Rajinikanth Fans Association head V M Sudhakar passed away
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
Advertisment
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர் சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர், அவரது நெருங்கிய நண்பரும் கூட. இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்ற தகவல் கூட சோசியல் மீடியாக்களில் செய்தி பரவியியது.
Pic Courtesy:@SudhakarVM
இதற்கு, உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று சுதாகர் அப்போது ட்வீட்டரில் கூறியிருந்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சுதாகர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் சுதாகர் உடலுக்கு நேரிலும் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சுதாகர் எனது நீண்ட கால நண்பர்; நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று கூறினார்.
என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். @SudhakarVM