ரஜினிகாந்தின் 2.0 படத்தின் செலவு ரூ. 543 கோடியை எட்டியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியானது.
2.0 :
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை குறித்த பேச்சுத்தான் எந்த பக்கம் திரும்பினாலும். அடுத்த மாதம் திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் கடந்த 1 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று இறுதியாக படம் வெளியாவதற்கு தயாராகியது.
இதனைத் தொடர்ந்து 2.0 படத்தின் டிரெய்லர் இன்று (13.9.18) விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது . ட்ரெய்லர் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3டியிலும், யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தின் பொருட்செலவு ரூ.450 கோடி என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் படத்தின் செலவு ரூ. 543 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் இதுவரை வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான பாகுபலி, ஹாலிவுட் திரைப்படம் எக்ஸ் மேன் போன்ற படங்களுக்கு ஆன கிராபிக்ஸூக்கு ஆன செலவு உடன் சமனாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.