scorecardresearch

தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்: உண்மையில் 69 வயது நடிகர் தானா ரஜினி?

Darbar Second Look Poster: ஓணம் கொண்டாட்ட ஸ்பெஷலாக இன்று இதனை வெளியிடுவதாகவும் லைகா கூறியிருக்கிறது.

darbar second look rajinikanth, rajinikanth darbar second look, ரஜினிகாந்த், தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்
darbar second look rajinikanth, rajinikanth darbar second look, ரஜினிகாந்த், தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்

Rajinikanth’s Darbar Second Look Poster To Be Released Today: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமாக ‘தர்பார்’ தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியானது. ரஜினி சிரித்தபடி இருந்த அந்த முதல் போஸ்டரில், ‘சரி எது, தவறு எது என நீயே தீர்மானிக்க வேண்டும்’ என வாசகம் இருந்தது. டெல்லியில் உள்ள இந்தியா கேட், துப்பாக்கி, போலீஸ் தொப்பி, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முதல் போஸ்டர் அமைந்தது.

ஏற்கனவே 3 படங்களில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அனிருத்! பேட்டை பராக் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என பலமான கூட்டணி அமைத்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

darbar second look rajinikanth, rajinikanth darbar second look, ரஜினிகாந்த், தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்
Darbar First Look

Darbar Second Look Poster: தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்

தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக, ரஜினியின் தர்பார் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் ‘செகண்ட் லுக் போஸ்டர்’ வெளியாகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 11) மாலை 6 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவித்திருந்தது.

பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி

ஓணம் கொண்டாட்ட ஸ்பெஷலாக இன்று இதனை வெளியிடுவதாகவும் லைகா கூறியிருக்கிறது. செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தர்பார் செகண்ட் லுக் போஸ்டர் என்கிற வாசகத்தை டிவிட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் ஆக்ஷன் பேக் ஸ்டில்லாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


உண்மையில், 69 வயது நடிகரா ரஜினிகாந்த்? என்பதே நம்முன் இருக்கும் கேள்வி.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth darbar second look poster live updates darbar second look reactions