Darbar Movie Poster Release: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. படத்தில் மாஸாக காட்சியளித்து, தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக தனது 167-வது திரைப்படமான ’தர்பார்’ படத்தில் ஒப்பந்தமானார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கி வருகிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதன் முறையாக ரஜினியும் – முருகதாஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ரஜினியின் 2.0 திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், தர்பாரை தயாரிக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு தர்பார் போஸ்டர்களை கமல்ஹாசனும், மகேஷ் பாபுவும் வெளியிடுகிறார்கள். இந்தி தர்பார் போஸ்டரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட, மலையாள தர்பார் போஸ்டரை மோகன்லால் வெளியிடுகிறார். இதனால் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.
Live Blog
Rajinikanth’s Darbar Movie Poster Release
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
வெறித்தனமான மியூஸிக் போட்ட, அனிருத்துக்கு நன்றி
ஆதித்யா அருணாச்சலத்தை திரையில் காண, வெறித்தனமாக வெயிட் செய்வதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரஜினி வெறும் சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என நடிகர் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஃபிரேமும் கண் கொள்ளா காட்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
தர்பார் படத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தர்பார் போஸ்டர் வெளியீட்டை முன்னிட்டு, ரஜினிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் கமல் ரசிகர்கள்!
இந்த பொங்கல் மாஸாக இருக்கும் என நடிகர் சதீஷ் ட்வீட்டியுள்ளார்.
வயது என்பது வெறும் நம்பர் தான் என்பது ரஜினியை பார்த்தால் தெரிகிறது என இவர் கூறியுள்ளார்.
மீண்டும் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க வேண்டுமென ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
கமல் ஹாசனுக்கு தங்களது நன்றியையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் ரஜினி ரசிகர்கள்.
தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமலுக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
நண்பர் ரஜினிகாந்தின் தர்பார் போஸ்டர் எனக் குறிப்பிட்டு, தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
தர்பார் தெலுங்கு போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மகேஷ் பாபு
தமிழ் திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு உச்ச நட்சத்திரமாக விளங்குவது ரஜினியும், கமலும். இன்று நடிகர் கமல் ஹாசன் தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் தர்பார் பட மோஷன் போஸ்டரும் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவிருக்கிறது. இதனை ரஜினியின் நெருங்கிய நண்பரும், ’பர்த்டே பாயுமான’ கமல் வெளியிடுகிறார்.
இன்னும் சில நிமிடங்களில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியாவதால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்
தர்பார் மோஷன் போஸ்டரை தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.
தர்பார் மோஷன் போஸ்டர் வெளியிடுபவர்களின் விபரத்தை நேற்றே ட்விட்டரில் அறிவித்திருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அதில் தெலுங்கில் வெளியிடுவது யார் எனக் குறிப்பிடவில்லை
தர்பார் மோஷன் போஸ்டர் வெளியாக இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கிறது என லைகா நிறுவனம் ட்வீட்டியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்னும் 1 மணி நேரத்தில் வெளியாகவிருக்கிறது. முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகும் போது ரசிகர்கள் மகிழ்வார்கள். ஆனால் இந்த ஆன்லைன் உலகத்தில், இப்போதெல்லாம் ரஜினியை பற்றி எந்த செய்தி வெளியானாலும், திகட்ட திகட்ட கொண்டாடி மகிழ்கிறார்கள் அவரது ரசிகர்கள். அந்த கொண்டாட்டம் இன்று சற்று அதிகமாகவே இருக்கும் என நம்புகிறோம்.