/indian-express-tamil/media/media_files/2025/08/21/rajini-heroine-2025-08-21-10-18-02.jpg)
சினிமா உலகில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை கூட சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் சினிமா வாய்ப்புக்காக நடிகர்கள் போராடிக் கொண்டிருந்தனர். அப்படி வறுமையின் பிடியில் இருந்து சினிமா உலகிற்கு வந்து, தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்த நடிகை அருணா இரானி.
நடிகை அருணா இரானியின் குழந்தை பருவம் வறுமையில் கழிந்தது. நாடக கம்பெனியை நடத்தி வந்த அவரது தந்தை, அதில் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவர் சம்பாதித்ததை சூதாட்டத்தில் இழந்துவிடுவார். உடல்நலமும் அடிக்கடி குன்றிவிடும். இத்தகைய சூழலில் அருணாவின் தாய், படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து குடும்பத்தை நடத்தி வந்தார். பல நேரங்களில் வீட்டில் உணவுக்கு வழியில்லாமல் வெங்காயம் மற்றும் சாதம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக அருணா இரானி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிறு வயதிலேயே வறுமையின் கோரப் பிடியில் சிக்கிய அருணா இரானிக்கு, மருத்துவர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால், குடும்ப சூழல் காரணமாக ஆறாம் வகுப்புடன் படிப்பை கைவிட்டு, தனது 9 வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1960-களில் ஏஜென்டுகள் குழந்தை நட்சத்திரங்களுக்காக ஆடிஷன் நடத்துவார். ஒருமுறை அப்படி ஒரு ஆடிஷனுக்கு ஏஜென்ட் ஒருவர் அருணாவை அழைத்துச் சென்றார். அருணாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தாலும், ஆடிஷனுக்குச் சென்றால் ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் சென்றார். அங்கு, ஆடிஷன் கொடுக்காமல் சாப்பிட மட்டுமே கவனம் செலுத்திய அருணாவை, நடிகர் திலீப் குமார் கவனித்தார். “ஏய், இங்க வா. நீ படங்களில் நடிப்பியா?” என்று கேட்டார். அதுதான் அருணாவின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது.
வெகு விரைவிலேயே வெற்றிப் படிகளைக் கண்டார் அருணா. ஆனால், 'பாம்பே டூ கோவா' (Bombay to Goa) படத்தின்போது, உடன் நடித்த மெஹ்மூதுடன் காதல் வதந்திகள் பரவின. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் அருணாவுக்குப் பல ஆண்டுகள் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அனைத்து தடைகளையும் தாண்டி அருணா இரானி, இந்தி சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அருணா இரானி தமிழில் ரஜினிகாந்துடன் 'காதல் பரிசு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
அருணா இரானி, இயக்குநர் குக்கு கோலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். அருணா இரானி கூறுகையில், “நடிகை நீனா குப்தா மிகவும் தைரியசாலி. ஆனால், ஒரு குழந்தை ஒரு நல்ல குடும்ப சூழலில் வளர வேண்டும். அந்த தைரியம் எனக்கு இல்லை. என் தந்தை இரண்டு திருமணம் செய்து கொண்டவர். அதனால் நான் அவரை அப்பா என்று வெளிப்படையாக அழைக்க முடியவில்லை. இந்த சூழல் என் குழந்தைக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன். ஒருவேளை குழந்தை பிறந்திருந்தால், நான் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், குழந்தை பராமரிப்பு முழு பொறுப்பும் எனக்கு மட்டுமே இருந்திருக்கும்,” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.