Coolie Audio Launch Updates: 1 கூலி 1000 பாட்ஷாவுக்கு சமம்: நாகர்ஜூனா

Title: Rajinikanth's Coolie Audio Launch Date and Time Live Updates: 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் நடக்கிறது.

Title: Rajinikanth's Coolie Audio Launch Date and Time Live Updates: 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coolie Audio Launch LIVE Updates:

Coolie Audio Launch Event Chennai Today Live Updates: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ''கூலி'' படம் வருகிற 14-ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 

Advertisment

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க அனிருத் இசைமைத்துள்ளார். அவரே இவ்விழாவின் நாயகனாக இருப்பார். கூலி படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. 

  • Aug 02, 2025 22:17 IST

    இவர்களை நம்ப முடியாது: ரஜினிகாந்த் யாரை சொல்கிறார்?

    எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண்பாடு இருக்கலாம் ஆனால் அவர் மனதில் பட்டதை சொல்லி விடுவார். மனதில் பட்டதை சொல்பவர்களை நம்பலாம். ஆனால் உள்ளே வைத்துக்கொண்டு இருப்பவர்களை நம்ப முடியாது என கூலி விழாவில் ரஜினி பேசியுள்ளார்.



  • Aug 02, 2025 22:16 IST

    படத்தின் உண்மையான ஹீரோ வேறு யாருமல்ல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்: ரஜினிகாந்த்

    படத்தின் உண்மையான ஹீரோ வேறு யாருமல்ல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் . மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டு வந்த படம். ஜெயிலர் படத்தின்  மகத்தான வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸுடன் இணைந்து லோகேஷின் அடுத்த படமாக கூலி உள்ளது. மிகவும் வெற்றிகரமான வணிக இயக்குனர் என்னுடன் இணைகிறார் - மேலும் ஒரு நட்சத்திர நடிகர்களுடன், இந்த கூட்டணியே ஒரு புயலை உருவாக்கியது. அனிருத்தின் இசை ரசிகர்களிடையே பரபரப்பை மேலும் உயர்த்தியது - பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே தங்கத்தை ஈர்த்துள்ளன என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 02, 2025 22:13 IST

    என் அப்பாவை பெருமைப்படுத்தும்  விதமாக இதை பயன்படுத்தினேன்: லோகேஷ் கனகராஜ்

    என் அப்பா ஒரு பஸ் கண்டக்டர், அவருடைய கூலி எண் 5821. என் அப்பாவை பெருமைப்படுத்தும்  விதமாக கூலி படத்தில் ரஜினி சாருக்கு இதைப் பயன்படுத்தினேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.



  • Aug 02, 2025 22:10 IST

    1 கூலி 1000 பாட்ஷாவுக்கு சமம்: நாகர்ஜூனா

    கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் நாகர்ஜூனா 1 கூலி 1000 பாட்ஷாவுக்கு சமம் என்று கூறியுள்ளார். 



  • Aug 02, 2025 22:09 IST

    2 படம் வெற்றி பெற்றால் பிரைவேட் ஜெட் விமானங்களைக் கேட்கிறார்கள்: கலாநிதி மாறன் ஆதங்கம்

    இப்போதெல்லாம் இளம் வெற்றிகரமான நடிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறையைக் காட்டுகிறார்கள். 2 வெற்றிப் 2 வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டால் அவர்கள் போனை எடுப்பதே இல்லை; அவர்கள் பிரைவேட் ஜெட் விமானங்களைக் கேட்கிறார்கள். ஆனால் ரஜினி சார் ஒரு பணிவான மற்றும் எளிமையான மனிதர். அவர் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று கலாநிதி மாறன் கூறியுள்ளார்.



  • Aug 02, 2025 19:42 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - அரங்கம் அதிரடி என்ட்ரி கொடுத்த ரஜினி 

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 19:40 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த நாகார்ஜுனா

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள இந்தியாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா வந்துள்ளார். 



  • Aug 02, 2025 19:39 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த அமீர் கான்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள இந்தியாவின் முன்னணி நடிகரான அமீர் கான் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 19:22 IST

    'கூலி' டிரெய்லர் வெளியீடு 

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், 'கூலி' படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 



  • Aug 02, 2025 19:02 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த உபேந்திர ராவ்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகரான உபேந்திர ராவ் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 18:48 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த ஸ்ருதி ஹாசன்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகையான ஸ்ருதி ஹாசன் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 18:47 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த இயக்குநர் 

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 18:44 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த மோனிகா பாடல் பாடகி 

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடலை பாடிய சுப்லக்ஷிணி வந்துள்ளார். அவர் இப்பாடலை மேடையில் பாட இருப்பதாக தெரிவித்துள்ளார். 



  • Aug 02, 2025 18:42 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த சத்தியராஜ் 

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகரான வந்துள்ளார்.



  • Aug 02, 2025 18:41 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு - விழா அரங்கிற்கு வந்த சோபின் ஷாஹிர்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்கு படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகரான சோபின் ஷாஹிர் வந்துள்ளார். 



  • Aug 02, 2025 18:04 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - ஆர்ப்பரித்து கொண்டாடும் ரசிகர்கள்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் அரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி வருகிறார்கள். 

     



  • Aug 02, 2025 18:01 IST

    எனக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கு  - ரஜினி பேட்டி 

    'கூலி' பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எனக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கு; ஆண்டவன் இருக்கான்." என்று கூறினார். 



  • Aug 02, 2025 17:30 IST

    ரஜினி வருகை- ரசிகர்கள் ஆராவாரம்

    'கூலி' பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க நேரு விளையாட்டு அரங்கத்திற்கு ரஜினிகாந்த் வருகை தந்தார்.



  • Aug 02, 2025 17:03 IST

    கூலி திரைப்பட விழா- புறப்பட்ட ரஜினி

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சற்று நேரத்தில் கூலி படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா தொடங்க உள்ள நிலையில் தனது வீட்டில் இருந்து ரஜினி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு தனக்கும் உள்ளது என்றார்.



  • Aug 02, 2025 16:39 IST

    கூலி படத்தில் இதுவரை 3 பாடல்கள் வெளியீடு

    அனிருத் இசையில்  இதுவரை கூலி படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் சமீபத்தில் வெளியான கூலி த பவர்ஹவுஸ் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்களான மோனிகா , சிகிட்டு பாடலும் பரவலாக கவனமீர்த்துள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • Aug 02, 2025 16:24 IST

    ஆடியோ வெளியீட்டு விழாவில் ட்ரெய்லரும் வெளியீடு

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படத்தின் டிரெய்லரும் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

     



  • Aug 02, 2025 15:52 IST

    ரஜினிகாந்தின் திரையுலகின் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டமாகவும் இருக்கும் என எதிர்பார்ப்பு

    கூலிக்கு இது சாதாரண பாடல் வெளியீட்டு விழா மட்டுமல்ல. மாறாக, ரஜினிகாந்தின் திரையுலகின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதிரடி த்ரில்லரின் நடிகர்கள் மற்றும் குழுவினரின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் தோற்றங்களுடன் இந்த வெளியீடு நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Aug 02, 2025 15:50 IST

    சுதந்திர தினத்திற்கு முன்பு வெளியாகும் கூலி

    இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த அதிரடி த்ரில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



  • Aug 02, 2025 15:48 IST

    ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழா ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் முன்னதாக ஏற்கனவே ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது ஒரு பிரமாண்டமான ஆடியோ வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றனர். இன்று மாலை 7 மணிக்கு கூலி படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. 



  • Aug 02, 2025 14:39 IST

    அழகான திரைக்கதை - கூலி படம் குறித்து அனிருத் பேட்டி 

    கூலி படத்தின் திரைக்கதை அழகாக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், "இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் ரஜினி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை இந்த படத்தில் காணலாம். இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல நட்சத்திரங்கள் இந்தபடத்தில் நடித்துள்ளனர். இப்படி ஒரு கூட்டணி வேறு எந்தவொரு படத்துக்குமே அமையாது. 'கூலி 'ஒரு புத்திசாலித்தனமான படம். திரைக்கதை அருமையாக உள்ளது." என்று கூறினார்.



  • Aug 02, 2025 14:04 IST

    'கூலி' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - இடம் நேரம், இடம் விபரம் இங்கே!

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 



  • Aug 02, 2025 14:03 IST

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்தின் இந்தப் பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.



Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: