சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இந்த ஒரு வார்த்தையே போதும், வெண்கிரையில் ஆர்ப்பரிக்கும் ரசிகர் பட்டாளம் கண்முன் வந்து நிற்கும். ஸ்ரீ வித்யா முதல் நயன்தாரா வரை பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்று கேட்டபோது, அவர் அளித்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
"ஃபடாஃபட் ஜெயலட்சுமி மிகச் சிறந்த நடிகை. நாங்கள் ஒரு சில படங்களில் மட்டுமே இணைந்து நடித்தோம், ஆனால் அவர் மிகச் சிறப்பாக நடித்தார்," என்றார் ரஜினி.
Advertisment
முள்ளும் மலரும்
ஜே. மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான காலத்தால் அழியாத படைப்பான 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் ரஜினிகாந்தும், ஃபடாஃபட் ஜெயலட்சுமியும் இணைந்து நடித்தனர். இன்றும் ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய சிறந்த படங்களில் ஒன்றாக இந்தப் படம் கருதப்படுகிறது.
Advertisment
Advertisements
ஜெயலட்சுமி, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஒரு பாடலில் 'ஃபடாஃபட்' என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால், 'ஃபடாஃபட்' என்ற புனைப்பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் ஜெயலட்சுமி. குறுகிய காலத்திலேயே தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
ஃபாடாஃபட் ஜெயலட்சுமி எம்.ஜி.ஆரின் அண்ணனான எம்.ஜி. சக்கரபாணியின் மகன் எம்.சி. சுகுமாரை காதலித்து வந்தார். தனது உழைப்பால் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் தனது காதலருக்காக செலவழித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு கட்டத்தில் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், காதல் தோல்வியால் ஜெயலட்சுமி மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகழின் உச்சியில் இருந்த ஃபாடாஃபட் ஜெயலட்சுமி, தனது 22 ஆவது வயதிலேயே 1980 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ஒரு நம்பிக்கைக்குரிய கலைப்பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.
குறுகிய காலமே திரையுலகில் இருந்தாலும், ஃபாடாஃபட் ஜெயலட்சுமியின் தனித்துவமான நடிப்புத் திறமையும், அவர் ஏற்படுத்திய தாக்கமும் இன்றும் நினைவுகூரப்படுகிறது.