Advertisment

ரஜினியின் தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியிடத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட 4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவாத தொகை செலுத்தாத பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட 4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவாத தொகை செலுத்தாத பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2.O படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் படத்தை வெளியிடக் கூடாது என தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் கடந்த 3 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் மனுதரார் கூறுவது போல் எந்த கடனும் லைக்கா நிறுவனம் தரப்பில் தர வேண்டியது இல்லை. மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்த்துள்ளார். மனுதாரர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது. மேலும் அற்பகாரணங்களுக்காக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். மனுதாரர்தான் எங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும். எனவே தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை. அவர்கள் கூறும் அனைத்து கணக்குகளும் தவறு என தெரிவித்தார்.

லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு காலா படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை அளித்ததாகவும் அதற்கான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயசந்திரன், தர்பார் திரைப்படத்தை மலேசியா நாட்டில் வெளியிட தடை விதிப்பதாகவும், மலேசியாவில் படத்தை வெளியிட வேண்டும் என்றால் 4. 9 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் டிபாசிட் செய்ய வேண்டும். பணத்தை டிபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது. பணத்தை டிபாசிட் செய்யும் பட்சத்தில் மலேசியாவில் படத்தை வெளியிடலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் மூலமாக தமிழகம் உள்பட இந்தியாவில் தர்பார் திரைப்படம் வெளியிட எந்த விதமான தடையும் இல்லை. அதே போல, மலேசியாவைத் தவிர பிற நாடுகளிலும் வெளியிட தடை இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Rajini Kanth A R Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment