ரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.

Rajinikanth and latha Rajinikanth, rajini, superstar rajinikanth, rajinikanth costar his wife latha rajinikanth, ரஜினிகாந்த, லதா ரஜினிகாந்த், வைரல் வீடியோ, அக்னி சாட்சி, angi sakshi movie, agni satchi tamil movie, ரஜினி லதா சேர்ந்து நடித்த சினிமா, rajini movie, rajini - latha acting Agni Satchi movie, rajini latha video goes viral, viral video
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சினிமாவில் நடித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ரஜினி தனது மனைவி லதா உடன் நடித்த காட்சியை அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் லைக் செய்து வருகின்றனர்.
Advertisment
தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். அவரது ஸ்டைல் காரணமாக இன்றும் தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரராக திகழ்ந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், 2018-ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன். என்று கூறியது முதல் அவருடைய ஒவ்வொரு பேச்சும் விவாதிக்கப்படுகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த பேட்ட படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படங்களுக்கு அடுத்து வெளியான தர்பார் படமும் வெற்றி பெற்றது.
Advertisment
Advertisements
தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பொது முடக்கத்தால் படப்பிடிப்பு தொடக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நடித்த அக்னி சாட்சி படத்தில் இடம்பெற்ற ரஜினி - லதா வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
1982ல் நம் தலைவர் KBயின் இயக்கத்தில்"அக்னி சாட்சி"படத்தில் கௌரவவேடத்தில் தனது மனைவி லதாவோடு தனது வீட்லவைத்தே நடித்துகொடுத்தார்,தனது குருவுக்காக வீட்டில் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளவும் அனுமதித்தார்.
அதேபோல் அன்புள்ளரஜினிகாந்த் படத்திலும் லதா அவர்கள் முகத்தை காட்டாம நடித்திருப்பார் pic.twitter.com/Imc2jPgsyo
நடிகர் சிவக்குமார் - சரிகா ஜோடியாக நடித்த அக்னி சாட்சி திரைப்படம் 1982-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சீமா ஆகியோ கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் நிஜமாகவே ரஜினிகாந்த்தாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் உடன் வருவார். ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்த இந்த படத்தில், ரஜினி - லதா இடம்பெற்ற வீடியோ 38 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"