New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/2.jpg)
Darbar, darbar leaked stills, darbar new stills, rajinikanth, nayanthara, nayanthara in darbar, ரஜினி, தர்பார், நயன்தாரா, ஏ.ஆர்.முருகதாஸ், லைகா
Darbar stills leaked : தற்போது இரண்டாவது முறையாக படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன (இன்னும் எத்தனைமுறை வெளியாக இருக்கிறதோ...)
Darbar, darbar leaked stills, darbar new stills, rajinikanth, nayanthara, nayanthara in darbar, ரஜினி, தர்பார், நயன்தாரா, ஏ.ஆர்.முருகதாஸ், லைகா
ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஸ்டில்கள், இணையதளத்தில் வெளியாகியுள்ள விவகாரம், படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது ஒருபுறம் இருந்தாலும், மாதாமாதம் இதுபோன்று படத்தின் காட்சிகள் வெளியாவது திட்டமிட்ட செயல்போல தான் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காலா , பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினி நடிப்பில் 2020 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில், முழுவீச்சாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி, நயன்தாரா நடித்துவரும் படத்தின் காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன. ரஜினி போலீஸ் உடையிலும், நயன்தாரா சுடிதாரிலும் அந்த காட்சியில் உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் பிற்பகுதியில், இதேபோன்று படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன (இன்னும் எத்தனைமுறை வெளியாக இருக்கிறதோ...) ஒருவேளை, படக்குழுவினரே, படம் பற்றி மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவ்வப்போது படத்தின் ஸ்டில்களை கசியவிடுகிறேதா என்ற நினைப்பும் வராமல் இல்லை...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.