வடிவேலு, தோனி, யுவராஜ் சிங்... ரஜினியின் ’சும்மா கிழி’ வெர்ஷன்!

Superstar Rajinikanth : பெரும்பாலான பாடல்கள், டீசர், ட்ரைலர்களுக்கு வடிவேலு வெர்ஷனை உருவாக்குவார்கள்

Superstar Rajinikanth : பெரும்பாலான பாடல்கள், டீசர், ட்ரைலர்களுக்கு வடிவேலு வெர்ஷனை உருவாக்குவார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chumma Kizhi Version, vadivelu, ms dhoni, yuvraj singh

Chumma Kizhi Version

Chumma Kizhi Song : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை அனிருத்.

Advertisment

சமீபத்தில் தர்பார் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சும்மா கிழி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதனை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். பொதுவாக ஒரு பாடல் வெளியானால் அதனைக் கொண்டு மற்ற வெர்ஷன்களை உருவாக்குவது நெட்டிசன்களின் வழக்கம். பெரும்பாலான பாடல்கள், டீசர், ட்ரைலர்களுக்கு வடிவேலு வெர்ஷனை உருவாக்குவார்கள். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல் என்றால், இதன் வெர்ஷன்கள் தாறுமாறாக இருக்கும். அந்த வகையில் ‘சும்மா கிழி’ பாடலை மையமாக வைத்து தோனி, யுவராஜ் சிங், வடிவேலு உள்ளிட்டவர்களின் வெர்ஷன்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

வரிகளுக்கு ஏற்றபடி வைகைப்புயல் வடிவேலுவின் முக பாவனைகளை ‘கனெக்ட்’ செய்து சும்மா கிழி வடிவேலு வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இது இன்னொரு வடிவேலு வெர்ஷன்.இன்னும் பல வடிவேலு வெர்ஷன்கள் யூ ட்யூபில் கொட்டிக் கிடக்கின்றன.

ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு புகழ் பெற்றவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியின் வெர்ஷன் தான் இது. ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, தமிழ் ரசிகர்களின் ஆதரவு ஏராளம். கிடைக்கும் கேப்பில் எல்லாம் தோனியைக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் ரஜினியின் சுமா கிழி பாடலை, தோனி வெர்ஷனாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்னுமொரு தோனி வெர்ஷன்.

மற்றொரு தோனி வெர்ஷன். இன்னும் நிறைய தோனி வெர்ஷன்களும் உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங்கின் ‘சும்மா கிழி’ வெர்ஷன் இது. புற்றுநோயால் பாதிப்படைந்து, அதனுடன் போராடி வீழ்த்திய யுவராஜுக்கு ‘போராளி’ பட்டம் நன்றாக பொருந்தும்.

இது சிம்பு வெர்ஷன். இப்போதைக்கு யூ ட்யூபில் இருக்கும் சும்மா கிழி வெர்ஷன்களின் முக்கியமான சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். இன்னும் என்னவெல்லாம் வெர்ஷன் வரப் போகிறதோ....

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: