Advertisment

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth darbar movie collection, தர்பார், ரஜினி, விஜய், பிகில், தர்பார் வசூல், பிகில் வசூல், rajinikanth, darbar movie not beat vijay bigil movie collection, திருப்பூர் சுப்ரமணியம், distributor Tirupur Subramaniam, vijay, bigil, pattas, dhanush, dhanush movie pattas

rajinikanth darbar movie collection, தர்பார், ரஜினி, விஜய், பிகில், தர்பார் வசூல், பிகில் வசூல், rajinikanth, darbar movie not beat vijay bigil movie collection, திருப்பூர் சுப்ரமணியம், distributor Tirupur Subramaniam, vijay, bigil, pattas, dhanush, dhanush movie pattas

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Advertisment

திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இந்தியா கிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், ரஜினியின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது; அந்த படங்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? என்பது பற்றி கூறுகையில், “கடந்த பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படம் எப்படி வெளியானதோ அதே போல, இந்த பொங்கலுக்கு தர்பார், பட்டாஸ் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நல்லா போய்க்கொண்டிருக்கிறது. தர்பார் பிரி ரிலீஸ் செய்ததால் நாங்கள் அந்த 6 நாள் கூடுதலாக வசூல் பார்க்க முடிந்தது. அதனால், பிரி ரிலீஸ் நல்ல ஒரு ஐடியா.” என்று கூறினார்.

ரஜினியின் தர்பார் படம் விஜய்யின் பிகில் படத்தின் வசூலை முறியடித்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், இதுவரைக்கும் இல்லை. ஆனால், படம் ஓடி முடியும்போதுதான் என்ன என்பது தெரியும் என்று கூறினார்.

சமீபத்தில், சமூக ஊடகங்களில் தர்பார் திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது என்றும் பிகில் படம் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திருப்பூர் சுப்ரமணியம், “இந்த தகவல் மிகவும் தவறானது. தமிழகத்தில் பிகில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டியது. நிச்சயமாக 125 கோடி, 130 கோடியாக இருக்கலாம் என்று கூறினார். தர்பார் படமும் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும். என்னுடைய அனுமானம் 100 கோடியை தாண்டியிருக்கும். பள்ளிகள், அலுவலகம் திறக்கப்படுவதால் அதனால், நாளை முதல் வசூல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்துதான் தர்பார் வசூல் பிகிலை தாண்டுமா தாண்டாது என்று கூறமுடியும். இப்போதைய நிலவரப்படி நிச்சயமாக தர்பார் படம் பிகில் படத்தின் வசூலைத் தாண்டவில்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்ம், தர்பார் படத்தையும் பட்டாஸ் படத்தையும் ஒன்றாக ஒப்பிடுவதே தவறு. தர்பார் படம் 12 கோடி ரூபாய் என்றால் பட்டாஸ் படம் 2.50 கோடி ரூபாய். தர்பார் படத்தின் விலையில் பட்டாஸ் படத்தின் விலை 5-இல் 1 பங்குதான்.

அதே போல, தனுஷ் நடித்த அசுரன் படத்தின் வசூலை அவருடைய பட்டாஸ் படத்தின் வசூல் முறியடிக்கவில்லை. பட்டாஸ் படத்தைவிட அசுரன் படம்தான் சிறந்த படம்.

பட்டாஸ் படம் வெளியான பிறகு, தர்பார் படத்தின் வசூல் நிச்சயமாக குறைந்துள்ளது. ஏனென்றால், ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 6 திரைகளில் தர்பார் திரையிடப்படுகிறது என்றால் தர்பார் படம் வெளியானதும் 2 திரையரங்குகளில் பட்டாஸ் திரையிடப்பட்டது. அப்படி செய்யும்போது தர்பார் வசூல் குறையத்தானே செய்யும்” என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.

மேலும், “ரஜினியின் கபாலி, காலா படத்துடன் ஒப்பிடும்போது இப்போது பேட்ட, தர்பார் படங்களில் அரசியல் மிகவும் குறைவு. ரஜினி மாஸ் படமாகவும் உள்ளது. இனி ரஜினி எது போன்ற படங்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமல்ல எல்லா ஸ்டார்களும் சினிமாவில் அரசியலை தவிர்ப்பது நல்லது. சினிமா ஒரு பொழுதுபோக்கு. தேவையில்லாமல் இதில் அரசியலைப் புகுத்தினால் அதனால் உங்களுக்கு ஒன்று வெற்றி கிடைக்கப்போவதில்லை. அரசியலை மேடையில் பேசுங்கள். சினிமாவை சினிமாவில் அரசியல் பேசுங்கள். சினிமாவை சினிமாவாக பாருங்கள். சினிமாவில் அரசியல் இல்லாததால் கபாலி, காலாவைவிட பேட்ட, தர்பார் ஆகிய இரண்டு படங்கள் பிரமாதமாக வசூல் செய்திருக்கிறது.” என்று ரஜினி படங்களின் வசூல் பற்றி கூறினார்.

தர்பார் படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம், தர்பார் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி போலீஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் சிறப்பாக இயக்கி இருக்கிறார். ரஜினியின் மகளாக நடித்துள்ளவர் நல்லா நடித்திருக்கிறார்.” என்றார்.

இந்த பொங்கலுக்கு அரசியல் தலையீட்டால்தான் ரஜினி படமும் அவரது மருமகன் தனுஷ் படமும் வெளியானதாக கூறுகின்றனர். இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் சும்மா சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். சினிமாக்காரர்கள் சினிமா வேலையைப் பார்க்கிறார்கள். பண்டிகை காலங்களில் 2 படங்கள் வந்தால் நல்லா இருக்கும் என்று கடந்த தீபாவளி நிரூபித்துவிட்டது. தீபாவளிக்கு வெளியான பிகிலும் கைதியும் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால், குறைந்தபட்சம் 2 படங்கள் வெளியாகலாம்.

பட்டாஸ் வெளியாகவில்லையென்றால் தர்பார் படத்தின் வசூல் கூடியிருக்குமா என்றால் ஒரு 10 சதவீதம் கூடியிருக்கும். ரொம்ப அதிகம் எல்லாம் வசூல் ஆகி இருக்காது.

தர்பார் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் என்று லைகா புரொடக்‌ஷன் சொல்லியிருப்பது நம்பகமான தகவல். நிச்சயமாக தர்பார் படம் உலக அளவில் 150 கோடி ரூபாயை வசூலித்திருக்கும்” என்று கூறினார்.

Actor Vijay Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment