சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தங்க தேர் இழுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் ரஜினி தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் பிரபாகர், மாநில நிர்வாகிகள் குமார்,கோபி,காமராஜ், ரமேஷ்,ராமச்சந்திரன், தாரகை ராஜா,இணை செயலாளர் ஆட்டுப்பட்டி பாஸ்கர் உட்பட பலர் செய்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“