scorecardresearch

Rajinikanth Birthday : ஓர் குரல்… ஓர் புகழ்.. மன்னனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

hbd rajinikanth : ’16 வயதினிலே’ படத்திலேயே ‘இது எப்படி இருக்கு’ என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம்

rajinikanth twitter rajini tweet
rajinikanth twitter rajini tweet

Rajinikanth Birthday Happy birthday Superstar : தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 70. தமிழக மக்களை மயக்கியதில் மந்திரன். தமிழ் சினிமாவில் பஞ்ச டையலாக் என்ற கோலத்திற்கு தொடக்கபுள்ளி வைத்தவரே ரஜினி தான். ’16 வயதினிலே’ படத்திலேயே ‘இது எப்படி இருக்கு’ என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம் சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற “சும்மா அதிருதுல்ல’ வரை தொடர்ந்து தற்போது 2.0 சிட்டி ரோபோவே பஞ்ச் அடிக்கும் வரை பட்டையை கிளப்பினார்.

வரப்போகும் அண்ணாத்த-யிலும் கட்டாயம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கு மட்டும் ரஜினி பஞ்ச் பேசியதில்லை அவர் பேசும் சாதாரண வசனங்களில் கூட பஞ்ச் இருக்கும் என்பது அவரின் ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,

‘அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில், இன்றைய அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவரது பிறந்தநாளைக் கொண்டாடுமாறு நிர்வாகிகள், ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 14-ம் தேதிதொடங்குகிறது. இதற்காக, ரஜினி 13-ம் தேதி ஹைதராபாத் செல்கிறார். 31-ம் தேதிசென்னை வந்து, கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார்.

Happy birthday Superstar : மன்னனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அன்பும், பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் – திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்.

முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த வாழ்த்துகள்

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth birthday happy birthday superstar rajinikant hbd rajinikanth annaatthe

Best of Express