ரஜினிக்கு மத்திய அரசு விருது: திரைத்துறைக்கு அளப்பரிய பணி செய்திருப்பதாக பாராட்டு

Rajinikanth Award: ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டதை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வரவேற்று பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Super star rajinikanth conferred with award as icon of iffi: கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975-ல் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர், இன்றும் இளம் நடிகர்களை விஞ்சிய வசூல் நாயகனாகத் திகழ்கிறார். இவரது திரைத்துறை சேவையை கவுரவிக்கும் விதமான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக சினிமா நட்சத்திரமான ரஜினிகாந்தின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அடையாளமாக விருது வழங்கப்படுகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார். வருகிற 20-ம் தேதி கோவாவில் தொடங்கி நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விருது அறிவிக்கப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா பொன்விழாவையொட்டி இந்த உயரிய கவுரவத்தை வழங்கியிருப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.


ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டதை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வரவேற்று பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close