அரசியலில் நுழையும் நடிகர்கள் ரஜினி, கமலை கலாய்த்து தனது ட்விட்டரில் பதிவிட்டு வரும் நடிகை கஸ்தூர், ஜெயலலிதா சிலை விவகாரத்தில் மந்திரிகளையும் விட்டு வைக்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அட என்னப்பா! போருக்கு படை தயார் பண்ணுவார்னு பார்த்தா படம் தயார் பண்ண போறாராமே! அதிர்ச்சி கலந்த ஆச்ச்சரியம்’ என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 22ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், 'எனக்கு ஒரு அய்யம்... அது என்ன மய்யம்? மையம் வேற, மய்யம் நா வேற போல. அத்த வுடு. ம-ய்-ய-ம் இங்கிலீசுல MA-Y-YA-M தானே? MaiAm மைஅம்னு வருது...’ என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு புவியரசு என்பவர் பதில் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் பெரியார் சொல்லித்தான் மையம் பத்திரிகை, மய்யமானது என்று பதிலளித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, ‘நீங்க கொஞ்சம் குழம்பியிருக்கீங்க . பெரியார் இறந்தது 1973. அபூர்வ ராகங்கள் ரிலீஸ் 1975. மையம் பத்திரிக்கை 1980 பிற்பாடுதான். அது சரி. தமிழ் சீர்திருத்தம் மாதிரி நீங்க வரலாற்று சீர்திருத்தம் பண்றீங்க. வாழ்த்துக்கள்.’ என்று நக்கலாக பதில் சொல்லியுள்ளார்.
இப்படி கமல் ரசிகர்களுடன் மோதிக் கொண்டு வந்த நடிகை கஸ்தூரி, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சிலை குறித்து, ‘‘அம்மா சிலையை வடிக்க சொன்னா சிற்பி அவரு சொந்த அம்மாவை வடிச்சிட்டாரு போல !
கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கற மங்குனிஸ் இனி கட்சி ஆபீசுல இந்த சிலையை பார்த்தாலே போதுமே !’’ என்று வம்புக்கிழுத்துள்ளார்.
இதையடுத்து அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.