/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1918.jpg)
rajini kanth 2.0 released china 9 crore on day 1 - சீனா பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ரஜினியின் 2.0 -முதல் நாளில் 9 கோடி வசூல்
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது 2.0 திரைப்படம். 3D தொழில் நுட்பத்தில் சுமார் 543 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 15 மொழிகளில் 7,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த படம் எந்திரன் போலவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில் தற்போது சீனாவிலும் 2.0 வெளியாகியுள்ளது. சுமார் 56 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக இருந்த நிலையில் 48 ஆயிரம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீசானது.
இருப்பினும், வெளியான முதல் நாளே 1.28 மில்லியன் அமெரிக்க டாலரை சீனாவில் வசூலித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 9 கோடி ஆகும். வெளியான இரண்டு நாளில் படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#2Point0InChina collects $0.61 Million on Day 2..
2 days total gross now is at $2.01 Million <₹ 14 Crs>
— Ramesh Bala (@rameshlaus) September 7, 2019
இதன் மூலம் சீனாவில் வெளியான இந்திய படங்களின் முதல் நாள் வசூல் பட்டியலில் ‘2.0’ 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ரூ.750 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படம் சீன வெளியீட்டின் மூலமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.