scorecardresearch

கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தாம்மா… வெளியானது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வெள்ளை வேஷ்டி சட்டையில், மாஸா, க்ளாஸா, ஆஸம் ரஜினி… தீபாவளிக்கு திரைக்கு வருகிறது அண்ணாத்த திரைப்படம்

Annatthe movie, first look, rajini kanth

Annatha movie’s first look : இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வருகிறது அண்ணாத்த திரைப்படம். இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை (first look) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகைகளாக முன்னணி நட்சத்திரங்கள் குஷ்பு, மீனா, இளம் நடிகைகள் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதோடு, இன்று மாலை இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசை அமைக்கிறார். இறுதியாக நடிகர் ரஜினி காந்த், முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருந்தார். வெள்ளை வேஷ்டி, சட்டை, அந்த கூலிங் கிளாஸில் பார்க்கும் போது ரஜினி மாஸாகவும், செம்ம க்ளாஸாகவும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajini kanth starrer annaatthe movies first look released today

Best of Express