சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திரையரங்குகளில் முதல் காட்சிகளின் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Annaatthe-teaser-1200.jpg)
படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாத்த படம் தமிழகத்தில் மட்டும் 650 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த வாரமே தொடங்கி விட்டது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் நவம்பர் 4 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கே அண்ணாத்த படம் திரையிடப்படுகிறது. படம் அதிகாரப்பூர்வ விடுமுறை நாளில் வெளியாகிறது என்பதால். அதிகாலை காட்சிகளுக்கு சிறப்பு அனுமதிகள் தேவையில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/annatthe-song.jpg)
கொரோனா கட்டுபாடுகளுக்கான தமிழக அரசின் சமீபத்திய தளர்வுகளில், திரையரங்குகளில் 100% பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாத்த திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி மட்டுமின்றி முதல் வாரம் முழுவதுமே பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
இதனிடையே அண்ணாத்த படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆவது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1,119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil