தொடர் மழை காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், திமுக அரசின் நடவடிக்கைகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில், தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1998ம் ஆண்டு ஜெயலலிதாவை விமர்சித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதாவை காரசாரமாக தாக்கி பேசிய ரஜினியின் இந்த பேட்டி வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்னா கெத்து, என்னா தைரியம் என்று புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ரசிகர்கள் கொண்டாடி வௌர்கின்றனர். இந்த நிலையில், இந்த நிலையில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 1996ம் ஆண்டு ஜெயலலிதா தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினி விளக்கம் அளித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த வீடியோதான் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ஜெயலலிதா அவர்கள் ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா? இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.
“ஜெயலலிதா அவர்கள் ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா? இல்லையா? என்று கேட்டிருக்கிறார். நான் கருப்பு பணம் வாங்கியது இல்லை என்று சொன்னால் அது பொய். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பு பணம் வாங்கி இருந்தேன். அதற்கு பிறகு எனக்கு புத்தி வந்து நான் கருப்பு பணம் வாங்குவதை குறைத்துக் கொண்டேன். மேலும், சினிமா துறையை பற்றி தெரிந்துகொண்டே ஜெயலலிதா அவர்கள் கருப்பு பணத்தை பற்றி கேள்வி எழுப்புவது நினைத்தால் என்ன சொல்வதென்று தெரியல. ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயலில் இறங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது.
இப்போது கூட நான் வருமான வரி சோதனையின் ரிப்போர்ட் கொடுக்கிறேன். இவ்வளவு ஆன பிறகு கூட ஜெயலலிதா அவர்கள் இப்போ மாறாதவர் வாழ்க்கையில எப்போவும் மாறமாட்டார்கள். முதலில் அவர்களுக்கு பண வெறி இருந்தது, இப்ப பதவி வெறி வந்துவிட்டது. அவர்கள் என்னைக்கும் மாற மாட்டார் என்று ரஜினிகாந்த் ஜெயலலிதா குறித்து கடுமையாகத் தாக்கிப் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில், பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக தெரிவித்திருந்தீர்கள். ஆனால், இப்போது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “ஆமாம், அத்வானி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது என்று தெரிவித்திருக்கிறேன். ஆமாம், உண்மைதான். அந்த மரியாதை ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தும் கூட்டணி வைத்ததால் கொஞ்சம் ஒருபடி குறைந்துள்ளது” என்று கூறுகிறார். ஜெயலலிதாவை காரசாரமாக தாக்கி பேசிய ரஜினியின் இந்த பேட்டி வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்னா கெத்து, என்னா தைரியம் என்று புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“