ரஜினியின் பேட்ட மரணமாஸ் பாடல் உலக அளவில் பிரபலமானது எப்படி?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடலுக்கு அமெரிக்காவில் ஒரு ரியாலிட்டி ஷோ இறுதிப்போட்டியில் ஒரு நடனக் குழு நடனமாடி அசத்தியதைத் தொடர்ந்து அந்த பாடல் உலக அளவில் பிரபலமாகியுள்ளது.

rajinikanth marana mass song famous world level, ரஜினி, பேட்ட, மரண மாஸ், அனிருத், anirudh marana mass song famous world level, marana mass world level, v unbeatable team, america reality show
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரணமாஸ் பாடலுக்கு அமெரிக்காவில் ஒரு ரியாலிட்டி ஷோ இறுதிப்போட்டியில் ஒரு நடனக் குழு நடனமாடி அசத்தியதைத் தொடர்ந்து அந்த பாடல் உலக அளவில் பிரபலமாகியுள்ளது.
Advertisment
கடந்த ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற மரணமாஸ் பாடல் அப்போது ரசிகர்களால் வரவேற்கப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. பேட்ட படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
Advertisment
Advertisements
பேட்ட படத்தில், ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, திரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், மாளவிகா மோகனன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் அமெரிக்காவின் திறமைக்கான நடத்தப்படும் நிகழ்ச்சியான அமெரிக்காவின் காட் டேலண்ட்: தி சாம்பியன்ஸ் சீசன் 2, இறுதிப்போட்டியில் பங்கேற்ற பிரபல நடனக் குழுவான வி அன்ஃபீட்டபிள் மரண மாஸ் பாடலுக்கு மாஸான நடனம் ஆடினர். இதில் சைக்கிளைப் பயன்படுத்தி சாகச நடனம் நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் அந்தரத்தில் பறந்து பறந்து நிகழ்த்திய மரண மாஸ் சாகச நடனம் பார்வையாளர்களையும், நீதிபதிகள் ஹெய்டி க்ளம், சைமன் கோவல், ஹோவி மண்டேல் மற்றும் அலேஷா டிக்சன் ஆகியோரை வியக்க வைத்தது. இதனால், ரஜினியின் பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்த மரண மாஸ் உலக அளவில் பிரபலமானது.