Superstar Rajinikanth : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ’பேட்ட’ திரைப்படத்துடன் 2019-ம் ஆண்டைத் தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தனது 167-வது திரைப்படமான ’தர்பார்’ படப்பிடிப்பை ஒரு மாதத்திற்கு முன்பே முடித்து விட்டார். இப்போது அந்தக் குழு, டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
One of the best Dubbing sessions in my life… Thalaivar Darbar dubbing completed. ???????????????? #DarbarThiruvizha @LycaProductions pic.twitter.com/CzSYc1aKti
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 18, 2019
கடந்த வாரம் தர்பார் படத்துக்கான டப்பிங்கை தொடங்கினார் சூப்பர் ஸ்டார். இப்போது அவர் தனது டப்பிங்கை முடித்திருக்கிறார். இதை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். “என் வாழ்க்கையில் மிகச் சிறந்த டப்பிங் அமர்வுகளில் ஒன்று… தலைவர் தர்பார் டப்பிங்கை முடித்து விட்டார்” எனக் கூறி, ரஜினியுடன் தான் இருக்கும் படத்தையும் ட்வீட் செய்துள்ளார்.
தர்பார் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பப்பர் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.