ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் 'அண்ணாத்த அண்ணாத்த' என தொடங்கும் இந்த பாடலை பாலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்தப் பாடல்தான் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் ஆகும். இதனை பாடலாசிரியர் விவேகாவும், டி.இமானும் எஸ்.பி.பி மறைந்த சில நாட்களுக்கு பின் பாடல் பதிவின் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தனர். தற்போது பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாடலின் தொடக்கத்தில் எஸ்பிபியை பெருமைப்படுத்தும் விதமாக 'இசை மேதை எஸ்.பி.பி ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கங்கள்' என படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர்.
பாடலைப் பொறுத்தவரை எஸ்.பி.பி., ரஜினிக்கே உரித்தான கனீர் குரலில் பாடியுள்ளார். ‘காந்தம் கணக்கா கண்ணப்பாரு, என தொடங்கும் பாடலில் அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீச’; ‘உலகினில் அழகு எது சொல்லவா... எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா! உயர்தர வீரம் எது சொல்லவா... சுயதவறுணரும் செயலல்லவா’ என வரிகள் வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ரஜினி படங்களுக்கு முதல் பாடலை பெரும்பாலும் எஸ்.பி.பி தான் பாடியுள்ளார். அந்த வகையில் இந்த பாடலும் அமைந்துள்ளது. இந்தநிலையில் எஸ்.பி.பி அவர்களை நினைவு கூறும் வகையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என பதிவிட்டுள்ளார்.
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
ஒரு ரசிகர், முதல் முறை சூப்பர் ஸ்டார் பாடல் வெளியீடு எமோஷனலாக உள்ளது. காரணம் எஸ்.பி.பி சார். அவர்கள் இருவரின் கூட்டணி எப்போதும் மேஜிக் தான் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் ரஜினி-எஸ்.பி.பி காம்போ இனி இல்லையே என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil