/indian-express-tamil/media/media_files/2025/08/13/rajinikanth-50-years-in-cinema-celebrates-and-political-leaders-wishes-tamil-news-2025-08-13-12-09-32.jpg)
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171-வது திரைப்படமான கூலி நாளை ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாக காத்திருக்கிறது.
இந்நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
உதயநிதி வாழ்த்து
இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'கூலி' திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கார் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் வாழ்த்து
சினிமாவாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்." என்று அவர் கூறியுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்து
"ஒரு நடிகனாக நான் முதல் அடி எடுத்து வைத்தது உங்களுடன் தான். என் துவக்க கால ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்" என்று திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் வாழ்த்து
"தலைவா, நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன், உங்களைப் பின்பற்றினேன், உங்கள் அடிச்சுவடுகளில் நடந்தேன். நீங்கள் இருக்கும் அதே துறையில் இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி, மேலும் உங்கள் 50 ஆண்டுகால மகத்தான பாரம்பரியத்திற்கு வாழ்த்துக்கள்.
கூலி உங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரமாக இருக்கும். இப்போது, என்றென்றும், அதற்கு அப்பாலும் உன்னை நேசிக்கிறேன். ஒரு மகத்தான வெற்றிக்காக முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்." என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.