இந்தியத் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியது பாகுபலி திரைப்படம். இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 எனப் பிரம்மாண்டமாக இது உருவாக்கப்பட்டது. பன்மொழிகளில் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் திரையிடப்பட்டது. பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி 1 மற்றும் 2, பதிலுக்கு ஆயிரம் கோடிகளை வசூலித்தது. இதில் இரண்டாம் பாகம் மட்டுமே சுபார் 2,500 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. கற்பனை கதையான இத்திரைப்படம் மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தில் நடக்கும் நிகழ்வுகளைச் சார்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/Bahubali-1-and-2-300x109.jpg)
மகிழ்மதி என்னும் சாம்ராஜ்ஜியத்தில் அரசியின் ஆட்சி. ராஜமாதா சிவகாமி தேவியின் ஆட்சியில் செழிப்புடன் வாழும் மக்கள். அந்த ராஜ்ஜியத்தில் வாழும் இரண்டு சகோதரர்கள். மூத்த மகன் பல்லால் தேவ், இளைய மகன் அமரேந்திர பாகுபலி. முதல் பாகத்தில் அமரேந்திர பாகுபலி கொல்லப்படுகிறான். இரண்டாம் பாகத்தில் தந்தையைக் கொன்ற கயவர்களை பழி தீர்க்கும் மகன் மகேந்திர பாகுபலி. முதல் பாகத்தில் தந்தை பாகுபலி ஏன் கொல்லப்படுகிறான் என்று மண்டையை உடைத்துக் கொள்ளும் ரசிகர்களுக்குத் தனது இரண்டாம் பாகத்தில் விடையளிக்கிறார் ராஜமௌலி.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/Anushka-in-bahubali-300x152.jpg)
இப்படம் மாறுபட்ட திரைக்கதைக்கு மட்டுமல்லாமல், கலை வடிவத்திற்கும் பெயர்போனது. குறிப்பாகப் பெண்களை கவந்த நகை மற்றும் ஆடை அலங்காரம். பாகுபலி இரண்டில் அனுஷ்கா அணிந்திருக்கும் நகைகள் மீது பைத்தியம் கொண்ட பெண்கள் ஏராளமானோர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/Bahubali-cover-pic-300x217.jpg)
இவ்வாறு அனைத்து நுன்னுக்கங்களிலும் மக்களைக் கவந்த பாகுபலி படம் தற்போது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் திரையிடப்பட உள்ளது. கராச்சியில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகம் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் ராஜமௌலி, பாகிஸ்தான் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். மேலும் பாகுபலி திரைப்படத்தை திரையிட முடிவு செய்ததற்கு பாகிஸ்தானுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
,