/indian-express-tamil/media/media_files/2025/08/18/coolie-rajinikanth-2025-08-18-21-28-36.jpg)
கூலி திரைப்படத்தை ஓ.டி.டி தளமான அமேசான் பிரைம் ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Coolie OTT release: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், கூலி ஓ.டி.டி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கூலி திரைப்படத்தை ஓ.டி.டி தளமான அமேசான் பிரைம் ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தை நிறைவு செய்தார், அதே நேரத்தில் அவருடைய நடிப்பில் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்தபடி, 'கூலி' திரைப்படம் அதன் முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றி பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டாலும், பலர் 'கூலி' படத்தின் ஓ.டி.டி வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.
கூலி ஓ.டி.டி வெளியீடு
'கூலி' திரைப்படம் எந்த ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்பதைத் தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். படத்தின் தொடக்கத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு முன்னணி ஓ.டி.டி தளம் அதன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னராக அறிவிக்கப்பட்டுள்ளது.
'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, அமேசான் பிரைம் வீடியோவில் ஆன்லைனில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
'தி எகனாமிக் டைம்ஸ்' செய்தியின்படி, அமான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளம்'கூலி' படத்தின் டிஜிட்டல் உரிமைகளை ரூ.120 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரையில் தமிழ் திரைப்படத் துறையில் நடந்த மிகப்பெரிய டிஜிட்டல் ஒப்பந்தங்களில் ஒன்று எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள'கூலி திரைப்படத்தில், , நாகார்ஜுனா அக்கினேனி, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் ரச்சிதா ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமிர் கான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரும் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இதுவரை இந்தியாவில் முதல் வார இறுதியில் ரூ.194.25 கோடி நிகர வருவாயைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் இதன் முதல் நாள் வசூல் ரூ.65 கோடியாக இருந்தது. இந்தப் படம் தமிழில் வெளியானது, பின்னர் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.