archana expalin to why leave that serial

Best of Express