Advertisment

ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்; வைரல் போட்டோஸ்

ஒரே ஸ்டூடியோவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படங்கள் ஷூட்டிங்; படப்பிடிப்புக்கு இடையே சந்தித்துக்கொண்ட நட்சத்திரங்கள்; வைரல் புகைப்படங்கள்

author-image
WebDesk
New Update
Kamal and Rajini

ஒரே ஸ்டூடியோவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படங்கள் ஷூட்டிங்; படப்பிடிப்புக்கு இடையே சந்தித்துக்கொண்ட நட்சத்திரங்கள்; வைரல் புகைப்படங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் இருபெரும் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தனது 170 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். மறுபுறம் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்டூடியோவில் (சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோ) நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நேரத்தில் இருபெரும் நட்சத்திரங்களும் சந்தித்து கொண்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

படப்பிடிப்பின்போது ரஜினியும் கமலும் சந்தித்து ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், 21 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரே ஸ்டூடியோவில் ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஷூட்டிங் செய்யப்படுவதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவரும் தங்களது ஆரம்ப காலங்களில் ஒன்றாக நடித்த நிலையில், சில காலத்திற்குப் பிறகு தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் அவர்களுக்கு இடையிலான நட்பு இன்னமும் அப்படியே தொடர்கிறது. இந்தநிலையில், இருவரது படப்பிடிப்பும் 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே ஸ்டூடியோவில் நடப்பதால், இந்தச் சந்திப்பு சிறப்பானதாக அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajinikanth Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment