ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் தன்னிடம் குட் பை சொல்ல மறந்ததற்காக ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என ஜாக்கி ஷெராஃப் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ரஜினிக்கு போட்டி விஜய் தானா? கலாநிதி மாறன் பேச்சால் வெடித்த சர்ச்சை
இந்தநிலையில், நடிகர் ஜாக்கி ஷெராஃப், ஜெயிலர் படபிடிப்பில் ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்வை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஜெயிலர் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் எனக்கு குட் பை சொல்லாமல் சென்றார். ஆனால் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு விடைப்பெற்றுச் சென்றார், என ஜாக்கி ஷெராஃப் கூறினார்.
தனியார் ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் ஜாக்கி ஷெராஃப் “எல்லாம் மாறினாலும், ரஜினிகாந்த் அப்படியே இருக்கிறார். அவரது அடக்கமும், அனைவரிடமும் மரியாதை செலுத்தும் பண்பும் பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அடக்கமான சூப்பர் ஸ்டார் அவர்தான். ஹிட், ஃப்ளாப்புக்கு அப்பாற்பட்ட நட்சத்திரம் அவர். அவருடன் பணிபுரியும் போது, அனுபவம் மெருகூட்டுகிறது. ரஜினி திரையுலகில் மிகவும் வித்தியாசமான நபர். அவர் திரைப்படத்தில் தோன்றும் ஒவ்வொரு முறையும், அவர் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகிறார். மேலும் அவர் தனது கதாபாத்திரத்தை விட்டு வெளியேறியவுடன், அவர் அப்படியே இருக்கிறார். அவரது நடை, ஸ்டைல், பேச்சு, தோற்றம், கண்ணாடி அணிந்தபடி அனைத்தையும் செய்யும் விதம், அவருக்கு என்ன சொத்து இருந்தாலும், அவர் புத்திசாலி என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.
ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்டதை நினைவுகூர்ந்த ஜாக்கி, ஷெராஃப், “அவர் தனது அன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியிருந்தது. அவர் தனது காரில் அமர்ந்திருந்தார், ஆனால் அவர் என்னிடம் 'பை' சொல்லாததால் திரும்பி வந்தார். அவர் வந்து, ‘உங்களிடம் விடைபெற மறந்துவிட்டேன் மன்னிக்கவும். உங்களுக்கு நான் தேவைப்பட்டால், நான் இங்கேயே இருக்கிறேன்’ என்று கூறினார். நான் கிட்டத்தட்ட கண்ணீருடன் இருந்தேன், ஆனால் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். அவர் முன்னணி நாயகனாக இருக்கும் ஒரு படத்தில் நாங்கள் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளோம். நாங்கள் என்ன செய்தாலும், அவர் நம்மை நேசித்ததால், எங்களுக்கு நிறைய அன்பையும் மரியாதையையும் கொடுத்ததால், அதன் ஒவ்வொரு பகுதியையும் நாங்கள் அனுபவித்தோம். அவர் எங்களை தனது குடும்ப உறுப்பினர்களைப் போல கவனித்துக் கொண்டார்,” என்று ஜாக்கி ஷெராஃப் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil