/indian-express-tamil/media/media_files/38OZCdZgrTVWwYadAIxr.jpg)
ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பத்திற்கு ரஞ்சித் பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட வேண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.
Pa Ranjith | Rajini Kanth: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்ப்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது
இந்நிலையில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக படக்குழு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, 'காலா' படம் ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் வெளியானது. ஆனால், இப்படம் கபாலியை விட குறைவான கமர்சியலாக படமாகவும், பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. எனினும், இந்தப் படங்கள் பா.ரஞ்சித்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின.
இந்த நிலையில், அரசியல் தொடர்பாக நடந்த விவாதத்தில் ரஜினி குறித்து பேசப்பட்ட போது பா. ரஞ்சித் செய்த செயல் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. அண்மையில் ரஞ்சித் அரசியல் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, பா.ரஞ்சித் அருகில் இருந்து பேசிய ஒருவர், "நீங்கள் உங்கள் அரசியலை ரஜினி வாயிலாகவே சொல்லி விட்டீர்கள். அவருக்கு நீங்கள் பேசும் அரசியல் புரிந்ததா? இல்லையா என்று கூட எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.
இதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்து கைத்தட்டினார்கள். அதே சமயம், ரஞ்சித்தும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவர்களுடன் இணைந்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பகிர்ந்து வரும் ரஜினியின் ரசிகர்கள் ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பத்திற்கு ரஞ்சித் பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட வேண்டும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், #நன்றிகெட்ட_ரஞ்சித் என்கிற ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்தை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
I am boycotting all Pa.Ranjith @beemji movie until he apologizes and give a clear statement on Thalaivar’s gratitude towards him. Period.
— Senthil Kumar (@Senthil_Dhana) April 13, 2024
If he feels for the pain of suppressed then it is no less pain for a Rajini fan on his act.😠#நன்றிகெட்ட_ரஞ்சித்pic.twitter.com/wRoRCYex1g
எல்லாரையும் மகிழ வைத்து பயணிக்க விட்டாலும் , காய படுத்தாமல் பயணி .
— 🔥தீ🔥 (@RajiniGuruRG) April 13, 2024
காலை வணக்கம் தலைவா 🙏#SuperstarRajinikanth#நன்றிகெட்ட_ரஞ்சித்pic.twitter.com/J9FSrPbRP0
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.