சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் டிராப் ஆகி விட்டதாகவும், பணத்தை தயாரிப்பாளரிடமே ரஜினி திருப்பியளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisment
சிவா இயக்கும் படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் சென்டிமென்ட் அதிகம் இருக்கும், மேலும். இந்த படத்தில் ரஜினி நடிக்க இருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். காமெடிக்கு சூரி, சதீஷ் என இரு நடிகர்கள் இருக்கிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக தெலுங்கு நடிகர் கோபிசந்தை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடந்தது.
Advertisment
Advertisements
அண்ணாத்தே' படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துவிட்டது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் மார்ச் மாத இறுதியில் ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் புனே மற்றும் கொல்கத்தாவில் படம்பிடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஷுட்டிங் அப்படியே நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே ரஜினிகாந்த் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டப்பிறகுதான் ஷூட்டிங் வரமுடியும் என்பதை தயாரிப்பு நிறுவனத்திடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்துக்கொள்ளலாமா எனக் கேட்டிருக்கிறது. அப்போதுதான், ``வாங்கிய அட்வான்ஸையே திருப்பித்தந்துவிடுகிறேன். இனி சினிமாவில் நடிப்பேனா எனத் தெரியாது'' என ரஜினி சொன்னதாகச் சொல்கிறார்கள்.
`அண்ணாத்த' வட்டாரத்தில் விசாரித்தபோது, இதெல்லாம் வழக்கமாக ரஜினி படம் என்றாலே சிலர் கிளப்பிவிடும் பொய்ச்செய்திகள். தயாரிப்பு நிறுவனம் சம்பளம் குறித்து ரஜினியிடம் பேசவே பேசாதபோது, ரஜினி எப்படி சம்பளத்தை திருப்பித்தருகிறேன் என்று சொல்லுவார். இதெல்லாமே பொய். ரஜினி நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறார். `கபாலி'க்குப்பிறகுதான் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதற்குப்பிறகு `காலா', `பேட்ட', `தர்பார்' என மூன்று படங்கள் நடித்துவிட்டார். `அண்ணாத்த' படத்திலும் ரஜினியின் போர்ஷன் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் முடிந்துவிட்டது.
கொரோனாவுக்கு மருந்தெல்லாம் கண்டுபிடித்தபிறகு நடிக்கவருகிறேன் என்று ரஜினி மட்டுமே சொல்லவில்லை, தயாரிப்பு நிறுவனமும் கொரோனா குறித்த அச்சம் முழுவதுமாக நீங்கியப்பிறகுதான் ஷூட்டிங்கை நடத்தவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது. அதனால் `அண்ணாத்த' படம் டிராப், இனி ரஜினி நடிக்கமாட்டார் என்கிற தகவல்களையெல்லாம் நம்பவேண்டாம். ரஜினிக்கு உடலில் முக்கியமான அறுவைசிகிச்சை நடந்திருப்பதால் நோய்த்தொற்றுக்கு அவர் எளிதில் ஆளாகக்கூடும் என்பதால், தமிழகம் இயல்புநிலைக்குத் திரும்பியப்பிறகுதான் ஷூட்டிங். ஆனால், ஐதராபாத், புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்படுவதாக இருந்த ஷூட்டிங்கை சென்னையிலேயே நடத்த திட்டமிட்டு வருகிறோம். ஐதராபாத்தில் போட்ட செட்டை சென்னையில் போடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது'' என்றார்கள்.
ரஜினி 'அண்ணாத்த' ஆடுவாரா ? - காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil