பேரன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்; வைரல் வீடியோ

ரஜினிகாந்த் தனது பேரன் வேத்தின் பிறந்தநாள் விழாவில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் பங்கேற்று சிறப்பித்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தனது பேரன் வேத்தின் பிறந்தநாள் விழாவில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் பங்கேற்று சிறப்பித்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
A Rajini grandson

ரஜினிகாந்த் தனது பேரனின் பிறந்தநாள் விழாவில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் பங்கேற்று சிறப்பித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு,  இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'கூலி' படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்கவுள்ளார். 

Advertisment

ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக, தனது பேரனும் சவுந்தர்யாவின் மகனுமான வேத்தின் கிரிக்கெட் தீம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத்தின் பிறந்த நாள் மே 6-ம் தேதி ஒன்பது பிறந்தார், மேலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி போல கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்த் தனது பேரனின் பிறந்தநாள் விழாவில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் பங்கேற்று சிறப்பித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

அந்த வீடியோவில், சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்நாள் விழாவில் கேக் வெட்டும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் பின்னால் நிற்கிறார். பேரன் வேத்தின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். மே 6-ம் தேதி பிறந்தநாள் விழாவின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் வேத் இந்திய ஜெர்சியையும், சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியையும் அணிந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் எளிமையான வெள்ளை நிற குர்தாவில் உள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது வெப் சீரிஸான் ​​'கேங்க்ஸ் - குருதி புனல்' தொடங்கினார், இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த கேங்க்ஸ்டர் வெப் சீரிஸ் தேசிய அமேசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். வேட்டையன் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: