New Update
00:00
/ 00:00
கடந்த ஆண்டு ஜெயிலர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த நடிகரு ரஜினிகாந்த் அடுத்து, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுளள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா, குடியரசு தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினர்களுடன் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது. 0
இந்த வீடியோவில், ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்தின் மூத்த மகனான வேத், 1995 ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தில், படத்தில் வரும் “ஸ்டைல் ஸ்டைல் தான்” பாடலை ரசித்து கேட்டதோடு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் மாதிரியே ஸ்டைலாக வணக்கம் கூறியுள்ளார். ஒரு முறை அல்ல, மூன்று முறை அதே பாணியல் அவர் வணக்கம் சொன்னது கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "விஜய் என் கண் முன்னாலேயே வளர்ந்தார் என்று சொல்லிவிட்டு, பழைய படம் ஒன்றின் படப்பிடிப்பை விஜய் வீட்டில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், “தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது அவருக்கு வயது 13, மாடியில் இருந்து என்னைப் பார்த்தார். ஷூட்டிங் முடிந்ததும் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், முதலில் விஜயை படிப்பில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள் என்று கேட்டார். பள்ளிப் படிப்பை முடிக்குமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன் என்று கூறியிருந்தார்.
4th generation fan #Thalaivar #Rajinikanth #LalSalaamAudioLaunch pic.twitter.com/5FSDNwxijq
— Thalaivar Designers Team ᴶᴬᴵᴸᴱᴿ (@TDT_RajiniEdits) January 26, 2024
இதற்கிடையில், நிகழச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது தந்தை எல்லோரும் நினைப்பது போல் “சங்கி” இல்லை. "அவர் ஒரு சங்கியாக இருந்தால், அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார் என்று கூறினார். ஆனால், சென்னை விமான நிலையத்தில் இது குறித்து பதில் அளித்த ரஜினிகாந்த், “சங்கியை கெட்ட வார்த்தை என்று எங்கும் சொல்லவில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லால் சலாம் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.