New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/03/HbRpaZlagISyvUrm7Bm2.jpg)
ரம்பாவை திட்டிய ரஜினி - சுவாரசிய தகவல்
ரம்பாவை திட்டிய ரஜினி - சுவாரசிய தகவல்
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம், பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ரம்பா சினிமாவில் கொடிகட்டி பறந்த போது நேரத்தில் எல்லாம் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரம்பா இப்போது கனடாவில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இருப்பினும் இன்றும் சினிமா ரசிகர்களால் அந்த நடிகையை மறக்க முடியாது. இவரது பேட்டி ஒன்று சமீபத்தில் வைரலானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அருணாச்சலம்' படப்பிடிப்பின் போது நடந்த சில சம்பவங்கள் குறித்து அவர் பேசினார். படப்பிடிப்புக்கு இடையே ரஜினிகாந்த் தன்னை கேலி செய்ததாகவும், தான் அழ ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
'அருணாச்சலம்' படப்பிடிப்பின் போது. நடிகர் சல்மான் கானுடன் 'பந்தன்' படத்திலும் நடித்ததாக அவர் கூறினார். காலையில் ரஜினி சாருடனும், மதியம் சல்மான கானுடனும் நடித்தார். ஒருநாள் அருணாச்சலம் படப்பிடிப்பு தளத்திற்கு சல்மான்கான் வந்தார்.
சல்மானை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்தேன் இது வடக்கின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ரஜினி சார் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். சல்மான் போன பிறகு ரஜினி சார் கோபமாக இருக்க, அங்கிருந்தவர்கள் என்னைப் பார்த்தார்கள் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார் என்னிடம் வந்து, ஏன் இப்படிச் செய்தீர்கள்? ரஜினி சார் உங்க மேல கோபமா இருக்காரு. ரஜினி சார் என்னுடன் நடிக்க மாட்டார் என்று கூறினார். நான் குழப்பமடைந்து அழ ஆரம்பித்தேன்.
ரஜினிகாந்த் என்னிடம் வந்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் என்னிடம் சில விஷயங்களைச் சொன்னார் சல்மான் கானை எப்படி வரவேற்றீர்கள்? தினமும் நம்மை எப்படி வரவேற்று, ஹாய் சார், குட்மார்னிங்' சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி, ஒரு மூலையில் போய் உட்கார்ந்து புத்தகங்களைப் படிக்கிறீர்கள். வடநாட்டு மக்களை மதிக்கிறீர்களே, தென்னகத்து மக்களை கொஞ்சம்கூட மதிக்கிறீர்களா என்று கேட்டார் ரஜினி சார். இது மறக்க முடியாத அனுபவம் என்று ரம்பா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.