/indian-express-tamil/media/media_files/2025/09/10/rajini-siva-2025-09-10-19-28-17.jpg)
நடிகர் சிவகார்த்திகேயன், தனது நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். ஆனால், சமீபத்தில் வெளியான 'மதராஸி' திரைப்படம், அவரை ஒரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை நகைச்சுவை மற்றும் காதல் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்கள், இந்தப் படத்தில் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் எழுதி இயக்கிய மதராஸி திரைப்படம் 2025 செப்டம்பர் 5 அன்று வெளியானது. ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை ஒரு உளவியல் ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.
இதில் சிவகார்த்திகேயன், வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்தும் கும்பலைத் தடுக்கும் ஒரு அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு, அதிரடி காட்சிகள் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக அவரது புதிய தோற்றம் ஆகியவை ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த தனக்கு போன்செய்து வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதராஸி படம் வெளியான பிறகு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனைத் தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் பார்த்த பிறகு, ரஜினி சிவகார்த்திகேயனின் நடிப்பு, குறிப்பாக அவரது ஆக்ஷன் நடிப்பைக் கண்டு வியந்துள்ளார். சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பேசியதைக் குறிப்பிட்டு, "என் கடவுள், என் தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து மதராஸி படத்திற்கான பாராட்டைப் பெற்றேன்" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Just received the appreciation for #Madharaasi from my idol, my Thalaivar #Superstar@rajinikanth sir 😍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2025
“My god, excellent!
Enna performance!
Enna actions!
Super super SK!
Enakku romba pudichirundhadhu.
Action hero aagiteenga.
God bless, God bless.”
Heartfelt wishes from my…
ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனிடம், "மை காட், எக்ஸலண்ட்! என்ன பெர்ஃபார்மன்ஸ்! என்ன ஆக்ஷன்ஸ்! சூப்பர் சூப்பர் எஸ்.கே! எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆயிட்டீங்க. காட் பிளஸ், காட் பிளஸ்" என்று பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தக் குறிப்பிட்ட பாராட்டுகள், சிவகார்த்திகேயனின் எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன, மேலும் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.