நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 170 படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார் என்ற அதிகாரப்புர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் ரஜினியின் 170 வயது படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார் என்றும் அதை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ஞானவேல் தனது ட்விட்டர் பக்கத்தில் ” மகிழ்வான தருணம், புதிய பயணம் இனிதே ஆரம்பம் “ என்று பதிவிட்டு லைக்காவின் பதிவை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ராஜாகண்ணு என்பர் சிறையில் எப்படி அடித்தே கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையான கதையை மையப்படுத்தியது. இந்த திரைப்படத்தில் மணிகண்டன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பல்வேறு விருதை இத்திரைப்படம் பெற்றது.