பரவாயில்லையே... பைத்தியம் நல்லா ஆடுது; ரஜினியை கிண்டல் செய்த நபரை கன்னத்தில் அறைந்த ஆச்சி: பில்லா ஷுட்டிங் மெமரீஸ்!

1980 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா படபிடிப்பின்போது நடந்த சுவாரசியமான அனுபவம் ஒன்றை பற்றி நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா படபிடிப்பின்போது நடந்த சுவாரசியமான அனுபவம் ஒன்றை பற்றி நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Rajinikanth talks about his next film Thalaivar 170 at Chennai airport

பில்லா திரைப்படம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். பில்லா திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா, தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

Advertisment

இந்த படத்தின் 'நாட்டுக்குள்ள என்ன பத்தி என்னென்ன சொல்றாங்க' பாடலின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப்பற்றி நடிகர் ரஜினிகாந்த் அன்நோடீஸ்டு இன்ஸ்டா பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள்ள என்ன பத்தி என்னென்ன சொல்றாங்க என்ற பாடல் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து, கடைசியாக ஒரு கடற்கரை ஓரத்தில் பாடலின் நடனக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது, "பரவாயில்லையே, பைத்தியம் நல்லா ஆடுதே." இந்த வார்த்தைகள் படக்குழுவினரை சற்றே நிலைகுலைய வைத்தது. 

உடனே அங்கு இருந்த ஆச்சி மனோரமா கோபமாக, சூட்டிங்கை நிறுத்திவிட்டு "ஏய் வாடா இங்க! யாருடா பைத்தியம்? இங்க வாடா!" என்று சொல்லி, அந்த நபரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு திட்ட ஆரம்பித்ததாக ரஜினி கூறினார். "இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணிட்டு இருக்கா, நீ இத சொல்றியா? முதல்ல இவனை இங்கிருந்து அனுப்பினால்தான் ஷூட்டிங் நடக்கும்" என்று ஆவேசமாகப் பேசினாராம்.

Advertisment
Advertisements

அங்கிருந்த அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஆச்சியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்ததாம். உடனே ரஜினி "ஒருவாட்டி அவரை அரவணைச்சு கை கொடுத்து, ஆயிரம் தடவை அடிச்சா கூட நான் எடுத்துப்பேன்.  நீங்க வாழ்ற வரைக்கும் மன நிம்மதியோட, ஆரோக்கியமான உடம்போட நடிச்சுக்கிட்டே இருக்கணும்" என்று கடவுளை வேண்டுவதாக கூறினார்.

நடிகை மனோரமாவின் வாழ்க்கை போராட்டங்களும், அதில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுகளும் பலருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளன. அவர் தனது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டார், ஆனாலும் மனம்தளராமல் முன்னேறினார். அவரின் துணிச்சலுக்கு இந்த ஒரு செயலே போதும் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நன்றாக உணரமுடியும். 

Posted by எல்லோரும் வாழனும் ரஜினிதான் ஆளனும் on Monday, July 14, 2025
Rajinikanth Manorama

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: